BREAKING NEWS
latest

Saudi Airport - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Saudi Airport செய்திகள், கட்டுரைகள், Saudi Airport புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Wednesday, August 25, 2021

சவுதியில் இந்தியா உள்ளிட்ட நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்ட நாட்டினர் விதிமுறைகள் பின்பற்றி நாடு திரும்பலாம்

சவுதியில் செப்டம்பர்-1 முதல் நேரடியாக இந்தியா உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட நாட்டினர் விதிமுறைகள் பின்பற்றி நாடு திரும்பலாம்

Image : Saudi Airport

சவுதியில் இந்தியா உள்ளிட்ட நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்ட நாட்டினர் விதிமுறைகள் பின்பற்றி நாடு திரும்பலாம்

கோவிட் தீவிரமடைந்த நிலையில் விதிக்கப்பட்ட பயணத் தடையைத் தொடர்ந்து இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக நுழைவு தடை வைத்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர்-1 முதல் விலக்கு நீங்குகிறது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, சுவீடன், பிரேசில், அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் நாட்டில் நேரடியாக நுழைய தளர்வுகள் அளித்து இது தொடர்பான சுற்றறிக்கை நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உள்ளிட்ட அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் சவுதி வெளியுத்துறை அனுப்பியது.

இந்நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ பத்திரிக்கை அறிக்கையினை பொதுமக்களுக்காக சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(GACA) இன்று புதன்கிழமை(25/08/21) மாலையில் வெளியிட்டுள்ளது. அதில் சவுதி அரேபியாவிலிருந்து கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ் முடித்து தாயகம் சென்ற காலாவதி(Validity Visa) இகாமா உள்ளவர்கள் செப்டம்பர்-1,2021 முதல் முதல்கட்டமாக நேரடியாக நாட்டிற்குள் நுழைய முடியும். மேலும் இவர்கள் நாட்டில் நுழைந்த பிறகு தனிமைப்படுத்தல் செய்ய வேண்டியது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை வெளியானது முதல் பல விமான நிறுவனங்களின் சர்குலர்(அறிக்கை) வெளியாகியுள்ளன. அதேபோல் பல விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு முன்பதிவுகளையும் துவங்கியுள்ளன.

இதன் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தாயகம் சென்றால் எப்படி சவுதிக்கு திரும்ப முடியும் என்ற கவலையில் விடுமுறைக்கு செல்லாமல் இருந்தவர்களில் சவுதியில் இருந்து இரண்டு டோஸ் எடுத்தவர்கள் தைரியமாக விடுமுறைக்கு தாயகம் செல்ல முடியும். கொரோனா பரவலை தொடர்ந்து சவுதிக்கான பயணத்தை துவக்கி ஒரு வருடமும் 7 மாதங்களும் ஆகின்றன. இந்நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே தாயகத்தில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சவுதி திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இவர்கள் தற்போது மற்றொரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து பிறகு சவுதியில் நுழைந்து வருகின்றனர். இவர்கள் நேரடியாக நாட்டில் நுழைவது தொடர்பான எந்த அறிவிப்பும் இன்றைய அறிக்கையில் வெளியாகவில்லை. அதேபோல் சவுதியில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி முடித்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் குடும்பமாக தாயகம் சென்றவர்களாக இருக்கலாம். அவர்கள் தடுப்பூசி எடுக்காத தங்களின் குழந்தைகளையும் தங்களுடன் நேரடியாக அழைத்துவர முடியும். ஆனால் இவர்கள் சவுதியில் நுழைந்த பிறகு தனிமைப்படுத்தல் செய்ய வேண்டியது இருக்கும் எனவும் விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saudi Airport | Return Saudi | September 1

Add your comments to Search results for Saudi Airport

Tuesday, October 10, 2023

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர் வெடிகுண்டு இல்லை என்று கூறியதால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

Image : Saudi Arabia Airport

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் உள்ள தமாம் விமான நிலையத்தில், தனது பேக்கேஜில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதால் வெடிகுண்டு இல்லை என்று கூறிய இந்தியர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறுதியாக ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒத்துழையாமை மற்றும் தவறாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

துபாய் செல்வதற்காக தமாம் விமான நிலையத்திற்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரிடம் சிக்கினார். Fly Dubai விமானத்தில் டிக்கெட் எடுத்து கொண்டு, அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது பிடிபட்டார். பையில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதற்கு, கோபமடைந்த பயணி விமான நிலைய அதிகாரியிடம் பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கூறினார்.

