குவைத்தின் சிறந்த அதிகாரியும் இந்திய சமூகத்தினருடன் நெருக்கம் பேணிவந்த நபருமான காலித் அல்-ஜரல்லா காலமானார்
Image : காலித் அல்-ஜரல்லா அவர்கள்
குவைத்தின் முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காலித் அல்-ஜரல்லா காலமானார்
குவைத்தின் சிறந்த அதிகாரியும் மற்றும் முன்னாள் வெளியுறவு இணை அமைச்சருமான காலித் அல்-ஜரல்லா(வயது-78) அவர்கள் இரவு காலமானார். அவர் 1971 ஆம் ஆண்டு குவைத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்ற பிறகு, அதே ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தில் வேலைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் பல்வேறு வெளியுறவுத்துறை பதவிகளை வகித்ததை தொடந்து, 1999 இல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அமைச்சர் ஆவதற்கு முன்னதாக 1972 முதல் 1974 வரை லெபனானுக்கான குவைத்தின் தூதராகவும் அவர் பணியாற்றினார். பின்னர் குவைத்துக்குத் திரும்பிய பிறகு, வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார். அவர் 1974 முதல் 1987 வரை அரபு விவகாரப் பிரிவின் தலைவராக பதவி வகித்தார். 1987 ஆம் ஆண்டில் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் விவகாரங்களுக்கான துறையின் அதிகாரியாக பொறுப்பேற்றார்.
1999 ஆம் ஆண்டு வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஜனவரி 2021 இறுதியில் அமைச்சர் பதவியில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்துடனும், இந்திய தூதரகத்துடனும் அவர் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த சிறந்த நபர் என்பது அமைப்புகளில் இயங்கி வருகின்ற இந்தியர்களுக்கு நன்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்
Foreign Minister | Indian Community | Kuwait Minister