BREAKING NEWS
latest

Wednesday, October 2, 2024

சவுதியில் பயங்கரமான விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;20 பேர் வரையில் பலத்த காயமடைந்தனர்:

சவுதியின் தம்மாமில் குடியிருப்பு கட்டிடத்தில் சமையல் எரிவாயு வெடித்து சிதறியதில் பயங்கரமான விபத்து

Image : பலத்த சேதமடைந்தன குடியிருப்பு

சவுதியில் பயங்கரமான விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்;20 பேர் வரையில் பலத்த காயமடைந்தனர்:

சவுதியின் தம்மாமில் குடியிருப்பு கட்டிடத்தில் சமையல் எரிவாயு வெடித்து சிதறியதில் பயங்கரமான விபத்து ஏற்பட்டது. மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் 20 பேர் வரையில் காயமடைந்தனர். இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அந்த செய்தியில் நேற்று(01/10/24) செவ்வாய்க்கிழமை காலை தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனை அருகே அல்நாகீல் பகுதியில் சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டது எனவும், குடியிருப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இந்த விபத்து நடந்ததாகவும், இந்த பயங்கரமான சிலிண்டர் வெடிப்பில் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்ததுடன், தீ மளமளவென பரவியது எனவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட 20 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என இதுவரை அடையாளம் காணப்படவில்லை. சுமார் 10 குழு தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் எனவும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Fire Accident | Three Died

Add your comments to

Tuesday, September 24, 2024

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது

Image : புதிய கட்டணம் வசூலிக்கப்பட்ட ரசீது

குவைத்திற்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

குவைத்துக்கான விசா ஸ்டாம்பிங் செயல்முறைக்கு முன்னால் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை கட்டணம் 7500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது 4500 ஆக இருந்தது. புதிய கட்டணம் கடந்த வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. மேலும் கடந்த வாரம் முதல் மருத்துவ பரிசோதனை செய்தவர்களிடம் இருந்து புதிய கட்டணத்தின்படி தொகை வசூலிக்கப்பட்டு வருகின்றன.

குவைத் சட்டப்படி கட்டணத்தை உயர்த்தும் போது குவைத் வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதல் கட்டாயம் என்பது விதிமுறை ஆகும். ஆனால் அமைச்சகம் அப்படியொரு புதிய கட்டண உயர்வு தொடர்பான முடிவை எடுத்ததாக தெரியவில்லை. குவைத்துக்கு விசா ஸ்டாம்பிங் செய்வதற்கு முன் நாட்டில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படும் 70 சதவீதம் பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக பரவலான புகார்களும் நிலுவையில் உள்ளன.

இதில் முறைகேடுகள் நடந்து வருவதாகவும் புகார் எழுந்த வண்ணம் உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள சில மருத்துவ பரிசோதனை மையங்கள் இப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு சட்டவிரோதமாக 35,000 முதல் 70,000 வரையில் வாங்கி கொண்டு மருத்துவ தகுதி சான்றிதழ்களை வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படும் நபர்கள் முன்கூட்டி கட்டணம் செலுத்தினாலும், அதில் குறிப்பிட்ட சதவீதம் தொகையாவது திரும்ப வழங்கும் நடைமுறையும் பின்பற்றப்படுவது இல்லை, இதற்கிடையே இந்த மருத்துவ சோதனைக்கட்டணம் மீண்டும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைகுறித்து குவைத்தில் உள்ள இந்திய அமைப்புகள் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | New Fees

Add your comments to

Wednesday, September 18, 2024

25 தினார் அபராதம் விதிக்கப்படும் விதிமீறல் நடந்த இடத்தை பொறுத்து சிறை தண்டனைக்கும் வாய்ப்பு

குவைத்தில் உள்ள ஓட்டுநர் இனிமுதல் இதை செய்தால் 25 தினார் அபராதம் சிறை தண்டனையும் கிடைக்கும்

Image : ஓட்டுநர் ஹாரனை அடிப்பது தவறானது

25 தினார் அபராதம் விதிக்கப்படும் விதிமீறல் நடந்த இடத்தை பொறுத்து சிறை தண்டனைக்கும் வாய்ப்பு

