BREAKING NEWS
latest

Tuesday, February 13, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : இன்றைய தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(13/02/24) செவ்வாய்க்கிழமை  தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.35 KD
  2. 22K= 19.25 KD 
  3. 21K= 18.57 KD 
  4. 18K= 15.91 KD 

 (பதிவு மாலை 06:15 PM மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத்தின் இன்றைய Exchange மதிப்புகளை இங்கே அறியலாம்

Image : இன்றைய பணப்பரிமாற்ற மதிப்பு

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(13/02/24) செவ்வாய்க்கிழமை இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 268.097
  • இலங்கை 1KD = 1009.082
  • நேபாளம் 1KD = 427.350
  • பிலிப்பைன்ஸ் 1KD = 180.668
  • பாகிஸ்தான் 1KD = 902.527

(பதிவு  மாலை 06:00 மணி நிலவரப்படி மற்றும் சில நேரம் Exchange நிறுவனங்களை பொறுத்து இங்கு குறிப்பிட்டுள்ள மதிப்பில் சிறிய மாற்றங்கள் வரலாம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Exchange | Dinar Rate | Daily Update

Add your comments to

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

தமிழக இளைஞர் தவறி விழுந்ததில் மாலத்தீவில் உயிரிழந்தார்

Image : உயிரிழந்த ராஜேஷ்(வயது-20)

மாலத்தீவில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த துயர செய்தி தற்போது வெளியாகியுள்ளது

மாலத்தீவு தலைநகர் மாலியில் இந்தியா,தமிழகம், மயிலாடுதுறையை அடுத்த சீர்காழியைச் சேர்ந்த ராஜேஷ்(வயது-20). அவர் இன்று(13/02/24) காலையில் அந்நாட்டின் சாந்தினி மாகுவில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் வேலை செய்யும் போது சீலின் உடைந்து 10-வது மாடியில் இருந்து தவறி படி கட்டுகளுக்கு இடையேயுள்ள இடைவெளி வழியாக தரைத்தளத்திலேயே விழுந்துள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த மீட்பு குழுவினர் கவலைக்கிடமாக இருந்த அவரை மீட்டு அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையின்(IGMH) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றன. இந்த செய்தியை அங்குள்ள தினசரி செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Maldives News | Indian Worker

Add your comments to

மரணதண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டனர்

Image : கடற்படை வீரர்கள் இந்தியா வந்தடைந்த காட்சிகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. கத்தார் அமீர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார். இவர்கள் கடந்த ஆகஸ்ட் 30, 2022 அன்று உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்ட முடிவை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவேற்றுள்ளது. அதேபோல் கடந்த அக்டோபர் 26,2023 அன்று அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு,பின்னர் அதை சிறை தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில். இருநாட்டு வெளியுறவுத்துறையின் தொடர் பேச்சுவார்த்தை அடிபடையில் இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 11°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(13/02/24) செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 11°C அளவுக்கும் அதிகபட்சமாக 24°C அளவுக்கும் இருக்கும், தென்மேற்குக் காற்று, மணிக்கு 06-26 கிமீ வேகத்தில் வீசும் எனவும், சில சிதறிய மேகங்கள் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், தென்கிழக்கு காற்று மணிக்கு 08-30 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் மற்றும் சில சிதறிய மேகங்கள் ஆங்கங்கே தோன்றும், சில பகுதிகளில் பனிமூட்டம் உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

Sunday, February 11, 2024

முஸ்லீம்கள் புனித மாதமாக கருதும் ரமாலான் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே

சவுதி அரேபியா ஷஃபான் மாதம் துவங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Image credit: பிறை தென்பட்ட காட்சி

முஸ்லீம்கள் புனித மாதமாக கருதும் ரமாலான் துவங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே

சவுதி அரேபியாவில் ஹிஜ்ரி 1445 ஆம் ஆண்டின் ரஜப் மாதம் 29 ஆம் நாள் நேற்றுடன் முடிவடையும் நிலையில், நேற்றைய தினம் ஷஃபான் மாதத்திற்கான பிறை தேடும் நாளாக கருதப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு ஜித்தாவில் தொலை நோக்கி வழியாக ஆய்வு செய்த போது பிறை தென்பட்டதன் அடிப்படையில், இன்று (11-2-2024) ஞாயிற்றுக்கிழமை ஷஃபான் மாதத்தின் முதல் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரமலான் துவங்க இந்த ஒரு மாதம் மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பிறை தென்பட்ட கூடுதல் புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது

Image credit: பிறை தேடும் காட்சி

Image credit: பிறை தேடும் காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

Image credit: பிறை தென்பட்ட காட்சி

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Ramadan 2024 | Gulf Ramadan |

Add your comments to

குவைத்தில் இன்று ஆங்காங்கே கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது

குவைத்தில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Image : Al Mutlaa பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள காட்சி

குவைத்தில் இன்று ஆங்காங்கே கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது

