BREAKING NEWS
latest

Kuwait amnesty - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait amnesty செய்திகள், கட்டுரைகள், Kuwait amnesty புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, January 19, 2021

குவைத்தில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 130,000 இருந்து 180,000-ஆக உயர்ந்துள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 180,000 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்களின் வேலை அனுமதி பாத்திரத்தை(Work Permit) புதுப்பித்து நாட்டில் தொடர்ந்து வசிக்கவோ அல்லது அபராதம் செலுத்தி நாட்டை விட்டு வெளியேறவோ உள்துறை அமைச்சகம் கடந்த இரண்டு மாதங்களாக அறிவுறுத்தி வருகிறது.

கடந்த டிசம்பர்- 1 முதல் டிசம்பர்-31வரையில் அபராதத்துடன் கூடிய பொதுமன்னிப்பு முதலில் அறிவிக்கப்பட்டது, அனால் மரபணு மாற்ற கொரோனா பரவல் காரணமாக விமான நிலையம் மூடப்பட்ட நிலையில் இப்படிப்பட்ட நபர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இந்த பொதுமன்னிப்பு ஜனவரி-31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாய்ப்புகளை பெரும்பாலான மக்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கோவிட் வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக குவைத் 35 நாடுகளுக்கான நேரடியாக விமானங்களை நிறுத்தியுள்ளது, இதற்கு ஒரு முக்கியமான காரணமாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விசாக்களை புதுப்பிக்க அல்லது தாயகம் திரும்புவதற்கான காலக்கெடுவை ஜனவரி 31 வரை உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளதை மக்கள் பயன்படுத்தலாம். ஆனால் பொதுமன்னிப்பு அறிவித்து 50 நாட்கள் கடந்த நிலையிலும் 2500 வெளிநாட்டவர்கள் மட்டுமே இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டனர் என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு  காரணங்களால் கடந்த ஆகஸ்ட் முதல் சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ள நபர்களை கண்டறிய சோதனைகள் நடக்காததும்,குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 130,000 இருந்து 180,000 உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kuwait Workers | Kuwait amnesty | Indian Workers

Add your comments to Search results for Kuwait amnesty

Thursday, July 18, 2019

மலேசியாவில் இன்று சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இன்று சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது:


      

மலேசியாவில் இன்று வியாழக்கிழமை (18/07/2019) குடிவரவு சட்டம் 1959/63 (சட்டம் 155) இன் கீழ் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களுக்கு தானாக முன்வந்து நாடு திரும்புவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் விதத்தில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மலேசியாவில் இந்தியா இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகிறார்கள்.இவற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏஜென்சிகள் மூலம் ஏமாற்றப்பட்டு மற்றும் விசா காலம் முடிந்து சட்டத்திற்கு புறம்பாக தங்கியுள்ளது,உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் தவிக்கும் தொழிலாளர்கள் பயன்படும் விதத்தில் இந்த பொதுமன்னிப்பு இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இது தாயகம் திரும்ப முடியாமல் தவித்துவரும் பலருக்கு மகிழ்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

இந்த பொதுமன்னிப்பு ஆகஸ்டு 1,2019 (01/08/2019) முதல் டிசம்பர் 31,2019 (31/12/2019) வரையில் அமலில் இருக்கும்.கிரிமினல் வழக்குகளை தவிர்த்து, மற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் பயண ஆவணங்கள் தங்களிடம் இருந்தால் குடிநுழைவுத் துறைக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த பொதுமன்னிப்பு பெற அபராதமாக 700 ரிங்கிட் கட்டணத்தில் செய்ய வேண்டும் . ஆவணங்கள் இல்லாதவர்கள் மலேசியாவில் உள்ள தங்கள் நாடுகளின் தூதரகத்துக்குச் சென்று அவற்றை பெற்று வர வேண்டும். பின்னர் இந்த பொதுமன்னிப்பு பெற பதிவு செய்ய வேண்டும் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

நீங்கள் இந்த பொதுமன்னிப்பை பயன்படுத்த பின்வரும் விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்:

1) நீங்கள் ஆகஸ்ட் 1,2019 முதல் டிசம்பர் 31,2019 வரையில் மட்டுமே பயன்படுத்த முடியும்(Amnesty "Back for good" to start from 1 Aug 2019 - 31 Dec 2019)

2)இந்த பொதுமன்னிப்புக்கும் உங்களை அழைத்து சென்ற எந்த முகவர்களும் மற்றும் உங்கள் முதலாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அவர்களுக்கு பணம் உள்ளிட்ட எதையும் செலுத்த வேண்டாம்(No agents involved - Do NOT pay anything to your employers or agents)

3) நீங்கள் பாஸ்போர்ட் மற்றும் அவசரகால பயண சான்றிதழ் ஆகியவற்றை மலேசியாவில் உள்ள அந்தந்த நாடுகளின் தூதரகத்திலிருந்து பெற வேண்டும்(Get your passport and and emergency certificate from respective embassies)

4)  நீங்கள் தாயகம் திரும்ப தேவையான அனைத்து ஆவணங்களும் சரிசெய்த பிறகு 7 நாட்களில தாயகம்  திரும்பும்  விதத்திலுள்ள ஒரு வழி விமான பயணச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும். (One way return ticket (issued within 7 days from application)

5) மலேசியா பணம் 700 ரிங்கிட் அபராத தொகையாக கட்ட வேண்டும்(RM700 fine)

