BREAKING NEWS
latest

Deport Kuwait - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Deport Kuwait செய்திகள், கட்டுரைகள், Deport Kuwait புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, January 3, 2023

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் ஒரு வருடத்தில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன

Image : காவல்துறை சோதனை

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் 2022 தொடக்கம் முதல் வருடம் முடியும் வரையிலான 12 மாதங்களுக்கு இடையில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 660 பேர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டனர். மீதமுள்ளவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், சண்டை தொடர்பான வழக்குகள், திருட்டு, மதுபானம் தயாரித்தல், விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த நபர்கள், தொழில் சட்டத்தை மீறிய நபர்கள், நாட்டின் பொது நலனுக்கு எதிராக செயல்பட்ட நபர்களுக்கு எதிரான பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் போன்றவை காரணமாகும்.

இந்த காலகட்டத்தில் நாடு கடத்தப்பட்ட மொத்த ஆண்களின் எண்ணிக்கை 17,000 ஆகும். இவர்களில் முதலிடத்தில் 6,400 இந்தியர்களான ஆண்கள், அடுத்த படியாக 3,500 பங்களாதேஷ் நாட்டினர், 3,000 எகிப்து நாட்டினர். மேலும் இதே காலகட்டத்தில் நாடு மொத்த பெண்களின் எண்ணிக்கை 13,000 ஆகும். இதில் முதலிடத்தில் 3,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், அடுத்தபடியாக 2,600 இலங்கையர்கள், 1,700 இந்தியா, 1400 பேர் எதியோப்பியா நாட்டவர்கள், இது தவிர குறைந்த எண்ணிக்கையிலான பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 30,000 பேர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deport Kuwait | Kuwait Police | Kuwait Worker

Add your comments to Search results for Deport Kuwait