BREAKING NEWS
latest

Kuwait Worker - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Worker செய்திகள், கட்டுரைகள், Kuwait Worker புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Friday, December 30, 2022

குவைத்தில் பெண் தன்னை கடத்தி கற்பழித்ததாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்:

குற்றவாளி காவ‌ல்துறை அதிகாரி என்று கூறி விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்வதாக கூறி கடத்தி இதை செய்ததாக தெரிவித்துள்ளார்

Image credit: Kuwait Police

குவைத்தில் பெண் தன்னை கடத்தி கற்பழித்ததாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்:

குவைத்தில் வெளிநாட்டை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குவைத் நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒருவரால் தான் கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தன்னை கடத்திய நபர் அவரிடம் தான் ஒரு துப்பறிவாளன்(காவ‌ல்துறை அதிகாரி) என்று கூறி அவரின் அடையாள அட்டையினை(சிவில் ஐடி) கேட்டுள்ளார்.

மேலும் அடையாள அட்டையினை சரிபார்த்த அவர் காவல்துறை மூலம் அந்த பெண்மணியை தேடிக்கோண்டு இருப்பதாகவும் காவல்நிலையம் அழைத்து செல்ல வாகனத்தில் ஏறும்படி கூறினான் எனவும், அதை நம்பி காவல்நிலையம் தான் அழைத்து செல்வதாக நம்பி ஏறியுள்ளார். ஆனால் அந்த நபர் அவரை (Fintas) பிண்டாஸில் உள்ள தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான், பிறகு அவன் பெண்மணியை அடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை சாலையில் வீசிவிட்டு தப்பியோடினார் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். இதையடுத்து கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய வழக்கு விசாரணை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது நம்முடைய கடமை எனவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர் இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

Kuwait Police | Kuwait Worker | Raped Worker

Add your comments to Search results for Kuwait Worker

Tuesday, January 3, 2023

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் ஒரு வருடத்தில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன

Image : காவல்துறை சோதனை

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் 2022 தொடக்கம் முதல் வருடம் முடியும் வரையிலான 12 மாதங்களுக்கு இடையில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 660 பேர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டனர். மீதமுள்ளவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், சண்டை தொடர்பான வழக்குகள், திருட்டு, மதுபானம் தயாரித்தல், விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த நபர்கள், தொழில் சட்டத்தை மீறிய நபர்கள், நாட்டின் பொது நலனுக்கு எதிராக செயல்பட்ட நபர்களுக்கு எதிரான பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் போன்றவை காரணமாகும்.

இந்த காலகட்டத்தில் நாடு கடத்தப்பட்ட மொத்த ஆண்களின் எண்ணிக்கை 17,000 ஆகும். இவர்களில் முதலிடத்தில் 6,400 இந்தியர்களான ஆண்கள், அடுத்த படியாக 3,500 பங்களாதேஷ் நாட்டினர், 3,000 எகிப்து நாட்டினர். மேலும் இதே காலகட்டத்தில் நாடு மொத்த பெண்களின் எண்ணிக்கை 13,000 ஆகும். இதில் முதலிடத்தில் 3,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், அடுத்தபடியாக 2,600 இலங்கையர்கள், 1,700 இந்தியா, 1400 பேர் எதியோப்பியா நாட்டவர்கள், இது தவிர குறைந்த எண்ணிக்கையிலான பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 30,000 பேர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deport Kuwait | Kuwait Police | Kuwait Worker

Add your comments to Search results for Kuwait Worker

Monday, January 18, 2021

குவைத்தில் இருந்து கடந்த 3 மாதங்களில் 83,000 தொழிலாளர்கள் தங்கள் விசாக்களை ரத்து செய்து வெளியேறி உள்ளனர்


