BREAKING NEWS
latest

Kuwait Paci - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Paci செய்திகள், கட்டுரைகள், Kuwait Paci புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, June 25, 2019

குவைத்தில் சிவில் ஐடியில் பெயர் திருத்தம் செய்வதை சிவில் ஐடி அலுவலகம் (PACI) நிறுத்தியது:


குவைத்தில் சிவில் ஐடியில் பெயர் திருத்தம் செய்வதை சிவில் ஐடி அலுவலகம் (PACI) நிறுத்தியது:

         குவைத் உள்துறை அமைச்சகம் உத்தரவின்படி புதிதாக வழங்கப்படும் சிவில் ஐடியில் உள்ள பெயர் மற்றும் பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட விபரங்களில் ஏற்படும் பிழைகளை திருத்தம் செய்யும் சேவையை Public Authority for Civil Information (PACI) நிறுத்திக்கொண்டது என்று குவைத் பத்திரிக்கை அல்-குபாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
              இனிமுதல் உங்கள் சிவில் ஐடியில் உள்ள பிழைகளை ஆன்லைன் மூலம் திருத்தலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்று மேலும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய விசா அடித்து  சிவில் ஐடியை நீங்கள் சிவில் ஐடி அலுவலகம் சென்று எடுத்த பிறகு அதில் தவறுகள் இருந்தால் பிழையை திருத்தி புதிய சிவில் ஐடி எடுக்க கட்டணம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
              குவைத்தில் உள்ள 6 Governorates (மாகாணங்கள்) உள்ள Immigration Departments (Computer Department) குடிநுழைவு துறை அலுவலர்களில் இந்த திருத்தம் தொடர்பான சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
          நீங்கள் உங்கள் சிவில் ஐடியில் உள்ள பிழைகளை திருத்தங்கள் செய்ய குவைத் அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான
இந்த link-ஐ அழுத்தவும்
         தொடர்பு ஆங்கில மொழி தேர்வு செய்து அதில் கேட்கப்படும் உங்களை பற்றி சில தகவல்களை பதிவு செய்து உள்ளே நுழைந்து திருத்தங்களை செய்ய விண்ணப்பிக்க முடியும்.

https://e-envelope.paci.gov.kw/

Reporting by Kuwait tamil pasanga team

Add your comments to Search results for Kuwait Paci

Friday, October 20, 2023

குவைத்தில் சிவில் ஐடி பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நபர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்

குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது

Image : Civil Id Office

குவைத்தில் சிவில் ஐடி பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நபர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்

குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக புதிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதற்காக ஏற்கனவே 5 தினார் கட்டணம் செலுத்தியவர்கள், புதிதாக மீண்டும் விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. சிவில் கார்டு வழங்குவதற்கு முன்பு செலுத்தப்பட்ட 5 தினார் கட்டணம் அவர்கள் பெயரில் ரசீது பதிவு செய்யப்படும்.

இந்த தகவலை சிவில் தகவல் ஆணைய பதிவு விவகார துணை இயக்குநர் ஜெனரல் ஜாபர் அல்-கந்தாரி தெளிவுபடுத்தினார். இந்தத் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அட்டை வழங்கல் விரைவுபடுத்தும் நோக்கில் இதை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். பெரும்பாலான புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிவில் ஐடி கார்டுகளை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்க முடிகிறது எனவும், மே 23க்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 200,000 சிவில் ஐடி அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளன,இதில் எத்தனை நபர்கள் தற்போதைய நிலையில் விண்ணப்பித்த சிவில் ஐடி அட்டைகளை பெறுவார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் இவ்வளவு விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி அட்டை வழங்குவதில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையிலேயே இந்தத் தேதிக்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான சிவில் ஐடி விநியோகம் நிறுத்தப்பட்டு,புதிய விண்ணப்பத்தை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Id | Kuwait Paci | Civil Id