குவைத்தில் வாகனத்தில் உள்ள ஹாரனை தவறாக பயன்படுத்துவது போக்குவரத்து விதிமீறலாகும். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் பொதுப் போக்குவரத்துத்துறை, வாகன ஹாரன்களை தவறாகப் பயன்படுத்துவது போக்குவரத்து விதிமீறலாக அறிவித்துள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில் ஹார்னை தவறாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு 25 தினார் அபராதம் விதிக்கப்படும். அதேபோல் விதிமீறல் நடந்த இடத்தை பொறுத்து, விதிமீறல் போக்குவரத்து நீதிமன்றத்திற்குச் சென்றால், அது சிறைத் தண்டனைக்கும் வழிவகுக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல் விபத்துகளைத் தடுக்க மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து விழிப்புணர்வு பிரிவு உதவி இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா புஹாசன் தெளிவுபடுத்தினார். பிறரை அழைப்பது மற்றும் பிறரை வாழ்த்துவது போன்ற காரியங்களுக்கு ஹாரனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சில ஓட்டுநர்கள் குடியிருப்பு பகுதிகளில் ஹாரனை தவறாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு செய்வதால் முதியவர்கள், நோயாளிகள் உட்பட குடியிருப்பில் வசிக்கின்ற மக்கள் பெரிய அளவில் சிரமப்படுகின்றனர் என்பதும் துறையின் கவனத்துக்கு வந்துள்ளதாக வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Road | New Fine | New Rule

Add your comments to

Tuesday, September 17, 2024

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்தனர் நாட்டின் சட்டங்களுக்கு அனைவரும் சமமே

Image : அமீர், இளவரசர் மற்றும் பிரதமர்

பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை முடித்து முன்னுதாரணம் காட்டிய குவைத் அமீர் மற்றும் அரச குடும்பத்தினர்

குவைத் நாட்டின் சட்டங்கள் மற்றும் இறையாண்மை மேல் யாரும் பெரியவர்கள் இல்லை என்ற செய்தி ஒருமுறை கூட அமீர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா நாட்டு மக்களுக்கு காட்டும் விதமாக நாட்டின் அனைத்து குடிமக்களும் பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்க வேண்டும் என்று சட்டத்தின்படி இன்று பயான் அரண்மனையில் துணைப் பிரதமர், பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபஹத் அல் யூசுப் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள் முன்னிலையில் பயோமெட்ரிக் கைரேகை செயல்முறையை முடித்தார்.

இதேபோல் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா அவர்களும் மற்றும் நாட்டின் பிரதமர் ஷேக் அஹ்மத் அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபா அவர்களும் பயோமெட்ரிக் கைரேகை செயல் முறைகளை பயான் அரண்மனையில் வைத்து முடித்தனர்.

மேலும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இம்மாதம் 30ம் தேதிக்குள் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்கவும் மற்றும் டிசம்பர் 31ம் தேதிக்குள் நாட்டில் வசிக்கின்ற வெளிநாட்டினர் அனைவரும் பயோமெட்ரிக் நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Kuwait Update

Add your comments to

Monday, September 16, 2024

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தில் தின்னர் குடித்த வெளிநாட்டவரான தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜஹ்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Image: Kuwait Police

குவைத்தில் தொழிலாளி பெயின்ட் தின்னர் குடித்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

குவைத்தின் ஜஹ்ரா மருத்துவமனையில் தற்செயலாக பெயின்ட் தின்னரை குடித்ததாக வெளிநாட்டவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். வெளிநாட்டவர் மிகவும் ஆபத்தான நிலையில் கொண்டு வரப்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என்று மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருடன் வந்த வெளிநாட்டவரான நபர் கூற்றுப்படி இந்த சம்பவம் குவைத்தின் முட்டலா குடியிருப்பு பகுதி, N7, பிளாக் 3-இல் நடந்ததாக கூறினார். இது தற்செயலாக நடந்ததா இல்லை தற்கொலை முயற்சியா உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆனால் தொழிலாளி எந்த நாட்டவர் என்ற கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த சம்பவம் நபிதின விடுமுறை நாளான நேற்று(15/09/24) ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital

Add your comments to

Saturday, September 14, 2024

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,அரசர் குடும்பத்தினருமான ஷேக் ஜாபர் அல்-முபாரக் இன்று காலமானார்

Image : மறைந்த ஷேக் ஜாபர் அல்-முபாரக்

குவைத்தின் முன்னாள் பிரதமரும்,ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று காலமானார்

குவைத்தின் முன்னாள் பிரதமரும், ஆளும் அரசர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினருமான ஷேக் ஜாபர் முபாரக் அல் ஹமத் அல் முபாரக் அல் சபா இன்று(14/09/2024) சனிக்கிழமை தன்னுடைய 82-வது வயதில் காலமானார். கடந்த நவம்பர்-28,2011 முதல் 2019 வரை 8 ஆண்டுகள் குவைத்தின் பிரதமராக இருந்த அவர், ஜனவரி-4,1942 இல் பிறந்தார்.