(Kuwait International Airport)j

குவைத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களில் 83,000 வெளிநாட்டினர்கள் தங்கள் விசாக்களை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த தகவல் குவைத் மனிதவள மேம்பாட்டுக்கான குழு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கடந்த 2020,செப்டம்பர் முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்திற்கு இடையிலான நாட்களில் இவர்கள் வெளியேறியதாக தெரிகிறது. மேலும் இந்த காலகட்டத்தில் குவைத் அரசுத்துறையில் வேலை செய்துவந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் பல்வேறு அரசாங்க திட்டங்களில் வேலை செய்துவந்த 2144 வெளிநாட்டு தொழிலாளர்களின் விசாகள் ரத்து செய்யப்பட்டது.  மேலும் குவைத்தில் அரசு துறைகளான சுகாதார மற்றும் கல்வி துறைகளில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். புள்ளிவிபரங்களின்படி சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களாக 65% சதவீதம் வெளிநாட்டினர் சேவையாற்றி வருகின்றனர். 

இதுபோல் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தனியார் மயமாக்கப்பட்ட குவைத் ஏர்வேஸ், குவைத் உணவுப்பொருள் உற்பத்தி ஆலைகள் மற்றும் குவைத் பொதுப் போக்குவரத்து உள்ளிடவையிலும் வெளிநாட்டினர் வேலை செய்து வருகின்றனர்.இந்த காலகட்டத்தில் விடுத்தொழிலாளர் துறையில் வேலை செய்துவந்த சுமார் 7385 தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Kuwait Airport | Worker Left | Short Time

Add your comments to Search results for Kuwait Worker

Thursday, February 15, 2024

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தில் பாதுகாப்பை உறுதி செய்யாமல் வேலை செய்வாதல் விபத்துகளில் வெளிநாட்டு தொழிலாளர்கள பரிதாபமாக உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது

Image : மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள்

குவைத்தில் உழவு இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

குவைத்தின் வேலைக்காக வந்த 34-வயது இளைஞர் Barr Al-Salmi பகுதியில் வேலை செய்து வந்த நிலையில் நேற்று(14/02/24) புதன்கிழமை பிற்பகல் உழவு இயந்திரத்தில் சிக்கியதாக தகவல் கிடைத்து Al-Shaqaya மையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

உடனடியாக அவரை அந்த இயந்திரத்தில் இருந்து மீட்டு எடுத்த போதும் துரதிர்ஷ்டவசமாக உழவு இயந்திரத்தில் சிக்கியதில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பரிதாபமாக பலியானார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேலாதிக்க விசாரணை மற்றும் கூடுதல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழக்கு மாற்றப்பட்டது. உயிரிழந்தவர் நேபாள நாட்டை சேர்ந்தவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

எனவே தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து வேலைகளை செய்யுங்கள். நேற்று முந்தினம் 20-வயது தமிழக இளைஞர் பத்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த செய்திக்கு இடையில், இந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது.அதற்கும் இரு தினங்களுக்கு முன்பு வெவ்வேறான இரண்டு விபத்துகளில் 2 எகிப்து தொழிலாளர்கள் ஒரே நாளில் உயிரிழந்தது குறிப்படத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Nepalil Worker | Kuwait News | Gulf Worker

Add your comments to Search results for Kuwait Worker

Tuesday, November 12, 2024

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

குவைத்தில் விசா ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு போதைப்பொருள் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தமிழருக்கு தாயகம் திரும்ப வழி பிறந்துள்ளது

Image : குவைத் அமீர்

குவைத்தில் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் விடுதலை

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவியான இளைஞர் ஒருவர் ஆயுள் தண்டனை(வாழ்நாள் முழுவதும் சிறை) பெற்று குவைத்தில் சிறையில் இருந்தார். குவைத் அமீரின் கருணையால், ராஜராஜன் என்ற அந்த இளைஞர் சிறையில் இருந்து விடுதலை ஆக உள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. சுமார் 8 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, ராஜராஜன் நாடு திரும்ப உள்ளார். கடந்த அக்டோபர்-26,2016 அன்று,ஒரு முகவர் மூலம் ராஜராஜன் குவைத்தில் வேலைக்காக வந்தார்.

