BREAKING NEWS
latest

Friday, February 9, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(09/02/24) வெள்ளிக்கிழ‌மை தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.70 KD
  2. 22K= 19.60 KD 
  3. 21K= 18.71 KD 
  4. 18K= 16.04 KD 

 (பதிவு மதியம் 12:15 PMமணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத்தின் இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகளை இங்கே அறியலாம்

Image : குவைத் தினாரின இன்றைய Exchange மதிப்பு  பதிவு புகைப்படம்

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(09/02/24)  வெள்ளிக்கழமை  இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 269.034
  • இலங்கை 1KD = 1012.146
  • நேபாளம் 1KD = 429.185
  • பிலிப்பைன்ஸ் 1KD = 180.603
  • பாகிஸ்தான் 1KD = 904.159

(பதிவு மதியம் 02:00 PM நிலவரப்படி மற்றும் சில நேரம் Exchange நிறுவனங்களை பொறுத்து இங்கு குறிப்பிட்டுள்ள மதிப்பில் சிறிய மாற்றங்கள் வரலாம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Exchange | Dinar Rate | Daily Update

Add your comments to

குவைத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வானிலையில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்பட்டு இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வானிலையில் பயங்கரமான மாற்றங்கள் ஏற்பட்டு இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புள்ளதாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(09/02/24) வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 23°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 06-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று தென்கிழக்கு திசையில் இருந்து மணிக்கு 06-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேகங்கள் படிப்படியாக அதிகரிக்கும் மற்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குவைத் வானிலை வரைபடங்களின் சமீபத்திய கணிப்புகள், வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளில் குளிர் மற்றும் ஆழமான காற்றழுத்தத்துடன் ஒரே நேரத்தில் மேலோட்டமான காற்றழுத்தத்தின் நீடிப்பால் நாடு வரும் நாட்களில் மழை உள்ளிட்ட காரணிகளால் பாதிக்கப்படும் என்பதைக் குறிக்கிறது, இது சனிக்கிழமை பிற்பகல் தொடங்கி, பெருக்கத்திற்கு வழிவகுக்கும். குறைந்த மற்றும் நடுத்தர மேகங்கள், குமுலோனிம்பஸ் மேகங்கள் மற்றும் லேசானது முதல் மிதமான தீவிரம் கொண்ட மழை, மற்றும் நிலையற்ற வானிலை சனிகிழமை மாலை தொடங்குகிறது.

ஞாயிற்றுக்கிழமை, மழைக்கான வாய்ப்பு படிப்படியாக அதிகரித்து இடியுடன் இருக்கும், மேலும் அவற்றின் தீவிரம் நடுத்தரத்திலிருந்து கனமாக மாறுபடும் வாய்ப்புகளுடன் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பொழியவும் வாய்ப்புள்ளதாகவும், தென்கிழக்கு காற்றுடன், மணிக்கு 60 கிமீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில் வீசும், இது தூசியைக் கிளறி, கிடைமட்ட பார்வையை குறைக்கிறது. சில பகுதிகளில் கடல் அலைகள் 7 அடிக்கு மேல் எழும்பும்.

மேலும் படிப்படியான வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மேகங்கள் குறைந்து திங்கள்கிழமை நண்பகல் முதல் மழைக்கான வாய்ப்புகள் குறைகின்றன, காற்றின் முன்னேற்றம் மற்றும் இரவில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு, சில பகுதிகளில் கிடைமட்டத் தெரிவுநிலை குறைவதற்கு வழிவகுக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

நண்பருக்குக் கொடுப்பதற்காக என்று கூறி மாட்டிறைச்சியுடன் பார்சலில் கஞ்சவை வைத்து வெளிநாடு வாழ் இந்தியரே ஏமாற்றும் முயற்சி

குவைத்திற்கு விடுமுறை முடிந்து திரும்பிய நண்பரிடம் இறைச்சி என்ற போர்வையில் கஞ்சா கொடுத்து முயற்சி

Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

நண்பருக்குக் கொடுப்பதற்காக என்று கூறி மாட்டிறைச்சியுடன் பார்சலில் கஞ்சவை வைத்து வெளிநாடு வாழ் இந்தியரே ஏமாற்றும் முயற்சி

மாட்டிறைச்சி என்ற போர்வையில் குவைத் திரும்ப இருந்த வெளிநாட்டவரின் பயணப் பொதிகளில் கஞ்சாவை அனுப்ப முயற்சி. மலப்புரம் கொண்டோட்டி ஓமனூரை சேர்ந்த பைசல் என்பவரை ஏமாற்ற முயன்ற 2 பேர் வாழைக்காடு போலீசாரிடம் சிக்கினர்.