இதுபற்றி விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மோப்ப நாய் அடங்கிய தீவிரவாத தடுப்பு பிரிவு பாதுகாப்பு பிரிவினர் பயணியை கைது செய்ய விரைந்தனர். அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு, நாட்டில் நுழைய முடியாதபடி நாட்டை விட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய தகவலறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது மனைவி தமாமில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தூதரகத்தின் உதவியுடன் சட்ட உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் நீதிமன்ற உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டதால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர் தமாமில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Engineer | Saudi Airport | Saudi Jail

Add your comments to Search results for Saudi Airport

Wednesday, September 8, 2021

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 3 நாடுகள் மீதான தற்காலி பயணத்தடையை இன்று முதல் நீக்குவதாக சவுதி உ‌ள்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது

அமீரகத்தில் இருந்து சவுதியில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடை இன்று 11 மணிமுதல் நீங்குகிறது

Image : Saudi Airport

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 3 நாடுகள் மீதான தற்காலி பயணத்தடையை இன்று முதல் நீக்குவதாக சவுதி உ‌ள்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது

சவுதி அரேபியா வெளியிட்டுள்ள புதிய செய்தியில் அமீரகம் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று(08/09/21) புதன்கிழமை முதல் விலக்குவதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அமீரகம் வருவதற்கு விசிட் விசாக்கள் வழங்கப்படுகின்ற நிலையில் இந்தியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை அங்கு முடித்துவிட்டு பிறகு சவுதி அரேபியாவுக்கு எளிதாக பயணம் செய்ய முடியும். மற்ற நாடுகளை விட அமீரகம் வழியாக சவுதிக்கு பயணம் செய்ய செலவு குறையும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றன. சவுதி தற்போதைய நிலையில் தங்கள் நாட்டில் இருந்து 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட இந்தியா சென்ற நபர்களை மட்டுமே நேரடியாக நுழைய அனுமதி வழங்குகிறது. இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்தவர்கள் நேரடியாக நுழைய இதுவரை அனுமதி வழங்கவில்லை.

எனவே இந்தியாவில் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்கள் மூன்றாவது நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து,பிறகு சவுதியில் நுழைய வேண்டியநிலை உள்ளதால், அமீரகம் மீதான தடை நீக்குவது இந்தியர்கள் சவுதியில் நுழைய பெரும் உதவியாக இருக்கும். மேலும் அந்த அறிக்கையில் ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் இருந்து சவுதி அரேபியாவிற்குள் நுழைவதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கியுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் சவுதி குடிமக்கள் இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே தடை நீக்கப்பட்டுள்ள நாட்டினர் இன்று(08/09/21) புதன்கிழமை காலை 11:00 மணி முதல் நாட்டின் நிலம்,துறைமுக(கடல்) எல்லைகள் மற்றும் விமான நிலையங்கள் வழியாக நாட்டில் நுழைய முடியும்.

Add your comments to Search results for Saudi Airport

Saturday, January 30, 2021

சவுதி அரேபியாவிற்கான ச‌ர்வதேச விமானங்களின் நேரடி சேவைகள் துவக்குவதை மே-17 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது

சவுதி அரேபியாவிற்கான சர்வதேச விமானங்களின் நேரடி சேவைகள் துவக்குவதை மே-17 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது;இது தொடர்பான செய்தி மாலையில் வெளியாகியுள்ளது

Image : Saudi Airport

சவுதி அரேபியாவிற்கான சர்வதேச விமானங்களின் நேரடி சேவைகள் துவக்குவதை மே-17 வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டது

சவுதி அரேபியாவிலிருந்து சர்வதேச விமானங்களின் நேரடியான சேவைகள் மீண்டும் தொடங்குவதற்கான தேதியை இன்று மாலையில் திடிரென மீண்டும் நீட்டிப்பு செய்து உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, வெளிநாடுகளுக்கு வழக்கமான விமானங்கள் சேவையானது மே-17,2021 முதல் தொடங்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. முன்னதாக சர்வதேச விமான சேவைகள் வருகின்ற மார்ச் 31 இரவு முதல் துவக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக காரணமாக அரசு தரப்பில் வெளியிட்டுள்ள செய்தியில் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்ற கோவிட் வைரஸ் அதிக அளவில் தற்போது பரவி வருகின்றன எனவும், பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள கொரோன தடுப்பூசி நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக முதல் டோஸ் மருந்து எடுக்கொண்ட பலருக்கு இரண்டாவது டோஸ் எடுப்பதாக தேதி மாற்றி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் கடந்த சில நாட்களாக நாட்டில், கடந்த நாட்களில் இல்லாத அளவுக்கு புதிதாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்குவதால் கொரோனா பாதிப்பு உயரும் என்பது உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது. மேலும் மே-17,2021 மதியம் 1 மணி முதல் இந்த தடை நீக்கப்படும் என்பது புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் சவுதியில் நுழைய ஒரே வழி துபாய், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் 14 நாட்கள் தங்கியிருந்து கொரோனா எதிர்மறை சான்றிதழ் பெற்று,சவுதி அறிவித்துள்ள சுகாதார விதிமுறைகள் பின்பற்றி நாட்டில் நுழைவதே. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேரடியாக சவுதியில் நுழைய தற்போதைய நிலைமையில் மே-17 வரையில் காத்திருந்த வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