இது ராஜராஜனின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஆனால் குவைத்துக்கு வந்த அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ராஜராஜன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு, குவைத் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு வாரங்கள் வரை அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. இந்தியா, தமிழ்நாடு, திருச்சி ஸ்ரீரங்கம் அயிலப்பேட்டை வடக்கு தெருவில் வசிப்பவர் ராஜராஜன்.

தனது நண்பர் அப்துல்லா மூலம், குமரேசன் என்ற முகவர் வழியாக, ராஜராஜன் குவைத்துக்கு காதீம்(வீட்டு வேலை) விசாவை ஏற்பாடு செய்தார். அக்டோபர்-22, 2016 அன்று, குமரேசனுடன் குவைத் வருவதற்காக சென்னை வந்தார். பயணத்திற்கு முந்தைய நாள் குமரேசன் ராஜராஜனின் உடைமைகள் இருந்த பைகளுக்குப் பதிலாக புதிய பெட்டியில் பொருட்கள் நிரப்பப்பட்டு, அத்துடன் கைப்பையையும் வழங்கினார். இதுகுறித்து ராஜராஜன் சந்தேகம் தெரிவித்தபோது,பழைய பெட்டி மோசமாக இருக்கிறது, வெளிநாடு செல்கிறாயே எனவே புதிய பெட்டியை கொடுத்ததாக குமரேசன் பதிலளித்தார். இதை தொடர்ந்து கைப்பையைத் திறந்து பாஸ்போர்ட் மற்றும் டிக்கெட்டைக் காட்டினார்.

இதை தொடர்ந்து குமரேசன் ராஜராஜன் பொருட்கள் இருந்த பையில் ராஜராஜனின் உடைமைகள் தான் இருக்கிறது என்பதை லக்கேஜ் பையை திறந்து காட்ட தயாராக இருக்கவில்லை, இதற்க்கு அவர் கூறிய காரணம் விமானம் புறப்பட நேரமாகி விட்டதால் லக்கேஜ் பையைத் திறக்க நேரமில்லை என்று ராஜராஜனிடம் கூறினார். அன்று மாலையே ராஜராஜன் சென்னையில் இருந்து குவைத் திரும்பினார். மறுநாள் குவைத் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராஜராஜன் பெட்டியில் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு தான் நாட்டில் தான் கைது செய்யப்பட்டது தெரிந்தது. ராஜராஜனுக்கு என்ன நடந்தது என்றோ, எதற்காக அவரை போலீஸ் காவலில் எடுத்தார்கள் என்றோ புரியவில்லை. ராஜராஜனுக்கு விஷயங்கள் புரிய இரண்டு வாரங்கள் ஆனது. உடனே நாட்டில் உள்ள தன்னுடைய ஒரே தங்கையான அன்பரசியை அழைத்து தன் நிலையை விளக்கினார். குமரேசன் வீட்டிற்கு சென்றாள் ஆனால் அது பூட்டியிருந்தது. அவரது மாமா பழனியின் வீட்டிற்குமு தேடி சென்றார் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு குமரேசன் தான் காரணம் எனக் கூறி, நண்பர் அப்துல்லாவும் கைவிரித்தார்.ராஜராஜனின் சகோதரி அன்பரசி சென்னையில் உள்ள வீட்டுத் தொழிலாளர் நல அறக்கட்டளையை அணுகினார். அவர்களின் ஒத்துழைப்புடன், தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது சகோதரரின் விடுதலைக்காக குவைத் மனித உரிமைச் சங்கத்திடம் அவர் முறையிட்டார்.

தமிழக அரசின் துணைச் செயலாளர் செந்தில் குமார், குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை விடுத்தார். குவைத்துக்கான அப்போதைய இந்திய தூதர் ஜீவா சாகர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிடுமாறு முதன்மை செயலாளரும், சமூக நலத்துறை அதிகாரியுமான பி.பி.நாராயணனுக்கு உத்தரவிட்டார். பி.பி.நாராயணன் குவைத் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தொடர்புடைய குவைத் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ராஜராஜன் நிரபராதி என நம்ப வைக்க தேவையான முயற்சிகளை எடுத்தார். அதன் பலனாக, 2017ல், சிறைக் கைதிகளுக்கு அமீர் வழங்கிய தளர்வு பட்டியலில், ராஜராஜனும் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, ஆயுள் தண்டனையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்

