BREAKING NEWS
latest

Today Morning - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Today Morning செய்திகள், கட்டுரைகள், Today Morning புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, February 11, 2024

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் 11 பேர் வரையில் காயமடைந்தனர்

Image: தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது

குவைத்தில் இன்று(11/02/23 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Al-Bidaa மற்றும் Salmiya-வைச் சேர்ந்த தீயணைப்புபடை வீரர்கள் பிரிவு, தேடல் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து சால்மியா பகுதியில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.

Image : மீட்பு நடவடிக்கையில் வீர்கள்

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் 11 நபர்களுக்கு மேல் காயங்கள் ஏற்பட்டன எனவும், மீட்கப்பட்ட அனைவருக்கும் காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர்கள் மற்றும் இவர்களுடைய நிலைமை குறித்த கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fire Accident | Salmiya Apartment | Today Morning

Add your comments to Search results for Today Morning

Wednesday, January 20, 2021

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் மூடுபனி, 400 திர்ஹாம் வரை அபராதம் எச்சரிக்கை

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(நேற்று) இரவு முதல் மீண்டும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது.  இதன் மூலம், சில முக்கிய சாலைகளில் வேக கட்டுப்பாடுகளை விதித்து அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அபுதாபி-துபாய் முகமது பின் ரஷீத் சாலை, அல் சாமிஹ் - துபாய் மக்தூம் பின் ரஷீத் சாலை, அபுதாபி - அல் ஐன் சாலை, அல் ஃபயா சாலை (டிரக் சாலை), அபுதாபி - சுயஹான் சாலை ஆகியவை இந்த கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த இடங்களில் அதிகபட்ச வேக வரம்பு 80 கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் உள்ள டிஜிட்டல் தகவல் பலகைகள் வழியாக வெளியாகும் அறிவிப்புகளை பின்பற்றுமாறு அபுதாபி போலீசார் டிரைவர்களைக் கேட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட் வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை மாலையில் 12 மணி நேர எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால் புதன்கிழமை(இன்று) காலை நிலவரப்படி, இந்த அறிவிப்பு முக்கியமாக அபுதாபி, அல் ஐன் மற்றும் அல் தஃப்ரா பகுதிகளை நோக்கமாகக் கொண்டது என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருந்தனர்.

அபுதாபி போலீசார் நேற்று முதல் பனிமூட்டம் நிறைந்த நாட்களில் பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர்.  இந்த நேரத்தில் கனரக வாகனங்களை ஓட்டினால் 400 திர்ஹாம் அபராதமும் மற்றும் நான்கு போக்குவரத்து கருப்புபட்டை புள்ளிகளையும் விதிக்கும். சாலைகள் மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடைய நேற்று காலையில் பலத்த பனிமூட்டம் காரணமாக அபுதாபியின் Al- Mafraq பகுதியில் 19 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்

UAE Weather | Today Morning | Traffic Rules

Add your comments to Search results for Today Morning