குற்றவாளி காவல்துறை அதிகாரி என்று கூறி விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்வதாக கூறி கடத்தி இதை செய்ததாக தெரிவித்துள்ளார்
Image credit: Kuwait Police
குவைத்தில் பெண் தன்னை கடத்தி கற்பழித்ததாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்:
குவைத்தில் வெளிநாட்டை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குவைத் நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒருவரால் தான் கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தன்னை கடத்திய நபர் அவரிடம் தான் ஒரு துப்பறிவாளன்(காவல்துறை அதிகாரி) என்று கூறி அவரின் அடையாள அட்டையினை(சிவில் ஐடி) கேட்டுள்ளார்.
மேலும் அடையாள அட்டையினை சரிபார்த்த அவர் காவல்துறை மூலம் அந்த பெண்மணியை தேடிக்கோண்டு இருப்பதாகவும் காவல்நிலையம் அழைத்து செல்ல வாகனத்தில் ஏறும்படி கூறினான் எனவும், அதை நம்பி காவல்நிலையம் தான் அழைத்து செல்வதாக நம்பி ஏறியுள்ளார். ஆனால் அந்த நபர் அவரை (Fintas) பிண்டாஸில் உள்ள தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான், பிறகு அவன் பெண்மணியை அடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை சாலையில் வீசிவிட்டு தப்பியோடினார் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். இதையடுத்து கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய வழக்கு விசாரணை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது நம்முடைய கடமை எனவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர் இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.
Kuwait Police | Kuwait Worker | Raped Worker