Add your comments to Search results for Kuwait Paci

Monday, August 12, 2019

குவைத்தில் சிவில் ஐடி பிழை திருத்தங்கள் உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் ஆகஸ்டு 14-ற்கு பிறகு மட்டுமே மீண்டும் செய்ய முடியும்:


குவைத்தில் சிவில் ஐடி பிழை திருத்தங்கள் உள்ளிட்ட பல ஆன்லைன் சேவைகள் ஆகஸ்டு 14-ற்கு பிறகு மட்டுமே மீண்டும் செய்ய முடியும்:

குவைத்தின் Public Authority for Civil Information (PACI) எனப்படும் உள்துறை அமைச்சகத்தின் கீழு இயங்கி வரும் சிவில் ஐடி அலுவலகங்கள் வழியாக வழங்கப்பட்டு வருகிற சிவில் ஐடி சம்மந்தப்பட்ட கணினி தானியங்கி சேவைகள் உள்ளிட்ட பல சேவைகள் ஒரு வாரத்திற்கு பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.
எனவே வருகின்ற ஆகஸ்டு 14 வரையில் இந்த ஆன்லைன் சேவைகள் பெறமுடியாது. 

எனவே ஆகஸ்டு 14 ற்கு பிறகு மீண்டும்
சேவைகள் செயல்பாட்டிற்கு வரும் என்றும் குவைத்தின் பிரபல தினசரி பத்திரிகை Al-Qabas செய்தி வெளியிட்டுள்ளது.இந்த தற்காலிக தடைமூலம் பிறப்பு தேதி திருத்தங்கள்,விசா புதிதாக அடித்துள்ள குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் யாரும் புதிய சிவில் ஐடியை புதுப்பித்தல் செய்யும்  தானியங்கி சேவையை இந்த நாட்களில் பெற முடியாது.

மேலும் புதிதாக பெறப்பட்ட சிவில் ஐடியில் பெயரில் பலருக்கும் பிழை ஏற்பட்ட வண்ணம் உள்ளது.இந்த பெயர் திருத்தம் ஆன்லைன் சேவையும் மேற்குறிப்பிட்ட நாட்களில் பெற முடியாது. இதுதவிர
வீட்டுத் தொழிலாளர்கள் விசா தொடர்பான ஆன்லைன் பதிவுகள் மற்றும் குடும்ப விசா
(dependent visa) உள்ளிட்ட ஆன்லைன் சேவையும் இந்த நாட்களில் பெற முடியாது என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reporting by Kuwait tamil pasanga Team

News Don't copy without page Team permission 

Add your comments to Search results for Kuwait Paci

Monday, August 19, 2019

குவைத் மக்கள் தொகை அடுத்த ஆண்டு 50 லட்சத்தை கடக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது:

குவைத் மக்கள் தொகை அடுத்த ஆண்டு 50 லட்சத்தை கடக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது:

குவைத்தின் PACI( Public Authority for Civil Information) இது குறித்து புள்ளிவிவரங்கள்
வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 17 வரையில் உள்ள கணக்குப்படி குவைத்தின் மொத்த மக்கள் தொகை 48,29,507 பேர் ஆவார்கள். இதில் 14,19,355 மட்டுமே குவைத் குடிமக்கள், மீதி 34,10,112 பேர் வேலை வாய்ப்புகள் அடிப்படையில் குவைத்தில் தங்கியிருந்த வேலை செய்யும்  இந்தியா,இலங்கை, பிலிப்பைன்ஸ், எகிப்து, வங்காளதேசம், பாகிஸ்தான், உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஆவார்கள்.

