BREAKING NEWS
latest

Dubai Airport - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Dubai Airport செய்திகள், கட்டுரைகள், Dubai Airport புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, March 29, 2021

அமீரகத்திற்கு பயணம் மற்றும் திரும்பும்போது உடன் எடுத்துச் செல்ல அனுமதியுள்ள பொருட்கள் என்னென்ன.....????

அமீரகத்திற்கு பயணம் மற்றும் திரும்பும்போது உடன் எடுத்துச் செல்ல அனுமதியுள்ள பொருட்கள் என்னென்ன என்பதை அமீரக மத்திய சுங்கத்துறை ஆணையம் பொதுமக்களுக்கு வெளியிட்டுள்ளது

Image credit:Dubai Airport

அமீரகத்திற்கு பயணம் மற்றும் திரும்பும்போது உடன் எடுத்துச் செல்ல அனுமதியுள்ள பொருட்கள் என்னென்ன.....????

ஐக்கிய அரபு எமிரேட்ஸட்-க்கும் மற்றும் திருப்பியும் பயணிப்பவர்களுக்கு சுங்க விதிகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமீரக மத்திய சுங்கத்துறை ஆணையம்(எஃப்.சி.ஏ) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நேற்று(28/03/21) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள் பட்டியலையும் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களின் விவரங்களை வெளியிட்டது. பலர் அறியாமையால் பாதிக்கப்படுவதை(வழக்குகளில் கைது ஆவதை) கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரபு,ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் இது தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு வீடியோவையும் அதிகாரிகள் வெளியிட்டனர்.

மூவி ப்ரொஜெக்டர்கள், ரேடியோ,சிடி பிளேயர்கள், டிஜிட்டல் கேமராக்கள், டி.வி மற்றும் ரிசீவர்கள்(ஒன்று), தனிநபர் விளையாட்டு உபகரணங்கள், சிறிய கணினிகள் மற்றும் அச்சுப்பொறிகள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான மருந்துகள்(கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு) ஆகியவை அனுமதிக்கப்பட்ட பொருட்களில் அடங்கும்.

பயணிகள் எடுத்துச்செல்லும் பரிசு பொருட்களின் மதிப்பு AED 3,000 ஐ தாண்டக்கூடாது. பொருட்களுடன் சேர்த்து அதிகபட்சம் 200 சிகரெட்டுகள் அனுமதிக்கப்படும். 18 வயதிற்குட்பட்ட பயணிகள் புகையிலை பொருட்கள் அல்லது ஆல்கஹால் கையில் எடுத்துச் செல்லக்கூடாது. அதுபோல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வந்து புறப்படும் பயணிகள் கையில் பரிசு பொருட்களின் மதிப்பு AED 3,000 க்கு அதிகமாக இருந்தலோ அல்லது 60,000 க்கும் மேற்பட்ட திர்ஹாம் மதிப்புள்ள நாணயம் அல்லது விலைமதிப்பு மிக்க உலோகங்கள்(தங்கம் இப்படிப்பட்ட எதாவது) அல்லது விலையுயர்ந்த கற்கள் இருந்தால் சிறப்பு படிவத்தில் அதன் விபரங்கள் நிரப்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தடை செய்யப்பட்டவையின் விபரங்கள் பின்வருமாறு;நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள மருந்துகள்(போதைப்பொருட்கள் உள்ளிடவை இதில் அடங்கும்) சூதாட்ட உபகரணங்கள், நைலான் மீன்பிடி வலைகள், பன்றிகள், தந்தங்கள், சிவப்பு விளக்குகள் கொண்ட லேசர் பேனாக்கள், கள்ளநோட்டு, அணு கதிர்வீச்சு உள்ள பொருட்கள், ஆபாச புத்தகங்கள் மற்றும் மதங்களை குறித்த அவதூறு பரப்பும் ஆவணங்கள், ஆபாச சிடி,வெற்றிலை உள்ளிட்ட சிவக்கக்கூடிய பொருட்கள் மற்றும் கற்சிலைகள் உள்ளிட்டவை அடங்கும்.

