BREAKING NEWS
latest

Dubai Police - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Dubai Police செய்திகள், கட்டுரைகள், Dubai Police புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, February 2, 2021

துபாயில் இன்று 3 பேருந்துகள் மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 2 பேர் பலி 10 பேர் காயமடைந்தனர்

துபாயில் இன்று 3 பேருந்துகள் மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 2 பேர் பலி 10 பேர் காயமடைந்தனர்;இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது

Image credit: Dubai Police

துபாயில் இன்று 3 பேருந்துகள் மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 2 பேர் பலி 10 பேர் காயமடைந்தனர்

துபாயின் Al-Khail சாலையில் இன்று(02/02/21) செவ்வாய்க்கிழமை காலை பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். பேருந்துகளில் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சரியான பாதையில் இருந்து விலகி சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேறு இரண்டு பேருந்துக்களுடன் பயங்கரமாக மோதியது. இன்று காலை 6.30 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு அறிக்கை கிடைத்ததாக போக்குவரத்து காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மசூய் தெரிவித்தார்.

Image credit: Dubai Police

இதையடுத்து போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் கூறுகையில் வாகனங்கள் ஓட்டும் நேரத்தில்,திடிரென வேகத்தை அதிகரிப்பு மற்றும் கவனக்குறைவு ஆகியவை இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட காரணம் என்றார். காயமடைந்த 10 நபர்களில் சிலருக்கு பலத்த காயமும்,சிலருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. விபத்தில் சிக்கியதில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த நபர்கள் எந்த நாட்டவர்கள் என்ற கூடுதல் தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Add your comments to Search results for Dubai Police

Tuesday, March 30, 2021

துபாயில் காணாமல் போன 4 வயது சிறுவனை போலீசார் 40 நிமிடங்களுக்குள் மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்தனர்

துபாயில் காணாமல் போன 4 வயது சிறுவனை போலீசார் 40 நிமிடங்களுக்குள் மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது

Image credit: Dubai Police

துபாயில் காணாமல் போன 4 வயது சிறுவனை போலீசார் 40 நிமிடங்களுக்குள் மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்தனர்

துபாயில் காணாமல் போன நான்கு வயது சிறுவனைக் கண்டுபிடித்து 40 நிமிடங்களுக்குள் பெற்றோரிடம் துபாய் போலீசார் ஒப்படைத்தனர் இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்த நிலையில் இன்று இது தொடர்பான செய்தியை துபாய் செய்திதாள்கள் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. உம் சுகைம் பகுதியில் வைத்து தங்களுடைய மகன் காணாமல் போனான் என்று பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் என்று துபாய் காவல்துறையின், சுற்றுலா பொலிஸ் பிரிவின் இயக்குநர் கர்னல். முபாரக் அல் கிட்பி தெரிவித்தார்.

பெற்றோர் உணவு வாங்கிக் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடிரென காணாமல் போயுள்ளார். குழந்தை காணாமல்போன இடம் கடற்கரையின் அருகாமையில் என்பதால் பயந்து போன பெற்றோர் அங்குள்ள பாதுகாவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அவர்கள் துபாய் போலீஸை தொடர்பு கொண்டனர். தகவல் கிடைத்ததும், துபாய் காவல்துறை அனைத்து ரோந்து குழுக்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்பியது.

இதையடுத்து 40 நிமிட தேடலுக்குப் பிறகு, சிறுவன் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது குழந்தை பயத்தில் அழுது கொண்டிருந்தார், மேலும்பசி மற்றும் தாகத்தால் சோர்வாக இருந்தான்,போலீஸ் குழு உடனடியாக குழந்தையினை பெற்றோரிடம் அழைத்துச் சென்றது. காவல்துறையினர் உடனடியாக தலையிட்டதற்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விஷயத்தில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர்களை பொது இடங்களில் வைத்து கவனிக்காமல் விடக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Add your comments to Search results for Dubai Police

Friday, March 5, 2021

துபாயில் 9 லட்சம் திர்ஹம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

துபாயில் 9 லட்சம் திர்ஹம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்;நேர்மையினை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

Image : Dubai Police

துபாயில் 9 லட்சம் திர்ஹம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

துபாயில் கரீம் டாக்ஸி ஓட்டுநர் தனது காரில் ஒரு பயணி விட்டுச் சென்ற 9 லட்சம் திர்ஹம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்து நேர்மையான டாக்ஸி டிரைவர் ஆனார். துபாயில் பொதுமக்கள் பயன்படுத்த சேவையில் உள்ள கரீம் டாக்ஸி நிறுவனத்தின் கீழ் ஓட்டுநராக வேலை செய்யும் முகமது ரபீக் என்ற அந்த ஓட்டுநர் ஒரு பயணியை இறக்கிவிட்டு திரும்பும் வழியில் அதில் பயணம் செய்த பயணி மறந்து விட்டுச் சென்ற 9 லட்சம் திர்ஹம் பணத்தை கண்டார். இதையடுத்து அந்த பெரும் தொகையினை பர்-துபாய் காவல் நிலையத்தில் தெரிவித்தார்.