குவைத்தில் உள்ள ஹர்ஷாத் என்ற நபர் விடுமுறை முடிந்து திரும்பவிருந்த இவரிடம் மாட்டிறைச்சியை கொடுத்து அனுப்புமாறு கூறினார். மாட்டிறைச்சி போல் பாட்டிலில் இறைச்சியை நிரப்பி அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து வழங்கப்பட்டன. சந்தேகமடைந்த அவர் பொட்டலங்களை திறந்து பார்த்தபோது அது கஞ்சா என தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிபுராயா பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷமீம் மற்றும் அவரது உதவியாளர் ஃபீனு ஃபாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

தயவு செய்து விடுமுறை முடித்து அல்லது முதல் முறையாக வெளிநாடுகளுக்கு வரும் போது முடிந்த வரையில் நண்பர்களுக்கு, உறவுகளுக்கு என்று உங்களுக்கு தெரிந்த அல்லது இன்னொரு தெரிந்த நபர் சொன்னார் என்றோ யாரவது எதாவது கொடுத்து அனுப்ப முயன்றால் எதாவது காரணத்தை சொல்லி முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள் அல்லது யார் பொருள் தருகிறர்களோ அவர்கள் முன்னர் வைத்ததே அந்த திறந்தது முற்றிலுமாக பிரித்து சோதனை செய்யுங்கள்.

இந்த நபருக்கு அதிஷ்டம் இருந்தது பிரித்து பார்த்தார் தப்பித்து கொண்டார். இதுபோல் ஏமாற்றப்பட்ட விமான நிலையங்களில் பிடிபட்ட அப்பாவிகள் நூற்றுக்கணக்கான பேர் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் செய்யாத குற்றங்களுக்காக என்ன சொல்ல அவர்களின் தலைவிதி என்று தான் சொல்ல முடியும் எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் .

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Gulf Worker | Kuwait Airport | Gulf jail |

Add your comments to

Thursday, February 8, 2024

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(08/02/24) வியாழக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 23°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 08-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 08-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

Wednesday, February 7, 2024

சவுதி அரேபியாவில் தமிழ் மாணவர்களுக்கான கலை விழா விமர்ச்சையாக நடைபெ‌ற்றது

சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் தமிழ் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர் கலை விழாவை ரியாத் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது

Image : நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் விழா குழுவினர்

சவுதி அரேபியாவில் தமிழ் மாணவர்களுக்கான கலை விழா விமர்ச்சையாக நடைபெ‌ற்றது

ரியாத் தமிழ்ச் சங்கம் வருடந்தோறும் தமிழ் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கல்வி, விளையாட்டு, (கலை)தனித்திறன் போன்ற சாதனைகளை அங்கீகரிக்கும் பொருட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசளிப்பது வழக்கம். அந்த வரிசையில் இவ்வருடமும் ரியாத்தில் உள்ள 9 இந்திய பன்னாட்டுப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவ/மாணவிகள் பெருவாரியாகப் பங்கு கொண்ட மாணவர் கலைவிழா 2024 நிகழ்ச்சி, 02-02-2024 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் வெகுவிமர்சையாக துவங்கியது

முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலையிலும், இலங்கைத் தூதர் தலைமையிலும், இந்திய பன்னாட்டுப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடந்தேறியது. இதில் பல பன்னாட்டுப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வழக்கமான பேச்சு, இசை, நடனம், நடிப்பு மட்டுமின்றி, பாவனை நாடகம் (Mimes) குறும்படம் மற்றும் டிஜிட்டல் கலைகள் போன்ற புதுமையான திறமைகளையும் அரங்கேற்றி கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.