மேலும் ராஜராஜன் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை அறிக்கைகளும், அவரது தண்டனையை படிப்படியாகக் குறைக்க வழிவகுத்தன.தற்போது அவரை நாட்டுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூதரகத்திலிருந்து அவுட்பாஸும் வழங்கப்பட்டது. கடந்த நாள், ராஜராஜன் நாட்டு கடத்தல் மையத்தில் இருந்து தனது சகோதரிக்கு போன் செய்து தான் வீடு திரும்ப தயாராகி வருவதாக தெரிவித்தார். விசாரணைகள் நிறைவடைந்த நிலையில்,எட்டு வருட சிறைவாசத்திற்குப் பிறகு குவைத் அமீரின் தயவில் ராஜராஜன் விரைவில் அடுத்த சில தினங்களில் தாயகம் திரும்புவார்.

குவைத்தில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் குற்றவாளிக்கு தண்டனைகள் பின்வருமாறு வழங்கபடும். இதன்படி போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வியாபாரிகள் அல்லது இடைத்தரகர்களுக்கு அதிகபட்ச தண்டனையை குவைத் நீதித்துறை வழங்குகிறது. மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை(வாழ்க்கையின் இறுதி வரை சிறையில்) , மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் வழங்கபடுகிறது. இந்த பட்டியலில் உள்ள வழக்கில் தான் சேர்க்கப்பட்டார் ராஜராஜனும். மேலும், போதை மருந்து பயன்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

ராஜராஜனை சிக்கவைத்த இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த முகவர் மீது எந்த வழக்கும் இல்லை, அதேபோல் முக்கிய குற்றவாளியான குமரேசன், அப்துல்லா மீதும் எந்த வழக்கு இல்லை. அண்ணனை பொய் வழக்கில் சிக்க வைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அன்பரசி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதிக செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குவைத் மனித உரிமைகள் சங்கத்தின் உறுப்பினரான ஆல்வின் ஜோஸ், டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் ஆன்லைனில் புகார் செய்தார், ஆனால் எந்த நடவடிக்கையும் இவர்கள் மீது இதுவரை எடுக்கப்படவில்லை. பிறகு எப்படி ஊரில் உள்ள இதுபோன்ற போலியான ஏஜென்சிகளை நடத்தும் நபர்களுக்கு எப்படி பயம் வரும். இப்படி சிக்க வைக்கின்ற தாயகத்தில் உள்ள நபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற சட்டவிரோதமான மனசாட்சியற்ற செயல்கள் ஓரளவாவது குறையும்.

ஒருவருக்கு மரணதண்டனை வரையில் கிடைக்கின்ற இதுபோன்ற செயல்களை செய்கின்ற நபர்களுக்கும் பாதிக்கப்படுகின்ற நபர்களுக்கு வ‌ளைகுடா நாடுகளில் வழங்குகின்ற அதே தண்டனையை தாயகத்தில் வழங்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரதும் வேண்டுகோளாக உள்ளளது. இதுபோன்ற வழக்குகளில் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள அப்பாவிகளான தன்னுடைய உடன் பிறப்புகளை சட்டபடி மீட்க புகார்களுடன் பலர் அணுகுகிறார்கள், ஆனால் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மத்திய அரசுகளால் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் இந்த விஷயத்தில் எடுப்பதில்லை, இது வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடு செல்பவர்களிடையே மிகுந்த கவலையை உருவாக்குகிறது. இதை மத்திய அரசு முறையாக பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Minister | Kuwait Emir | Indian Worker