கட்டுபாடுகள் உள்ள சில பொருட்கள் அதிகாரிகளின் அனுமதியுடன் கொண்டு வரலாாம,அதன் விபரங்கள் பின்வருமாறு நேரடியாக விலங்குகள், தாவரங்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள், பட்டாசுகள், மருந்து, மருத்துவ உபகரணங்கள், நாவல்(வெளியீடுகள்), புதிய வாகன டயர்கள், வயர்லெஸ் உபகரணங்கள், ஆல்கஹால், அழகுசாதனப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், பாரம்பரியமாக கைவசம் உள்ள கற்கள் மற்றும் புகையிலையிலிருந்து தயாரிக்கப்படும் சிகரெட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.இதற்கு சம்பந்தப்பட்ட பல்வேறு அமைச்சகங்களின் ஒப்புதல் தேவை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் பின்வரும் அறிவிப்பை பின்பற்றிய பாதுகாப்பான மற்றும் தடையற்ற பயணத்தை பயணிகள் மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் அடுத்த(தெரியாத) நபர்கள் கைவசம் ஒப்படைக்கும் பொருட்கள் அடங்கிய பார்சல்களில் என்ன இருக்கிறது என்ற தெரியாமல் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். அதுபோல் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியாமல் நண்பர்களிடமிருந்து கூட பைகள் பார்சல் வாங்க வேண்டாம். அத்தகைய பைகளில் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாக பணம் அல்லது போதைப்பொருள் உள்ளிட்ட பிற பொருட்கள் இருக்கலாம். மருந்துகளை கொண்டு வரும்போது, மருத்துவரின் ஒப்புதல் குறிப்பை கையில் வைத்திருக்க வேண்டும், அதுபோல் விமான நிறுவனங்கள் வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிக்கையில் தெரிந்துள்ளது

Uae Airport | Dubai Airport | Dubai Customs

Add your comments to Search results for Dubai Airport

Sunday, August 8, 2021

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு முக்கியமான அறிவிப்பு

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்கள் வழியாக அந்தந்த எமிரேட்களில் குடியுரிமை விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்

Image : Dubai Airport

அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்களுக்கு இந்தியாவில் இருந்து பயணிக்கும் இந்தியர்கள் கவனத்திற்கு முக்கியமான அறிவிப்பு

அமீரகத்தில் கடந்த ஆகஸ்டு-5,2021 முதல் இந்தியர்கள் உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் பயண விதிமுறைகளை பின்பற்றி பயணிக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியர்கள் அமீரகத்திற்கு திரும்ப துவங்கியுள்ளனர். இந்நிலையில் இந்திய பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிதாக வெளியிட்டுள்ள செய்தியில் அந்தந்த எமிரேட்ஸின் Validity விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அபுதாபி மற்றும் துபாய் விமான நிலையங்கள் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியும் என்று அறிவித்துள்ளது. அதாவது அபுதாபி விசா வைத்திருந்தால் அபுதாபி விமான நிலையம் வழியாகவும், துபாய் விசா வைத்திருந்தால் துபாய் விமான நிலையம் வழியாகவும் பயணிக்க முடியும், அதேநேரம் நாட்டின் மற்ற எமிரேட்டுகளின் பயணிகள் இந்த விமான நிலையங்கள் வழியாக பயணிக்க முடியாது. ஆனால் ஷார்ஜா மற்றும் ராஸ்-அல்-கைமா விமான நிலையங்கள் வழியாக எந்த எமிரேட்டின் விசா வைத்திருப்பவர்களும் பயணிக்க முடியும் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன.