இக்கலை விழா தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைவடிவங்கள் மற்றும் பண்பாடு பற்றிய பெருமிதத்தையும் மாணவர்களிடையே சேர்த்தது என்றால் அது மிகை அல்ல. இவ்விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தங்களது குழந்தைகளின் திறமைகளை வெளிகாட்ட உதவுவதாகவும் உற்சாகப்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும், கடந்த வருடம் படிப்பு, தமிழ் மொழித்திறன், விளையாட்டு, மற்றும் தனித்திறமைகளில் சாதனை படைத்த மாணவர்களையும், சிறப்பாக சேவையாற்றி வரும் தமிழாசிரியர்களையும் கெளரவித்து விருதுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. வெற்றிவேல், சிறப்பு விருந்தினர் மேதகு திரு. பி.எம். அம்ஸா, விழா ஒருங்கிணைப்பாளர்கள் திரு. இம்தியாஸ், திரு. மதி சிறப்புரை வழங்கியதுடன் வருங்கால தலைமுறை தமிழ், தமிழர் நலன், கல்வி, கலைத்திறமையில் சிறந்து விளங்கவேண்டும் அது வாழ்க்கையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அறிவுறுத்தினார்கள். பெருவாரியாக, தமிழ் நெஞ்சங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வு ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திரு. ஷமீம் அவர்களின் நன்றியுரை, அதனை தொடர்ந்து நாட்டுப்பண்ணுடன் இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

Add your comments to

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(07/02/24) தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.60 KD
  2. 22K= 19.50 KD 
  3. 21K= 18.61 KD 
  4. 18K= 15.95 KD 

 (பதிவு மாலை 04:00 மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to

குவைத்தின் இன்றைய துல்லியமான Exchange மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத்தின் இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகளை இங்கே அறியலாம்

Image : குவைத் தினாரின புகைப்படங்கள்

குவைத்தின் இன்றைய துல்லியமான Exchange மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(07/02/24) இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 270.450
  • இலங்கை 1KD = 1018.00 
  • நேபாளம் 1KD = 432.750
  • பிலிப்பைன்ஸ் 1KD = 182.700
  • பாகிஸ்தான் 1KD = 909.400

(பதிவு மதியம் 01:30 PM நிலவரப்படி மற்றும் சில நேரம் Exchange நிறுவனங்களை பொறுத்து இங்கு குறிப்பிட்டுள்ள மதிப்பில் சிறிய மாற்றங்கள் வரலாம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Exchange | Dinar Rate | Daily Update

Add your comments to

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியின் கொடுமை தாங்க முடியாமல் படகில் தப்பித்த 3 தமிழர்கள் இந்தியா கடலோர காவல்படையிடம் சிக்கினர்

Image : கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகு

குவைத்தில் இருந்து 12 நாட்கள் கடல்வழியாக பயணம் செய்து அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர்

குவைத்தில் முதலாளியால் கடுமையான துன்புறுத்தலைத் தொடர்ந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த 3 பேர் முதலாளியின் படகுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றனர். நேற்று செவ்வாய்கிழமை(06/02/2024) மாலையில் ஆண்டனி, நிதிசோ டிட்டோ மற்றும் விஜய் ஆண்டனி என்ற 3 தமிழர்கள் கேட்வே ஆஃப் இந்தியா அருகே மும்பை காவல்துறையின் ரோந்துக் குழுவிடம் பிடிபட்டனர். இவர்கள் மூவரும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

இவர்கள் தற்போது கொலாபா காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மூவரும் குவைத்தில் உள்ள முதலாளியின் மீன்பிடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக தெரிவித்துள்ளனர். கடுமையான சித்திரவதை மற்றும் சுரண்டலை எதிர்கொள்ளவே வேறு வழியின்றி உயிரை காப்பாற்ற இப்படி செய்ய வேண்டியதாயிற்று என்றும், முதலாளியின் படகைத் திருடி இந்தியாவுக்குத் தப்பி வர வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு பல மாதங்களாக சம்பளம் தரவில்லை என்றும் பாஸ்போர்ட்டை முதலாளி தடுத்து வைத்துள்ளார் என்றும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். 12 நாட்களுக்குப் பிறகு அவர்கள் இந்தியக் கடற்கரை எல்லையை அடைந்துள்ளனர். உணவு தீர்ந்து போனதால் சுமார் 4 நாட்களாக உணவு எதுவும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். படகில் சந்தேகப்படும்படியான எதுவும் கிடைக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர் .

ஆனால், கடலோர கண்காணிப்புப் படையின் கண்ணில் படாமல் இவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த வழி குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் கடல் வழியாக தான் இந்தியாவுக்கு வந்து மும்பையில் தீவிரவாத தாக்குதலும் நடத்தினர். இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம் மிகப்பெரிய பாதுகாப்பு மீறலாக கருதப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fishing Workers | Kuwait Workers | India Gateway

Add your comments to

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(07/02/24) புதன்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 23°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 10-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்காங்கே மேகமூட்டம் சிதறி காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.