Add your comments to Search results for Kuwait Worker

Sunday, February 4, 2024

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த மாரியப்பன்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இந்தியா, தமிழகம், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாகதேவியை அடுத்த சுண்ணாம்புக்கல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது-50). இவருடைய தந்தை பெயர் முத்தையா, இவர் குவைத்தின் எகேலா பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம்(02/02/2024) வெள்ளிக்கிழமை அன்று திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த தகவலறிந்த மக்கள் சேவை மைய அமைப்பு துரிதமாக செயல்பட்டு சட்ட நடவடிக்கைகளை முடித்தது. இதையடுத்து அன்னாரின் பூத உடல் இன்று(04/02/2024) இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறது. அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் இன்று மதியம் சரியாக 1 மணிக்கு குவைத்தின் சபா மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to Search results for Kuwait Worker

Monday, January 22, 2024

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த சாமுவேல்

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தின் Al-Zour சாலை‌யி‌ல் கட்டுமானத்தில் உள்ள ஒரு இடத்தில் இன்று(21/01/24) ஞாயிற்றுக்கிழமை மணல் சரிந்து இருவர் மண்ணில் புதைத்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த தேடல் மற்றும் மீட்பு மையங்களின் தீயணைப்புபடை வீரர்கள் துரிதமாக செயல்பட்டுஇடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு தொழிலாளர்களையும் வெளியே எடுத்தனர் .

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற புதிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதில் உயிரிழந்த இந்தியர் பெயர் சாமுவேல்(வயது-41) எனவும், தமிழகம், அறந்தாங்கி எனவும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மற்றவர் பெயர் திருஞானம் எனவும், அவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் தான் எ‌ன்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to Search results for Kuwait Worker

Sunday, October 29, 2023

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் நாட்டிற்கு வெளியே உள்ள வீட்டு தொழிலாளர்(வீட்டுப் பணியாளர்கள்) பிரிவை சேர்ந்த அனைவரின் பணி அனுமதியையும் 3 மாதங்களுக்குப் பிறகு, ஸ்பான்சர் ரத்து செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

Image : துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் உள்துறை அமைச்சகம் இன்று(29/10/23) ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் நாட்டிலிருந்து வெளியேறிய வீட்டுப் பணியாளரின்(Article-20) குடியிருப்பு அனுமதியை(விசாவை) 3 மாதங்களுக்குப் பிறகு ஒரு ஸ்பான்சர்(குவைத்தி) ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகின்ற நவம்பர்-5,2023 முதல் இது அமலுக்கு வரும் என்று முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் அஹ்மத் அல் சபாவை மேற்கோள்காட்டி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'SAHAL' செயலி மூலம் தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யலாம். அது முடியாவிட்டால், குடியிருப்பு விவகாரத் துறையின் அலுவலகம் ஒன்றுக்கு சென்று தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். விசா Validity உள்ள ஒரு தொழிலாளி நாட்டை விட்டு வெளியேறி 6 மாதங்களுக்குப் பிறகு குவைத்தில் நுழையத் தவறினால், தொழிலாளியின் குடியிருப்பு அனுமதி தானாக(Automatically) முன்வந்து ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த புதிய உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய உத்தரவு 6 மாத கால தாமதத்தை தவிர்க்க உதவும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதில் பிரச்சனை என்னவென்றால், பணம் கொடுத்து வெளியே விசா அடித்து சட்டவிரோதமாக(இப்படி செய்வது தொழில் சட்டவிரோதமான செயல்) ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் குவைத்தில் வேலை செய்து வருகி்ன்றனர். இந்த வகை விசா உள்ள நபர்கள் குவைத் விமான நிலையம் வழியாக தாயகம் செல்லும் போது சம்பந்தப்பட்ட ஸ்பான்சருக்கு(குவைத்திக்கு) குறுந்தகவல் போகும். புதிய உத்தரவை பயன்படுத்தி 90 நாட்களுக்குள் நீங்கள் திரும்பவில்லை என்றால் உங்கள் விசாவை ஸ்பான்சர் கேன்சல் செய்தால் யாரையும் கேள்வி கேட்க முடியாது.