1968 முதல் அமிரி திவானில் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களின் கண்காணிப்பாளர் நிர்வாக இயக்குனர் பதவிகள் வகித்த அவர். மார்ச் 1979 இல் நாட்டின் Hawally ஆளுநராக நியமிக்கப்பட்டார், தொடர்ந்து Ahamdi அஹ்மதி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் சமூக விவகாரங்கள், தொழிலாளர் துறை அமைச்சகம், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

பிப்ரவரி-14,2001அன்று ஷேக் ஜாபர் அல்-முபாரக் துணைப் பிரதமரும்,பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பிப்ரவரி-9,2006 அன்று முதல் துணை முதல்வராக பொறுப்பேற்றார். அத்துடன் உள்துறை, பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகளையும் கவனித்து வந்தார். 2019ல் பிரதமர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait King | Death Update

Add your comments to

செப்டம்பர்-1,2024 முதல் தொடங்கிய பொதுமன்னிப்ப வருகின்ற அக்டோபர்-31,2024 வரையில் தொடரும்

துபாய் Al Awir பொதுமன்னிப்பு மையம் மற்றும் அமர் மையங்கள் நபி தின தினத்தன்று இயங்காது

Image : பொதுமன்னிப்பு மையம்

செப்டம்பர்-1,2024 முதல் தொடங்கிய பொதுமன்னிப்ப வருகின்ற அக்டோபர்-31,2024 வரையில் தொடரும்

துபாய் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் இன்றி ஆவணங்களை சரி செய்து தொடர்ந்து நாட்டில் தங்கவும் அல்லது எந்த பயணத்தடையும் இன்றி தங்களுடைய நாடுகளுக்கு திரும்பி சென்று, மீண்டும் அமீரகம் திரும்பும் வகையில் பொதுமன்னிப்பு செப்டம்பர்-1,2024 முதல் தொடங்கியது. இது வருகின்ற அக்டோபர்-31,2024 வரையில் தொடரும். இதற்கிடையே தற்போது வரையில் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டினர் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்தி பலன் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் துபாய் Al Awir பொதுமன்னிப்பு மையம் மற்றும் அமர் மையங்கள் நபி தினத்தை நாளை(15/09/24) ஞாயிற்றுக்கிழமை இயங்காது என்று துபாய் குடிவரவு துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளை மறுநாள் திங்கட்கிழமை(16/09/2024) முதல் வழக்கம்போல் மையங்கள் தங்களுடைய சேவைகளை வழங்கும். இந்திய மொழிகள் உட்பட பல மொழிகளில் இதற்கான அறிவிப்பை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் சனி முதல் வியாழன் வரை காலை 08:00 முதல் இரவு 08:00 மணி வரையில் Al Awir மையங்கள் சேவை வழங்கி வருகின்றன. அதேநேரம் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:00 முதல் மாலை 04:00 மணிவரையில் சேவை வழங்கப்படாது. துபாயில் உள்ள 86 அமர் மையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலஅட்டவணை அடிப்படையில் இயங்கும் என்றும் அதிகாரிகள் விளக்கினர்.

இதற்கிடையே சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் உங்கள்ளுக்கு அமீரகத்தின் எந்த எமிரேட்டில் விசா வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து விசா Issue செய்த எமிரேட்டில் பொதுமன்னிப்புக்காக விண்ணப்பிக்க வேண்டும். அபராதம் இன்றி தாயகம் திரும்ப அனுமதி கிடைத்த நபர்கள், 14 நாட்களுக்குள் அமீரகத்தை விட்டு வெளியேற வேண்டும். அதேநேரம் செப்டம்பர்-1,2024 க்கு பிறகுள்ள ஏற்பட்டுள்ள விசா விதிமீறல்கள் பொதுமன்னிப்பு வரம்புக்குள் வராது எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Uae Amnesty | Illegal Immigrant | Uae Worker

Add your comments to