மேலும்  சதவீதம் அடிப்படையில் 29 % சதவீதம் மட்டுமே குவைத் குடிமக்கள் ,71% சதவீதம் பேர் வெளிநாட்டினர். 1961 யில் குவைத்திற்கு சுதந்திரம் கிடைக்கும் போது மக்கள் தொகை வெறும் 3 லட்சம் மட்டுமே. வெளிநாட்டு தொழிலாளர்களில் தற்போது வரையில் தொடர்ந்து இந்தியர்கள் முதலிடத்தில்
உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 Reporting by Kuwait tamil pasanga Team


Add your comments to Search results for Kuwait Paci

Wednesday, March 17, 2021

குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்ப பயணிகள் விமான நிலையம் செல்வதில் எந்த பிரச்சனை இல்லை

குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்ப பயணிகள் விமான நிலையம் செல்வதில் எந்த பிரச்சனை இல்லை;முன்கூட்டியே விமான நிலையம் சென்று காத்திருக்க தேவையில்லை

Image : Kuwait Police Checking

குவைத்தில் ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்ப பயணிகள் விமான நிலையம் செல்வதில் எந்த பிரச்சனை இல்லை

குவைத்தில் தற்போது பகுதிநேர ஊரடங்கு மாலை 05:00 pm அதிகாலை 05:00 am வரை நடைமுறையில் உள்ளது அனைவரு‌ம் அறிந்ததை,ஆனால் இந்த ஊரடங்கு நேரத்தில் தாயகம் திரும்புவதற்கான குவைத் சர்வதேச விமான நிலையம் செல்லும் நபர்களுக்கு ஊரடங்கு மூலம் எந்த பிரச்சினையும், ஆனால் இந்த நேரத்தில் விமான நிலையம் செல்லும் பயணிகள் உங்களின் விமான பயணச்சீட்டு நகல்களை எடுத்து கைவசம் வைத்திருங்கள் சோதனைச் சாவடிகளில் அதிகாரிகள் சோதனையின் போது விமான பயணச்சீட்டை காட்ட வேண்டும், ஊரடங்குக்கு முன்பாக முன்கூட்டியே விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை,மேலும் உங்களின் விமான பயணச்சீட்டின் இன்னோரு நகலை உங்கள் ஓட்டுநரிடம் கொடுங்கள், இதனால் அவர் எந்த பிரச்சினையும் இல்லாமல் விமான நிலையத்தில் இருந்து திரும்பி வரலாம். பலருக்கும் உள்ள இந்த சந்தேகத்தில் இப்போது தெளிவு வந்திருக்கும் என்று நம்புகின்றேன்.

மேலும் தாயகம் செல்லும் நேரத்தில் விமான நிலையங்களில்(குவைத் மற்றும் இந்தியாவில்) சமர்ப்பிக்க வேண்டிய 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கவேண்டிய பி.சி.ஆர் பரிசோதனை ஊரடங்கு இல்லாத பகல் நேரங்களில் மருத்துவமனைக்கு சென்று எடுங்கள். அதுபோல் திடிரென ஏற்படும முதலுதவி(First aid), உடல் பரிசோதனை(Medical checkup), குருதித்தானம்(Blood donation),கொரோனா பரிசோதனை மாதிரி வழங்குதல் அல்லது தடுப்பூசி எடுப்பதற்காக( Covid-19 swab or getting vaccinated against Covid-19) ஆகிய 5 பிரிவுகளில் உள்ள நபர்களுக்கு ஊரடங்கு நேரத்தில் அதிகபட்சமாக 2 மணிநேரம் வரையில் வெளியை செல்ல அனுமதி வழங்கபடும்.உங்கள் பெயர்,சிவில் ஐடி எண்,வாகன எண்,செல்லும் இடம்(Location) உள்ளிட்ட அடிப்படையான தகவல்களை கொடுத்து பதிவு செய்ய அனுமதி பெறலாம். ஆனால் இந்த அவசரகால தேவைக்காக அனுமதியை தவறான வழியில் பயன்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும் என்பது குறி்ப்பிடத்தக்கது. அனுமதி பெற பதிவு செய்ய வேண்டிய அதிகாரப்பூர்வ தளத்தின் Link : https://curfew.paci.gov.kw/request/create

Add your comments to Search results for Kuwait Paci