6)நீங்கள் நேரடியாக மலேசியா குடிநுழைவுத் துறையின் அலுவலகம் செல்ல வேண்டும் இந்த பொதுமன்னிப்புக்காக 80 கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.(Go directly to immigration - 80 counters are opened in immigration offices in Peninsular Malaysia). This programme is not for Sabah and Sarawak)

7) டிசம்பர் 31,2019 க்குப் பிறகு ஆவணமற்ற சட்டத்திற்கு புறம்பாக மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டு நபர்களை(தொழிலாளர்களை) கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மலேசியா குடிவரவு துறை மற்றும் காவல்துறை தலைமையில் தீவிரமாக துவங்கும் (Immigration and police will commence crackdown to arrest and detain undocumented migrants after 31 Dec 2019)


மலேசியாவின் இந்த பொதுமன்னிப்பு அரசு சம்பந்தப்பட்ட ஒரே திட்டம் எனவும்
மூன்றாம் தரப்பு இடைத்தரகர்கள் அல்லது முகவரின் ஈடுபாடு இல்லாமல் குடிவரவு துறையால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெளிவு படுத்தினார்







குவைத் மற்றும் வளைகுடா உண்மை செய்திகளை உடனுக்குடன் தமிழில் அறிய குவைத் தமிழ் பசங்க அதிகாரபூர்வ முகத்திரை பக்கத்தை உங்கள் நண்பர்கள் பகிர்வு செய்து தொடர்ந்து எங்களுக்கு ஊக்கம் தரவும்.


Reporting by Kuwait tamil pasanga team.

Add your comments to Search results for Kuwait amnesty

Monday, November 16, 2020

குவைத் இந்திய தூதரகம் சார்பில் Open House நவம்பர்-25 மீண்டும் நடைபெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது:

குவைத் இந்திய தூதரகம் சார்பில் Open House  நவம்பர்-25 மீண்டும் நடைபெறும் அறிவிப்பு வெளியாகியுள்ளது:


Nov-16,2020

குவைத்தில் கொரோனா காரணமாக இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட Open House(குறை கேட்கும்  நிகழ்வு) சந்திப்பு நவம்பர் 25 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் தொடங்கும். நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறும், இந்நிகழ்ச்சியில் தூதர் சிபி ஜார்ஜ் கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு கடந்த ஆகஸ்ட் மாதம் சிபி ஜார்ஜ் புதிய இந்திய தூதராக பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால் கோவிட் பிரச்சினை காரணமாக  செப்டம்பர் மாதம் நிகழ்வு நிறுத்தப்பட்டது. இதையடுத்து வருகிற நவம்பர் 25 அன்று Open House ஆன்லைனில் மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி நிகழ்ச்சியில் தலைப்பு  Embassy Registration Drive & Amnesty(தூதரகம் பதிவு இயக்கி மற்றும் பொது மன்னிப்பு) என்பதாகும்.

குவைத்தில் உள்ள அனைத்து இந்தியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்கள் பெயரிலான  பாஸ்போர்ட், பாஸ்போர்ட் எண், சிவில் ஐடி எண், தொடர்பு எண், குவைத்தில் உள்ள உங்கள் முகவரி, மற்றும் திறந்த இல்லத்தில் உயர்த்த விரும்பும் விஷயம் ஆகியவை மின்னஞ்சல் முகவரி Kuwait@mea.gov.in க்கு அனுப்ப வேண்டும். இதையடுத்து பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கும் Meeting ID மற்றும் பிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாக இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Add your comments to Search results for Kuwait amnesty

Thursday, January 21, 2021

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்ய மிகப்பெரிய சோதனை நடத்த உள்துறை திட்டமிட்டுள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்ய இதுவரை கண்டிராத மிகப்பெரிய சோதனை நடத்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்களை கைது செய்ய இதுவரை கண்டிராத மிகப்பெரிய சோதனை நடத்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள நபர்கள் அபராதம் செலுத்திய பின்னர் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது அவர்களின் குடியிருப்பு அனுமதிப்பத்திரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான காலக்கெடு இந்த மாதம் ஜரவரி 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, நாட்டில் எஞ்சியிருக்கும் குடியிருப்பு சட்ட மீறல் நபர்களை கைது செய்து நாடுகடத்த இதுவரையில் கண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு சோதனை நடத்த உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

சட்டவிரோதமாக குடியிருப்போருக்கான பகுதிநேர பொது மன்னிப்பு கடந்த டிசம்பர் 1 முதல் 31 வரையில் வழங்கப்பட்ட நிலையில்,அதை உள்துறை அமைச்சகம் இந்த ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டது.இருப்பினும், இதுவரை உள்துறை அமைச்சகம் எதிர்பார்த்த குறிப்பிடத்தக்க முன்னெற்றங்கள் எதுவும் சட்டவிரோதமாக உள்ள நபர்களிடமிருந்து கிடைக்கவில்லை என்று அமைச்சகம் கண்டறிந்துள்ளது.பொதுமன்னிப்பு அறிவித்து 50 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை, 5,000 க்கும் குறைவான மக்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்தச் சூழலில்தான், நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய பாதுகாப்பு சோதனைக்கான திட்டத்தை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதை பிப்ரவரி மாதத்திற்குள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறுபட்ட பாதுகாப்பு படையினருக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.தற்போது,நாட்டில் 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சட்டவிரோத தங்கியுள்ளனர் உள்ளனர்.

Kuwait Police | Illegal Immigrant | Partial Amnesty

Add your comments to Search results for Kuwait amnesty