ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(நேற்று) இரவு முதல் மீண்டும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதன் மூலம், சில முக்கிய சாலைகளில் வேக கட்டுப்பாடுகளை விதித்து அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அபுதாபி-துபாய் முகமது பின் ரஷீத் சாலை, அல் சாமிஹ் - துபாய் மக்தூம் பின் ரஷீத் சாலை, அபுதாபி - அல் ஐன் சாலை, அல் ஃபயா சாலை (டிரக் சாலை), அபுதாபி - சுயஹான் சாலை ஆகியவை இந்த கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த இடங்களில் அதிகபட்ச வேக வரம்பு 80 கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் உள்ள டிஜிட்டல் தகவல் பலகைகள் வழியாக வெளியாகும் அறிவிப்புகளை பின்பற்றுமாறு அபுதாபி போலீசார் டிரைவர்களைக் கேட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட் வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை மாலையில் 12 மணி நேர எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால் புதன்கிழமை(இன்று) காலை நிலவரப்படி, இந்த அறிவிப்பு முக்கியமாக அபுதாபி, அல் ஐன் மற்றும் அல் தஃப்ரா பகுதிகளை நோக்கமாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருந்தனர்.
அபுதாபி போலீசார் நேற்று முதல் பனிமூட்டம் நிறைந்த நாட்களில் பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். இந்த நேரத்தில் கனரக வாகனங்களை ஓட்டினால் 400 திர்ஹாம் அபராதமும் மற்றும் நான்கு போக்குவரத்து கருப்புபட்டை புள்ளிகளையும் விதிக்கும். சாலைகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடைய நேற்று காலையில் பலத்த பனிமூட்டம் காரணமாக அபுதாபியின் Al- Mafraq பகுதியில் 19 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்
UAE Weather | Today Morning | Traffic Rules