தற்போது, அமீரகத்தின் அனைத்து எமிரேட்ஸுக்கு செல்பவர்களும் துபாய் விமான நிலையத்தில் வந்து இறங்குகின்றனர். அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்பு அபுதாபிக்கு ஆகஸ்ட்-10,2021 முதல் விமான சேவைளை தொடங்கும் என்று கூறியிருந்தது. இருப்பினும், எட்டிஹாட் ஏர்வேஸ் நேற்று(07/08/21) சனிக்கிழமை முதல் சென்னை, திருவனந்தபுரம்,கொச்சி, பெங்களூர் மற்றும் டெல்லியில் விமான நிலையங்களிலிருந்து அபுதாபிக்கு விமான சேவைகளைத் தொடங்கியுள்ளது. அதுபோல் துபாய்க்கு வருபவர்கள் GDRFA- யின் அனுமதியும், அபுதாபி உள்ளிட்ட பிற எமிரேட்கள் வருபவர்கள் ICA-யில் இருந்து அனுமதி பெற வேண்டும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள இதை விதிமுறைகளை தான் எமிரேட்ஸ் உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் பின்பற்றுகின்றன என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே அமீரகத்தின் எந்த எமிரெட்டுக்கு நீங்கள் வருகின்றீர்கள் என்பதை கணக்கில் கொண்டு அதற்கு பொருத்தமான விமானத்தில் மட்டுமே பயணச்சீட்டு முன்பதிவு செய்வது சிறந்ததாக இருக்கும். தற்போது அமீரகம் பயணிக்க அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் படிக்க இங்கே Click செய்யவும் https://www.arabtamildaily.com/2021/08/indian-travelers-arrived-directly-today-after-a-long-time-in-the-united-arab-emirates.html

Add your comments to Search results for Dubai Airport

Tuesday, February 23, 2021

துபாயில் இனிமுதல் உங்கள் முகமே பயண ஆவணம்;உங்கள் பாஸ்போர்ட் பையில் இருந்தால் போதும்

துபாயில் இனிமுதல் உங்கள் முகமே பயண ஆவணம்;உங்கள் பாஸ்போர்ட் பையில் இருந்தால் போதும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

Image : Dubai Airport

துபாயில் இனிமுதல் உங்கள் முகமே பயண ஆவணம்;உங்கள் பாஸ்போர்ட் பையில் இருந்தால் போதும்

துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும்போது உங்கள் பாஸ்போர்ட் அல்லது எமிரேட்ஸ் ஐடியைப் பயன்படுத்தி உங்கள் பயணம் தொடர்பான செயல்முறையை நீங்கள் முன்பு முடித்திருக்கலாம், ஆனால் விமானத்தில் டிக்கெட் சோதனை கவுண்டரில் விமானம் ஏறும் வரையில் இப்போது உங்கள் முகத்தைக் காட்டி பயணிக்க முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது ஒரு பயோமெட்ரிக் அதிவேக பயண முறையினை முடிக்கும் வசதி ஆகும்.இது செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் பயணிகளின் முகங்களையும் கண்களையும் கண்டுபிடிக்கும். இந்த செயல்முறைக்கு பாஸ்போர்ட் மட்டுமல்ல, போர்டிங் பாஸும் தேவையில்லை என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. உங்கள் முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் சரியான நேரத்தில் அனைத்தும் செய்து முடிக்கும்.சுருக்கமாக சொன்னால் உங்கள் பாஸ்போர்ட்டுக்கு பதிலாக முகத்தை பயன்படுத்தி விமானத்தில் பறக்க முடியும் என்று அர்த்தம். இந்த பயணங்கள் தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் 5 முதல் 9 வினாடிகளில் முடிக்க முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

Add your comments to Search results for Dubai Airport

Tuesday, June 8, 2021

இந்தியா அமீரக சேவைகளுக்கான தடை ஜூலை-6 வரையில் நீட்டித்து சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

இந்தியா அமீரக இடையேயான உள்நுழைவு சேவைகளுக்கான தடை ஜூலை-6 வரையில் நீட்டித்து சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