பர்-துபாய் காவல் நிலைய இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா காதிம் சோரூர் அவர்கள் ரபீக்கின் நேர்மைக்காகவும், இவ்வளவு பெரிய தொகையை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காகவும் பாராட்டினார். தொடர்ந்து ரபீக்கிற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தன்னை கவுரவப்படுத்திய காவல்துறையினருக்கும் ரபீக் நன்றி தெரிவித்தார்.

Add your comments to Search results for Dubai Police

Tuesday, January 23, 2024

ஷார்ஜாவில் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் இந்தியரை கொலை செய்து பாலைவனத்தில் புதைத்த கொடுரமான சம்பவம் அரங்கேறியுள்ளது

இந்தியர் பணியிடத்தில் வைத்து கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் மூலம் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Image : கொலை செய்யப்பட்ட அனில்குமார்

ஷார்ஜாவில் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் இந்தியரை கொலை செய்து பாலைவனத்தில் புதைத்த கொடுரமான சம்பவம் அரங்கேறியுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இந்தியர் ஒருவரை கடத்தி கொலை செய்து குழிதோண்டி புதைத்த வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் முட்டடையை சேர்ந்த அனில்குமார் வின்சென்ட் (வயது-60) என்பவரே உயிரிழந்த இந்தியர். அனில் கடந்த ஜனவரி 2ம் தேதி காணாமல் போனார். துபாயில் உள்ள டி சிங் டிரேடிங் என்ற நிறுவனத்தில் பி.ஆர்.ஓ- வாக வேலை செய்து வந்தார்.

மேலும் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட இரண்டு பாகிஸ்தான் குடிமக்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அனில் குமார் கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் அனில் குமார் கடந்த 36 ஆண்டுகளாக ஊழியராக உள்ளார்.

போலீசார் விசாரணையில், அனில் குமாரை கழுத்தை நெரித்து கொன்று, வாகனத்தில் எடுத்து சென்று ஷார்ஜா பாலைவனத்தில் புதைத்தது தெரிய வந்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதி போலீஸார் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் மூவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சடலத்தை மறைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரான முன்றாவது குற்றவாளி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Worker | Dubai Police | Pakistans Arrested

Add your comments to Search results for Dubai Police

Thursday, February 4, 2021

துபாயில் மினிவேன் கார் மீது மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்;4 பேர் நிலை கவலைக்கிடம் என்ற தகவல் வெளியாகியுள்ளது:

துபாயில் மினிவேன் கார் மீது மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்,4 பேர் நிலை கவலைக்கிடம் Sieh Shuaib அருகே உள்ள ஹசா தெருவில் இந்த விபத்து நடந்தது

Image credit: Dubai Police

துபாயில் மினிவேன் கார் மீது மோதியதில் 15 பேர் காயமடைந்தனர்;4 பேர் நிலை கவலைக்கிடம் என்ற தகவல் வெளியாகியுள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மினிவேன் மற்றும் கார் மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர். Sieh Shuaib அருகே உள்ள ஹசா தெருவில் இந்த விபத்து நடந்ததாக துபாய் போலீஸ் போக்குவரத்து பிரிவு இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் தெரிவித்தார். மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்றுக் கொண்டிருந்த மற்றொரு வாகனம் மீது மோதியது.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ரோந்து போலிஸ் மற்றும் ஆம்புலன்ஸ் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 15 நபர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுச் சென்றனர். இவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் ஏழு பேருக்கு மிதமான காயம் ஏற்பட்டது,மற்ற நான்கு பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர்களில் 12 பேர் பாகிஸ்தானியர்கள் மற்றும் மூன்று பங்களாதேஷ் நாட்டவர்கள் அனைவரும் தினசரி கூலி தொழிலாளர்கள் என்பது குறி்ப்பிடத்தக்கது.

Add your comments to Search results for Dubai Police