எனவே இப்படிப்பட்ட நபர்கள் குவைத் திரும்பும் முன்னர் உங்கள் விசா Validity ஐ சோதனை செய்த பிறகு குவைத் திருப்புவது நல்லது. இல்லை என்றால் குவைத் விமான நிலையம் வரையில் வந்து குவைத்தில் நுழைய முடியாமல் மீண்டும் டிக்கெட் போட்டு தாயகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும்...இல்லை ஏற்படுகிறது. உங்களுக்கு இப்படி வெளியே விசா அடித்து தருகின்ற நபர்கள் இப்படி பலரை ஏமாற்றுகின்றனர். இதிலும் ஒருபடி மேலே சென்று உங்கள் மேல் வழக்கு பதிவும் செய்கின்றனர். அப்படிப்பட்ட நபர்கள் என்றால் கைது செய்து Finger வைத்தே அனுப்புவார்கள். பிறகு குவைத் வரவே முடியாது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Domestic Worker | Kuwait Visa | Visa Cancel

Add your comments to Search results for Kuwait Worker

Friday, February 9, 2024

நண்பருக்குக் கொடுப்பதற்காக என்று கூறி மாட்டிறைச்சியுடன் பார்சலில் கஞ்சவை வைத்து வெளிநாடு வாழ் இந்தியரே ஏமாற்றும் முயற்சி

குவைத்திற்கு விடுமுறை முடிந்து திரும்பிய நண்பரிடம் இறைச்சி என்ற போர்வையில் கஞ்சா கொடுத்து முயற்சி

Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

நண்பருக்குக் கொடுப்பதற்காக என்று கூறி மாட்டிறைச்சியுடன் பார்சலில் கஞ்சவை வைத்து வெளிநாடு வாழ் இந்தியரே ஏமாற்றும் முயற்சி

மாட்டிறைச்சி என்ற போர்வையில் குவைத் திரும்ப இருந்த வெளிநாட்டவரின் பயணப் பொதிகளில் கஞ்சாவை அனுப்ப முயற்சி. மலப்புரம் கொண்டோட்டி ஓமனூரை சேர்ந்த பைசல் என்பவரை ஏமாற்ற முயன்ற 2 பேர் வாழைக்காடு போலீசாரிடம் சிக்கினர்.

குவைத்தில் உள்ள ஹர்ஷாத் என்ற நபர் விடுமுறை முடிந்து திரும்பவிருந்த இவரிடம் மாட்டிறைச்சியை கொடுத்து அனுப்புமாறு கூறினார். மாட்டிறைச்சி போல் பாட்டிலில் இறைச்சியை நிரப்பி அதற்குள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து வழங்கப்பட்டன. சந்தேகமடைந்த அவர் பொட்டலங்களை திறந்து பார்த்தபோது அது கஞ்சா என தெரியவந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளிபுராயா பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஷமீம் மற்றும் அவரது உதவியாளர் ஃபீனு ஃபாசில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Image : பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

தயவு செய்து விடுமுறை முடித்து அல்லது முதல் முறையாக வெளிநாடுகளுக்கு வரும் போது முடிந்த வரையில் நண்பர்களுக்கு, உறவுகளுக்கு என்று உங்களுக்கு தெரிந்த அல்லது இன்னொரு தெரிந்த நபர் சொன்னார் என்றோ யாரவது எதாவது கொடுத்து அனுப்ப முயன்றால் எதாவது காரணத்தை சொல்லி முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள் அல்லது யார் பொருள் தருகிறர்களோ அவர்கள் முன்னர் வைத்ததே அந்த திறந்தது முற்றிலுமாக பிரித்து சோதனை செய்யுங்கள்.

இந்த நபருக்கு அதிஷ்டம் இருந்தது பிரித்து பார்த்தார் தப்பித்து கொண்டார். இதுபோல் ஏமாற்றப்பட்ட விமான நிலையங்களில் பிடிபட்ட அப்பாவிகள் நூற்றுக்கணக்கான பேர் வளைகுடா நாடுகளில் உள்ள பல்வேறு ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் செய்யாத குற்றங்களுக்காக என்ன சொல்ல அவர்களின் தலைவிதி என்று தான் சொல்ல முடியும் எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் .