குவைத் முழுவதும் இன்று(11/02/24) ஞாயிற்றுக்கிழமை அ‌திகாலை முதல் நாட்டின் வடக்கு பகுதிகளில் பலத்த மழை பெய்ய துவங்கியுள்ள நிலையில் நாட்டின் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும், அதனுடன் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், இதன் விளைவாக கடலோர கரையோரத்தில் 7அடிக்கு மேல் அலைகள் உயரும் மற்றும் தெரிவுநிலை குறைவு ஏற்படலாம். 15 மணி நேரம் நீடிக்கும் இந்த வானிலை எச்சரிக்கை இரவு ஒன்பது மணிக்கு முடிவடையும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தினங்களுக்கு முன்பு இது தொடர்பான அறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ள இருந்த நிலையில் இந்த அறிவிப்பை வானிலை மையம் இன்று மீட்டும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து குவைத் உள்துறை அமைச்சகம் எந்தவிதமான அவசரகால உதவிக்கும் நாட்டில் வசிக்கின்ற குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் 112 என்ற எண்ணில் அழைக்கவும் அறிவுறுத்தல் செய்துள்ளது. குவைத் மட்டுமன்றி சவுதி, ஓமன், அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கும் இதை வானிலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒமானில் பெரும்பாலான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத்தின் இன்றைய Exchange மதிப்புகளை இங்கே அறியலாம்

Image : இன்றைய பணப்பரிமாற்ற மதிப்பு பதிவு

குவைத்தின் இன்றைய துல்லியமான பணப்பரிமாற்ற மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(11/02/24) ஞாயிற்றுக்கிழமை இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 269.180
  • இலங்கை 1KD = 1016.002
  • நேபாளம் 1KD = 430.480
  • பிலிப்பைன்ஸ் 1KD = 181.160
  • பாகிஸ்தான் 1KD = 910.750

(பதிவு காலை 10:30 மணி நிலவரப்படி மற்றும் சில நேரம் Exchange நிறுவனங்களை பொறுத்து இங்கு குறிப்பிட்டுள்ள மதிப்பில் சிறிய மாற்றங்கள் வரலாம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Exchange | Dinar Rate | Daily Update

Add your comments to

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தில் 11 பேர் வரையில் காயமடைந்தனர்

Image: தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு

குவைத்தின் சால்மியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது

குவைத்தில் இன்று(11/02/23 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Al-Bidaa மற்றும் Salmiya-வைச் சேர்ந்த தீயணைப்புபடை வீரர்கள் பிரிவு, தேடல் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து சால்மியா பகுதியில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கரமான தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.

Image : மீட்பு நடவடிக்கையில் வீர்கள்

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் 11 நபர்களுக்கு மேல் காயங்கள் ஏற்பட்டன எனவும், மீட்கப்பட்ட அனைவருக்கும் காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்ற செய்தி சற்றுமுன் வெளியாகியுள்ளது. இவர்கள் எந்த நாட்டவர்கள் மற்றும் இவர்களுடைய நிலைமை குறித்த கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Fire Accident | Salmiya Apartment | Today Morning

Add your comments to

Friday, February 9, 2024

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை தனது கட்டுரை மூலம் முன்னிலைப்படுத்திய குடிமகனான சமூக பார்வையாளர் ஆதில் அவர்கள்

Image : டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால்

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் பல வருடங்கள் கழித்து வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்க துவங்கியுள்ளதன் மூலம் அரசின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் முக்கிய ஒருவர் குவைத் குடிமகனான கட்டுரையாளர் மற்றும் சமூக பார்வையாளர் டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால் ஆவார். இது தொடர்பாக தினசரி நாளிதழில் அவர் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றுமில்லாத பாலைவனத்தை தற்போது நாம் பார்க்கிற இந்த அழகான தோற்றத்திற்கு மாறுவதற்கு பின்னால் நமது விருந்தினராக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கை என்றும் மறக்கக்கூடாது என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார்.

தன்னுடைய உயிரிலும் மேலான சொந்தங்களை நாட்டில் விட்டுவிட்டு தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக அண்ணம் தேடி நம் நாட்டுக்கு வந்த அரேபியர்களானவர்கள் மற்றும் அரபிகள் அல்லாத வெளிநாட்டினர் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை குவைத்திகளான நமக்காக மாற்றி வைத்த தியாகிகள் ஆவார்கள். நாம் வசிக்கும் வீடுகள், வாகனங்களை ஓட்டும் சாலைகள், பாலங்கள் எல்லாம் வெளிநாட்டினரின் கடின உழைப்பின் பலன் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான், எங்களைப் போலவே, வேலை முடிந்ததும் வீட்டுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வாழ்வது வெளிநாட்டினரான அவர்ளுக்கு உரிமை மற்றும் இதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது குடிமக்களான நமது பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் விஷயங்களை தவறாக மதிப்பிடும் குடிமக்களும் உள்ளனர் என்பதையும் டாக்டர் அடில் தெளிவு படுத்துகிறார்.

வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை அழைத்து அனுமதி வழங்கியது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களுக்கு சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும். அவர்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளில் இதை பலனை குடிமகனான நாம் பார்த்தால் தெரியும். மேலும் வெளிநாட்டினர் அதிகளவில் குடும்ப விசா போன்றவற்றில் நாட்டிற்க்கு வருவது வணிக ரீதியாகவும், கட்டுமான துறையிலும் , சுற்றுலாத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்க ஆட்கள் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றில் பல பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது வருத்தமளிக்கிறது.

தற்போது பேச்சிலர் பட்டதாரிகள் தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினரை அழைத்து வந்ததும் குடியிருப்புகளுக்கு மாறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும், இது இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் அரசின் தாராள மனப்பான்மை, நாட்டில் உள்ள தனியார் கல்வித்துறைக்கும் பலன் தரும். எனவே, அரசின் புதிய முடிவு வெளிநாட்டவர்களுக்கும் பலன் தருவது போல் குவைத்துக்கும் பயன் தரும் என்று நீண்ட பட்டியலிட்டு முனைவர் ஆதில் ஃபஹத் அல் மிஷாலின் கட்டுரை முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Family Visa | Visit Visa

Add your comments to