Image : Dubai Airport

இந்தியா அமீரக சேவைகளுக்கான தடை ஜூலை-6 வரையில் நீட்டித்து சற்றுமுன் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

இந்தியா அமீரகம் இடையேயான வருகை(உள்நுழைவு) சேவைகளுக்கான தடை ஜூலை-6 வரையில் நீட்டித்துள்ளதாக சற்றுமுன் Air-india Express செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அமீரகத்தில் இருந்து வெளியேற(தாயகம் செல்ல) எந்த பிரச்சனையும் இல்லை . இந்த தடை தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து துறை தங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இந்த தடையில் இருந்து குடிமக்கள் மற்றும் சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பயணிகள் தங்கள் விமான பயணச்சீட்டுகளை மாற்றி அமைக்குமாறும் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு எமிரேட் நிறுவனம் ஜூன்-30 வரையில் தடை நிலுவையில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இதற்கிடையே இந்த புதிய அறிவிப்பை Air-india Express இன்று(08/06/21) செவ்வாய்க்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் தீவிரமடைந்த கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல்-24 இந்தியா-அமீரகம் இடையிலான உள்நுழைவு விமான சேவை தீடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர் அது மே-30 வரையில் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் மேலும் நீட்டித்து இந்த மாதம்-30 வரையில் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Add your comments to Search results for Dubai Airport

Saturday, June 19, 2021

அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் ஜூன் 23 முதல் துபாய் திரும்பலாம்

அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் ஜூன் 23 முதல் துபாய் திரும்பலாம் என்ற புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

Image : Dubai Airport

அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியர்கள் ஜூன் 23 முதல் துபாய் திரும்பலாம்

இந்தியா,தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயணத்தடை தொடர்பான நடைமுறைகளை இன்று(19/06/21) புதுப்பித்துள்ளதாக துபாய் அதிகாரிகள் தெரிவித்தனர். திருத்தப்பட்ட நடைமுறையின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சுகாதரத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட Validity Work Permit(Validity Visa) உள்ள இந்தியர்கள் 2021 ஜூன் 23 புதன்கிழமை முதல் துபாய்க்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போதைக்கு முதல்கட்டமாக இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்த இந்தியர்கள் புதிய அறிவிப்பு மூலம் மீண்டும் துபாயில் நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. துபாய் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மைக்கான உச்ச குழு ஜூன்-19 சனிக்கிழமையான இன்று இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பயண நெறிமுறைகளை புதுப்பித்துள்ளது.

இருப்பினும்,இந்த புதிய விதிமுறைப்படி துபாய் வருகின்ற பயணிகளும் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கியூஆர் குறியீடு உட்பட உள்ள எதிர்மறையான கோவிட் -19 சோதனை முடிவை உடன் எடுத்துக்கொண்டு வரவேண்டும். மேலும் பயணி துபாய் விமான நிலையத்திற்கு வந்ததும் அங்கு வைத்து மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும். பி.சி.ஆர் பரிசோதனை முடிவு வரும் வரையிலான 24 மணி நேரத்திற்கு பயணிகள் சுய தனிமைப்படுத்தல் செய்து கொள்ள வேண்டும்.

Add your comments to Search results for Dubai Airport

Tuesday, April 20, 2021

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறை

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

Image : Dubai Airport

இந்தியாவில் இருந்து துபாய்க்கு செல்கின்ற பயணிகளுக்கு நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் புதிய விதிமுறை

இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளுக்கான கோவிட் ஸ்கிரீனிங் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ தளத்தின் வழியாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் மாதிரிகள் வழங்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனை முடிவை பயணத்தின் பொது வழங்க வேண்டும்.