Add your comments to Search results for Saudi Airport

Thursday, February 25, 2021

தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் முதலாளியுடன்(Sponsore) நேரடியாக சவுதியில் நுழையலாம்

தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் முதலாளியுடன்(Sponsore) நேரடியாக சவுதியில் நுழையலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

Image : Saudi Airport

தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்கள் முதலாளியுடன்(Sponsore) நேரடியாக சவுதியில் நுழையலாம்

சவுதி சுகாதரத்துறையின் அறிவுத்தல் அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் தற்காலிகமாக நாட்டில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 20 நாடுகளின் வீட்டுத் தொழிலாளர்கள் ஸ்பான்சருடன் சேர்ந்து சவுதி அரேபியாவில் நுழையலாம் என்று சிவில் ஏவியேஷனின் புதிய சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. தடைசெய்யப்பட்ட நாடுகளில் உள்ள சவுதிகளின்(குடிமக்களின்) நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் சவுதி அரேபியாவிற்குள் நுழைய புதிய சுற்றறிக்கை அனுமதி அளித்துள்ள நிலையில், வீட்டுத் தொழிலாளர்களும் அவர்களுடன் சேர்ந்து நாட்டில் நுழைய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தடைசெய்யப்பட்ட நாடுகளில் சிக்கியுள்ள சவுதிகளும் அவர்களுடையது குடும்பங்கள் மற்றும் உறவினர்கள்,வீட்டுத் தொழிலாளி உள்ளிட்ட அனைவரும் சவுதி அரேபியாவுக்கு நேரடியாக பறக்க முடியும். அதே நேரத்தில், சவுதி ஸ்பான்சர் பஹ்ரைனுக்குச் சென்று தொழிலாளியை அழைத்து வர முடியும், இதன்மூலம் வீட்டுத் தொழிலாளி பஹ்ரைனில் 14 நாட்கள் செலவிடாமல் கஃபீலுடன் சவுதியில் நேரடியாக நுழைய முடியும் என்றும் சுற்றறிக்கையின் மூலம் தெரிய வருகிறது.

Add your comments to Search results for Saudi Airport

Thursday, March 11, 2021

சவுதி அரேபியாவுக்கு மே-17 முதல் சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

சவுதி அரேபியாவுக்கு மே-17 முதல் சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது;இது தொடர்பான தகவல் மாலையில் வெளியாகியுள்ளது

Image : Saudi International Airport

சவுதி அரேபியாவுக்கு மே-17 முதல் சர்வதேச விமானங்களின் சேவைகள் மீண்டும் துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது

சவுதி அரேபியாவில் சர்வதேச விமானங்களுக்கான தடை மே-17 அன்று அதிகாலையில் 1 மணிக்கு நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு சவுதி ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று சவுதியின் விமானப் போக்குவரத்து துறை GACA வெளியிட்டுள்ள அறிக்கையிலும் அனைத்து சர்வதேச விமான சேவைகளுக்கான தடையும் மே-17 அன்று நீக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சவுதி குடிமக்கள் மே- 17 முதல் நாட்டை விட்டு வெளியேறவும், நாடு திரும்பவும் அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினத்தில் இருந்து நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் முழுமையாக செயல்படும். அனைத்து சர்வதேச விமானங்களுக்கான தடையும் நீக்கப்படும். ஆனால் கோவிட் பரவுவதைக் கருத்தில் கொண்டு நாட்டின் சுகாதர நிலைமையினை கண்காணிப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ள எந்த நாட்டிற்கும் இந்த புதிய முடிவு பொருந்தாது என்றும் சவுதி ஏர்லைன்ஸ் இன்று(11/03/21) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுபோல் இந்த புதிய முடிவுக்கு மே-17 வரை என்ற நீண்ட இடைவெளி உள்ளத்தால் கொரோனா நோய்தொற்று குறையும் நாடுகளை தடைப் பட்டியலிலிருந்து நீக்கவும் வாய்ப்புள்ளது.இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Add your comments to Search results for Saudi Airport