சவுதியில் செப்டம்பர்-1 முதல் நேரடியாக இந்தியா உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட நாட்டினர் விதிமுறைகள் பின்பற்றி நாடு திரும்பலாம்
Image : Saudi Airport
சவுதியில் இந்தியா உள்ளிட்ட நேரடியாக நுழைய தடை விதிக்கப்பட்ட நாட்டினர் விதிமுறைகள் பின்பற்றி நாடு திரும்பலாம்
கோவிட் தீவிரமடைந்த நிலையில் விதிக்கப்பட்ட பயணத் தடையைத் தொடர்ந்து இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு சவுதி அரேபியா தற்காலிகமாக நுழைவு தடை வைத்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர்-1 முதல் விலக்கு நீங்குகிறது. இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, லெபனான், துருக்கி, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, சுவீடன், பிரேசில், அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் நாட்டில் நேரடியாக நுழைய தளர்வுகள் அளித்து இது தொடர்பான சுற்றறிக்கை நாட்டில் உள்ள இந்திய தூதரகம் உள்ளிட்ட அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் சவுதி வெளியுத்துறை அனுப்பியது.
இந்நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ பத்திரிக்கை அறிக்கையினை பொதுமக்களுக்காக சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(GACA) இன்று புதன்கிழமை(25/08/21) மாலையில் வெளியிட்டுள்ளது. அதில் சவுதி அரேபியாவிலிருந்து கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ் முடித்து தாயகம் சென்ற காலாவதி(Validity Visa) இகாமா உள்ளவர்கள் செப்டம்பர்-1,2021 முதல் முதல்கட்டமாக நேரடியாக நாட்டிற்குள் நுழைய முடியும். மேலும் இவர்கள் நாட்டில் நுழைந்த பிறகு தனிமைப்படுத்தல் செய்ய வேண்டியது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை வெளியானது முதல் பல விமான நிறுவனங்களின் சர்குலர்(அறிக்கை) வெளியாகியுள்ளன. அதேபோல் பல விமான நிறுவனங்கள் பயணச்சீட்டு முன்பதிவுகளையும் துவங்கியுள்ளன.
இதன் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தாயகம் சென்றால் எப்படி சவுதிக்கு திரும்ப முடியும் என்ற கவலையில் விடுமுறைக்கு செல்லாமல் இருந்தவர்களில் சவுதியில் இருந்து இரண்டு டோஸ் எடுத்தவர்கள் தைரியமாக விடுமுறைக்கு தாயகம் செல்ல முடியும். கொரோனா பரவலை தொடர்ந்து சவுதிக்கான பயணத்தை துவக்கி ஒரு வருடமும் 7 மாதங்களும் ஆகின்றன. இந்நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கிடையே தாயகத்தில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சவுதி திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இவர்கள் தற்போது மற்றொரு நாட்டில் 14 நாட்கள் தங்கியிருந்து பிறகு சவுதியில் நுழைந்து வருகின்றனர். இவர்கள் நேரடியாக நாட்டில் நுழைவது தொடர்பான எந்த அறிவிப்பும் இன்றைய அறிக்கையில் வெளியாகவில்லை. அதேபோல் சவுதியில் இருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி முடித்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் குடும்பமாக தாயகம் சென்றவர்களாக இருக்கலாம். அவர்கள் தடுப்பூசி எடுக்காத தங்களின் குழந்தைகளையும் தங்களுடன் நேரடியாக அழைத்துவர முடியும். ஆனால் இவர்கள் சவுதியில் நுழைந்த பிறகு தனிமைப்படுத்தல் செய்ய வேண்டியது இருக்கும் எனவும் விமான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saudi Airport | Return Saudi | September 1