Image credit: Air India Express

பயணிகள் மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்ட தேதி,நேரம்,சோதனை முடிவு கிடைத்த தேதி, நேரம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பயணிகள் உறுதிப்படுத்தவும் கேட்கப்படுகிறார்கள். எதிர்மறையாக சோதனை முடிவு சான்றிதழ் ஆங்கிலம் அல்லது அரபியில் தெளிவாக பதிவு செய்யப்பட வேண்டும். சோதனை முடிவு புறப்படும் இடத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும்,அதுபோல் QR குறியீடு(QR Code) சோதனை முடிவில் சேர்க்கப்பட வேண்டும். அதிகாரிகள் அதை ஸ்கேன் செய்து சோதனை முடிவுகளை எளிதாக சரிபார்க்கவும் முடியும். பயணி புறப்படுகின்ற விமான நிலைய அதிகாரிகள் மற்றும் துபாய் விமான நிலையத்தில் சுகாதார ஆணைய அதிகாரிகளும் அறிக்கை குறித்து ஆய்வு செய்வார்கள்.இந்த புதிய நிபந்தனை ஏப்ரல்-22,2021 முதல் அமலுக்கு வருகின்றது. அதாவது நாளை மறுநாள் வியாழக்கிழமை முதல் நடைமுறையில் வருகின்றன என்பது குறி்ப்பிடத்தக்கது.

Add your comments to Search results for Dubai Airport

Monday, July 19, 2021

இந்தியா,இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமீரகத்திற்கு திரும்புவது மேலு‌ம் தாமதமாகும்

இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமீரகத்திற்கு நுழைய அனுமதிக்கும் முடிவு மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இடை நிறுத்தியுள்ளது

Image : Dubai Airport

இந்தியா,இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமீரகத்திற்கு திரும்புவது மேலு‌ம் தாமதமாகும்

ஐக்கிய அரபு எமிரேட்க்கு மொத்தம் 16 நாடுகளில் இருந்து உள்வரும்(Arrival) பயணிகள் அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு இடைநிறுத்தபடுவதாக பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(ஜி.சி.ஏ.ஏ) ஆனது நேற்றைய(18/07/21) ஞாயிற்றுக்கிழமை தேதியிட்டு இந்த புதிய அறிவிப்பை இன்று(19/07/21) மாலையில் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா,இலங்கை ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், காங்கோ ஜனநாயக குடியரசு, இந்தோனேசியா, லைபீரியா, நமீபியா, நேபாளம், நைஜீரியா, பாகிஸ்தான், உகாண்டா, சியரா லியோன், தென்னாப்பிரிக்கா,வியட்நாம் மற்றும் சாம்பியா ஆகிய நாடுகள் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வருகின்ற ஜூலை-25,2021 வரையில் இந்தியாலில் இருந்து அமீரகத்திற்கு விமான சேவைகள் இருக்காது என்று Emirates Airlines நிறுவனமும், ஜூலை-31,2021 வரையில் இந்தியாலில் இருந்து விமான சேவை இருக்காது என்று Etihad Airways நிறுவனமும் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று(20/07/21) திடிரென மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரையில் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளில் இருந்து விமான சேவை தொடங்கும் முடிவு நிறுத்தி வைப்பதாக வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு அமீரகம் திருப்புவதற்காக காத்திருந்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மீண்டும் ஏமாற்றமடைய செய்துள்ளது. இந்தியாவில் கோவிட் பரவல் உயர்ந்த நிலையில் கடந்த ஏப்ரல்-24,2021 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் நேரடியாக ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Add your comments to Search results for Dubai Airport

Thursday, January 28, 2021

துபாயில் புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன; ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறையில் வரும்

துபாயில் புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன;ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த அறிவிப்புகள் நடைமுறையில் வரும் என்று சுகாதாரத்துறை அறிவிப்பு

Image credit: Dubai Airport

துபாயில் புதிய பயண விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன; ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறையில் வரும்

துபாய்க்கு வருகை தரும் பயணிகளுக்கு புதிய பயண விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(31/01/21) முதல் நடைமுறைக்கு வரும் என்றும், புதிய மரபணு மாற்ற வைரஸ் பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.துபாய்க்கு வரும் பயணிகளின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நாட்டின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழு அறிவித்த புதிய விதிகள் ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்ற அறிக்கையை நேற்று(27/01/21) வெளியிட்டுள்ளது.

