BREAKING NEWS
latest

Stealing MillionRiyals - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Stealing MillionRiyals செய்திகள், கட்டுரைகள், Stealing MillionRiyals புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Monday, January 18, 2021

சவுதியில் மில்லியன் ரியால்களை திருடிய வழக்கில் இரண்டு இலங்கை நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்


(கைதுசெய்ய இருவர் மற்றும் பணம்)

சவுதியின் மக்காவில் இயங்கி வருகின்ற நிறுவனங்களில் ஒன்றிலிருந்து ஒரு மில்லியன் ரியால்கள் திருடப்பட்டதாக, மக்கா காவல்த்துறைக்கு புகார் அறிக்கை கிடைத்தது, இதையடுத்து நடத்தப்பட்ட தேடல் மற்றும் விசாரணைகளுக்கு பிறகு பின்னர், ஷரியா காவல் நிலைய போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். இருவருமே இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும்,அதே நிறுவனத்தில் வேலை செய்துவந்த நபர்கள் என்பதும் தெரியவந்துள்ளது..

உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணைக்கு பிறகு தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், அவர்களால்  திருடப்பட்ட தொகையான ஒரு மில்லியன் ரியால்கள் அட்டைப் பெட்டிகளுக்குள் மறைத்து வைத்ததாகவும்,அதை கைப்பற்றிய சட்ட நடைமுறைகளை நிறைவு செய்த பிறகு மேல்நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக,அங்கிருந்த வரும் தினசரி நாளிதழ் ஒன்று அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது.


Srilankans Arrested | Saudiarabia-Tamil | Stealing MillionRiyals

Add your comments to Search results for Stealing MillionRiyals