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Gulf Worker | Kuwait Airport | Gulf jail |

Add your comments to Search results for Kuwait Worker

Friday, July 28, 2023

குவைத்தில் இறுதி நேரத்தில் தமிழரின் தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது:

குவைத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா, தமிழகத்தை சேர்ந்த அன்புதாசனின் தூக்குத்தண்டனை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது

Image : தண்டனை விதிக்கப்பட்ட அன்புதாசன்

குவைத்தில் இறுதி நேரத்தில் தமிழரின் தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது:

இந்திய தூதரகத்தின் தலையீட்டால் குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா, தமிழகத்தை சேர்ந்த அன்புதாசனுக்கு மன்னிப்பு கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குவைத்தில் நேற்று(28/07/23) வியாழக்கிழமை காலையில் குடிமகன், எகிப்து நாட்டவர், இலங்கை நாட்டவர் மற்றும் 2 பெதுனிகள்(குடிமக்கள் அல்லாதவர்) உட்பட 5 பேரின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. குவைத் நாட்டில் 2013, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட கொலை, தீவிரவாத செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு குற்றவாளிகளான 5 பேரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டனர்.

குவைத் மத்திய சிறையில் இவர்களின் தூக்கு தண்டனை நேற்று காலை 7:00 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. ஆனால் தூக்கிலிடப்பட உள்ளவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அன்புதாசன் நடேசனும் சேர்க்கப்பட்டு இருந்தார். 2015-ம் ஆண்டு இலங்கை பெண் கொலை வழக்கில் அன்புதாசன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மற்றவர்களுடன் சேர்ந்து அன்புதாசனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்த தூதரக ஊழியர்கள் அவரை நேரில் சந்தித்தபோது கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் குடும்பத்திடம் இரத்தப்பணம் செலுத்தி மன்னிப்பு கோரும் நடவடிக்கைகளை நாட்டில் குடும்பத்தினர் செய்து வருவதாக அவர் கூறுகிறார். ஆனால் குடும்பத்தினர் குவைத் அதிகாரிகளுக்கோ, இந்திய தூதரகத்திற்கோ அத்தகைய நடவடிக்கை குறித்து தெரிவிக்கவில்லை.

இதையறிந்த தூதரக அதிகாரிகள் உடனடியாக தொழிலாளர் துறை தலைவர் ஆனந்த சுப்ரமணிய அய்யருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தூதரக அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள அன்புதாஸின் சகோதரர் சங்கரன் நடேசனை தொடர்பு கொண்டனர். பிறகு இரத்தப்பணம் செலுத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் குடும்பத்தினர் பொதுமன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்த ஆவணங்களை பெற்றனர். தொடர்ந்து இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமையில், குவைத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க தூக்கு தண்டனையை காலதாமதம் செய்ய கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில், அன்புதாசின் தூக்கு தண்டனை கடைசி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னர் அன்புதாசன் உட்பட ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் இவர் உட்பட இருவரின் மரணதண்டனை நீட்டி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட மற்றொரு நபர் வங்காளதேச நாட்டவர் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Court | Indian Sentenced | Indian Worker

Add your comments to Search results for Kuwait Worker

Tuesday, December 13, 2022

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் பெற விண்ணப்பம் பெறப்படுகிறது

Image : செய்தி பதிவுக்காக மட்டுமே

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. குடும்ப விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதன் காரணமாக இப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் தாய்நாடுகளில் சிக்கிக்கொண்டனர். இப்படி குவைத்திற்கு வர முடியாமல் தவித்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் தினசரி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விசா வழங்குவது மீண்டும் துவங்கியது முதல் விசாவுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருந்தாலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளின் குடிமக்களும் இந்த விசா வழங்குவதற்கான முடிவைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப விசாக்கள் வழங்குவதை கடந்த நவம்பர்-20,2022 முதல் மீண்டும் தொடங்க அமைச்சகம் முடிவு செய்தது.

அதே நேரத்தில் மனைவி,5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இரத்த உறவுகளுக்கான குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் வழங்குவது மீண்டும் தொடங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kuwait Visa | Indian Worker | Family Visa

Add your comments to Search results for Kuwait Worker