ஒரு பயணியின் கோவிட் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு சான்றிதழ் செல்லுபடியாகும்(Validity) காலம் 96 மணிநேரத்திலிருந்து 72 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிப்பவர்களும், வருகைதரும் அனைவரும் அல்-ஹுசைன் பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்து கோவிட் பரிசோதனை தகவல்களை அதில் பதிவேற்ற வேண்டும். சோதனை முடிவுகள் வெளிவரும் வரை பயணிகள் தனிமைப்படுத்தலுக்குள் நுழைய வேண்டும். முடிவு நேர்மறையானதாக இருந்தாலும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் பயணிகள் மேலும் 10 நாட்கள் தங்கவும். இந்த விதிமுறை நோய்தொற்று அறிகுறிகள் உள்ள மற்றும் இல்லாதவர்களுக்கும் பொருந்தும், இது தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஒரு பயணியின் கோவிட் பி.சி.ஆர் பரிசோதனை முடிவு சான்றிதழ் செல்லுபடியாகும்(Validity) காலம் 96 மணிநேரத்திலிருந்து 72 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிப்பவர்களும், வருகைதரும் அனைவரும் அல்-ஹுசைன் பயன்பாட்டு செயலியை பதிவிறக்கம் செய்து கோவிட் பரிசோதனை தகவல்களை அதில் பதிவேற்ற வேண்டும். சோதனை முடிவுகள் வெளிவரும் வரை பயணிகள் தனிமைப்படுத்தலுக்குள் நுழைய வேண்டும். முடிவு நேர்மறையானதாக இருந்தாலும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் பயணிகள் மேலும் 10 நாட்கள் தங்கவும். இந்த விதிமுறை நோய்தொற்று அறிகுறிகள் உள்ள மற்றும் இல்லாதவர்களுக்கும் பொருந்தும், இது தொடர்பான தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.

Add your comments to Search results for Dubai Airport

Monday, August 30, 2021

அமீரத்தில் நுழைய புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

இந்தியா உள்ளிட்ட நாட்டவர்கள் சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய அனுமதி

Image : Dubai Airport

அமீரத்தில் நுழைய புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

இந்தியா, இலங்கை உள்ளிட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த அனைத்து நாடுகளிலிருந்தும் சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிகள் இனிமுதல் நேரடியாக நுழைய முடியும். உலக சுகாதரத்துறை அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி முடித்தவர்கள் சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். நாட்டின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம்(ICA), தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு ஆகஸ்ட்-30,2021 நாளை(திங்கள்கிழமை)முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் புதிதாக சுற்றுலா விசா மற்றும் விசிட் விசாவுக்கு நாளை முதல் விண்ணப்பிக்க முடியும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதேபோல் முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய பயணத்தை தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலுள்ள நபர்களின் விசிட் விசாக்களுக்கு இந்த புதிய அறிவிப்பு பொருந்தும் என்று அதிகாரிகள் நேற்று(28/08/21) சனிக்கிழமை தெரிவித்தனர். இதன் மூலம், இந்தியாவில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். விசிட் விசாவில் நாட்டிற்கு பயணம் செய்பவர்கள் விமான நிலையத்தில் வந்தவுடன் விரைவான பிசிஆர்(Rapid-Test) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்களை ICA இணையதளம் மற்றும் அல் ஹுசைன் ஆப் மூலம் பதிவு செய்யலாம். தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து தடுப்பூசி எடுக்காதவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள நிபந்தனைகள் அனைத்தும் மாறாமல் அப்படியே நடைமுறையில் உள்ளது. அதை கடைபிடித்து மட்டுமே அமீரகத்தில் நுழைய முடியும்.

Add your comments to Search results for Dubai Airport

Thursday, April 22, 2021

அமீரகத்திற்கு இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

அமீரகத்திற்கு இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது;நாளை மறுநாள் முதல் ஊத்தரவு நடைமுறையில் வருகின்றன

Image : Dubai Airport

அமீரகத்திற்கு இந்தியாவில் இருந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து விமான சேவைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுபடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலிருந்தும் இந்தியாவில் இருந்து விமானங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு நாளை மறுநாள் சனிக்கிழமை(ஏப்ரல்-24) முதல் நடைமுறைக்கு வரும்,இந்த தடை மே-4 வரை பத்து நாட்கள் முதல்கட்டமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நிலைமையை மதிப்பிட்ட பிறகு மறுபரிசீலனை செய்யப்படும்.

இதற்கிடையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் நுழைவதை தடைசெய்து ஓமான் உச்ச குழு நேற்று(21/04/21) உத்தரவு பிறப்பித்தது. இந்த முடிவு ஏப்ரல் 24 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த முடிவு தொடரும். இருப்பினும், ஓமானி குடிமக்கள், தூதுவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து வரும் பயணிகளுக்கு நாட்டிற்குள் நுழைவதை தடைசெய்து ஓமான் உச்ச குழு நேற்று(21/04/21) உத்தரவு பிறப்பித்தது. இந்த முடிவு ஏப்ரல் 24 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். மற்றொரு அறிவிப்பு வெளியாகும் வரை இந்த முடிவு தொடரும். இருப்பினும், ஓமானி குடிமக்கள், தூதுவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Add your comments to Search results for Dubai Airport

Tuesday, October 10, 2023

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர் வெடிகுண்டு இல்லை என்று கூறியதால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

Image : Saudi Arabia Airport

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் உள்ள தமாம் விமான நிலையத்தில், தனது பேக்கேஜில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதால் வெடிகுண்டு இல்லை என்று கூறிய இந்தியர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறுதியாக ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒத்துழையாமை மற்றும் தவறாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

துபாய் செல்வதற்காக தமாம் விமான நிலையத்திற்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரிடம் சிக்கினார். Fly Dubai விமானத்தில் டிக்கெட் எடுத்து கொண்டு, அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது பிடிபட்டார். பையில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதற்கு, கோபமடைந்த பயணி விமான நிலைய அதிகாரியிடம் பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கூறினார்.

இதுபற்றி விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மோப்ப நாய் அடங்கிய தீவிரவாத தடுப்பு பிரிவு பாதுகாப்பு பிரிவினர் பயணியை கைது செய்ய விரைந்தனர். அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு, நாட்டில் நுழைய முடியாதபடி நாட்டை விட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய தகவலறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது மனைவி தமாமில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தூதரகத்தின் உதவியுடன் சட்ட உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் நீதிமன்ற உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டதால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர் தமாமில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Engineer | Saudi Airport | Saudi Jail

Add your comments to Search results for Dubai Airport

Saturday, June 19, 2021

இந்தியர்கள் ஜூன்-23 முதல் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள வரையறை செய்துள்ள ஆறு நிபந்தனைகள் இவைகள் ஆகும்

இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளை சேர்ந்த Validity Work Visa உள்ளவர்கள் இன்று புதிதாக அறிவித்துள்ள விதிமுறைகள் பின்பற்றி துபாய் வருவதற்காக முதல்கட் தளர்வுகளை மாலையில் வெளியிட்டுள்ளது

Image : Dubai International Airport

இந்தியர்கள் ஜூன்-23 முதல் துபாய்க்கு பயணம் மேற்கொள்ள வரையறை செய்துள்ள ஆறு நிபந்தனைகள் இவைகள் ஆகும்

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான நுழைவு கட்டுப்பாடுகளை ஓரளவு குறைக்க ஐக்கிய அரபு அமீரகம் இன்று அனுமதி அளித்துள்ள நிலையில் இந்தியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் சனிக்கிழமை நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியா தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா உட்பட மூன்று நாடுகளில் இருந்து துபாய் திரும்புவதற்கு அனுமதிப்பதாக அறிவித்தது அதிகாரப்பூர்வ செய்தியை இன்று(19/06/21) சனிக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ளது. இதன்படி வருகின்ற ஜூன் 23 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகளின்படி தடை நீக்கப்பட்டுவதால் விமான சேவைகளை தொடங்குவது குறித்து விரைவில்அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஜூன்-23,2021 முதல் இந்தியாவில் இருந்து குடியிருப்பு விசா வைத்திருப்பவர்கள் துபாய் திரும்புவதற்கான ஆறு நிபந்தனைகள்:

  1. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகரித்த கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ் எடுத்திருக்க வேண்டும்.  தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் சினோஃபார்ம், ஃபைசர், பயோஎன்டெக், ஸ்பூட்னிக் மற்றும் அஸ்ட்ராஜெனிகா ஆகும்.
  2. அஸ்ட்ராஜெனிகா தான் இந்தியாலில் கோவிட்சீல்ட் என்ற பெயரில் வழங்கபடுகிறது. எனவே இந்த 2 டோஸ் எடுத்தவர்கள் துபாய்க்கு வர முடியும். மேலும் தடுப்பூசி சான்றிதழில் அஸ்ட்ராஜெனிகா/கோவிட்சீல்ட் என்ற பதிவு செய்திருக்க வேண்டும் உடன் உங்கள் பாஸ்போர்ட் எண்ணும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  3. எதிர்மறை பி.சி.ஆர் பரிசோதனை முடிவு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்குள் எடுத்திருக்க வேண்டும்.(இதில் ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களுக்கு சலுகைகள் உள்ளது)
  4. QR குறியீட்டைக் கொண்ட சோதனை முடிவு சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
  5. அனைத்து பயணிகளும் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பான விரைவு பி.சி.ஆர்(rapid test) பரிசோதனை செய்த சான்றிதழ் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  6.  துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிறகு, பயணிகள் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
  7. பி.சி.ஆர் தேர்வின் முடிவுகள் கிடைக்கும் வரை நிறுவன தனிமைப்படுத்தலில் பயணி இருக்க வேண்டும். சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைக்கும் என்று தெரிகிறது. இதிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகளும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர்.

மேலும் அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட அமீரகங்களின் மற்ற இடங்களின் விசா கைவசம் உள்ள இந்தியர்கள் திரும்புவது தொடர்பான தெளிவாக விளக்கம் எனவும் இன்றைய அறிக்கையில் இடம்பெறவில்லை. வரும் மணிநேரத்தில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த புதிய அறிவிப்பு வெளியான நிலையில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன்-23 முதல் இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியாவை துபாயுடன் இணைக்கும் விமானங்களின் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

Add your comments to Search results for Dubai Airport

Saturday, June 26, 2021

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கான விமான சேவைகளின் தடை ஜூலை-21 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கான விமான சேவைகளுக்கான தடை ஜூலை-21 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற புதிய அறிவிப்பு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது

Image : Dubai International Airport

இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கான விமான சேவைகளின் தடை ஜூலை-21 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாலில் இருந்து அமீரகத்திற்கான விமான சேவைகளின் தடை ஜூலை-21 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்(GCAA) இன்று(26/06/2021) சனிக்கிழமை சற்றுமுன் அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் இந்தியா,இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து அமீரகத்திற்கான விமான சேவைகளை ஜூலை-21,2021 நள்ளிரவு 11:59 வரையில் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. முன்னர் இந்த தடை ஜூலை-6,2021 வரையில் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா,இலங்கை, லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்,நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கும். மேலும் சரக்கு விமானங்கள்(Cargo Flights), வணிக விமானம்(Business) மற்றும் சார்ட்டர்(Charter Flights)விமானங்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add your comments to Search results for Dubai Airport