BREAKING NEWS
latest

Kuwait Heath - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Heath செய்திகள், கட்டுரைகள், Kuwait Heath புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, January 19, 2021

குவைத்தில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறப்பது குறித்து அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடைபெ‌ற்றது

குவைத்தில் கோவிட் தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றி பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கல்வித்துறை அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் இணைந்து நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். கல்வித்துறை அமைச்சர் டாக்டர். அலி-அல்-முதாஃப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் முன்னெடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக உள்ளூர் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அமைச்சகம் கூட்டத்தில் விரிவாக விவாதித்ததாகவும் ,நாட்டில் படிப்படியாக பள்ளிகளைத் மீண்டும் தொடங்குவதற்கான முதல் படியாக இந்த சந்திப்பு இருந்தது எனவும், இந்த விஷயத்தை விரிவாக ஆய்வு செய்ய அடுத்த வாரம் மீண்டும் இரண்டு துறைகளின் அதிகாரிகள் மீண்டும் சந்திப்பதாக தெரிவித்தனர். 

இதற்கிடையில், நாட்டில் நிலவும்  தற்போதைய நிலைமையை மதிப்பிட்ட பின்னரே  பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதரத்துறையின் வல்லுநர்கள் கல்வித்துறையில் உள்ள வல்லுநர்கள் மற்றும்  மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட அனைவருடனும் கலந்தாலோசித்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



Kuwait School | Reopen Soon | Kuwait Heath

Add your comments to Search results for Kuwait Heath

Monday, January 18, 2021

குவைத்தில் நுழையும் பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் ஒரு வாரமாக குறையும் வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது



வெளிநாட்டிலிருந்து குவைத்துக்கு வரும் பயணிகளின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்த(குறைக்க) சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கலாம் என்று, சம்மந்தப்பட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் அரபு செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் இது தொடர்பான ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று செய்தித்தாள் கூறியுள்ளது.குவைத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு  பாதுகாப்பு விதிகளின்படி,வெளிநாட்டு பயணிகள் குவைத்தில் நுழைந்தால் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

முன்னதாக, பி.சி.ஆர் சான்றிதழுடன் ஒவ்வொரு விமானங்கள் மூலம் குவைத் விமான நிலையத்தில்  வந்து தரையிறங்கும் பயணிகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே தோராயமாக தேர்வு செய்யப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் இரண்டு வாரங்கள் முடிக்கும் விதத்தில் விதிமுறை இருந்தது. ஆனால் மரபணு மாற்றப்பட்ட கொரோனா பரவல் துவங்கிய பிறகு ஆதாவது தற்போது, ​​விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதையடுத்து புதிய அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் பயணியின் பரிசோதனை முடிவு எதிர்மறையாக(Nagative) அமைந்தால், ஒரு வாரத்திற்குள் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இதன் முடிவும் மீண்டும் எதிர்மறையாக(Nagative) இருந்தால், தனிமைப்படுத்தல் அன்றுடன் காலாவதியாகும் ஒரு புதிய முறையை சுகாதார அமைச்சகம் செயல்படுத்தப் போகிறது. இதன் மூலம் பயணிகள் தனிமைப்படுத்தலை 14 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்க முடியும்.

இருப்பினும், விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் பயணியின் பரிசோதனை முடிவு நேர்மறையாக(Positive) அமைத்தால் இரண்டு வாரங்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்க வேண்டும். மேலும் விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் எதிர்மறையான முடிவு கண்டறியப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எத்தனை நாட்களாக....??? சுருக்குவது என்ற இறுதி முடிவை  சுகாதரத்துறை எடுத்த பிறகு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், துபாய் போன்ற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு குவைத் திரும்பும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் நிம்மதியடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Kuwait Heath | Reduce Quarantine | PCR Test

Add your comments to Search results for Kuwait Heath

Friday, January 15, 2021

குவைத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்தவர்கள் மீண்டும், நாட்டில் நுழையும் பொது இந்த சலுகைகள் வழங்கப்படும்


(Kuwait heath Minister)

குவைத்திலிருந்து கொரோனா தடுப்பூசி எடுக்கொண்ட ஒருவர் மீண்டும் குவைத்தில் நுழையும் போது, மற்ற பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் சான்றிதழ் சமர்பித்தல் மற்றும் இரண்டு வார தனிமைப்படுத்தலில் ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இது ஜூன் முதல் மட்டுமே சாத்தியமாகும் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஆனால் கோவிட் தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து பெற்று நாட்டிற்குள்(குவைத்திற்குள்) வருபவர்களுக்கு இப்போதைக்கு இந்த நிபந்தனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படாது. தற்போது, ​​குவைத் உட்பட பல நாடுகள் தடுப்பூசியின் இரண்டு டோஸ் மருந்துகளை எடுத்துக்கொண்ட நபர்களுக்கு தடுப்பூசி எடுத்ததற்காக சான்றிதழ்களை வழங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் வெளிநாடுகளில் கொரோனா தடுப்பூசிய எடுக்கொண்ட சான்றிதழ் பெற்றிருந்தாலும், அதை பயன்படுத்திய மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு,பிற நாடுகளிலிருந்து தடுப்பூசி சான்றிதழ்களுடன் நாட்டிற்குள் வருபவர்களுக்கு பி.சி.ஆர் சான்றிதழ் சமர்பித்தல் மற்றும் இரண்டு வார தனிமைப்படுத்தலில் ஆகியவற்றில் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி எடுக்கொண்ட சான்றிதழ்கள் மோசடி செய்யப்படுவதைத் தடுக்க உலகளவில் அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.மேலும் தடுப்பூசிக்கு அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஒப்புதல் அளிக்க உலகளாவிய மின்னணு சான்றிதழ் வழங்கும் அமைப்பு தேவை. இதுபோல் சான்றிதழின் உண்மை தன்மையினை சரிபார்க்க அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் விதத்தில் பொதுவான மின்னணு தளம்  ஒன்றும் தேவையாக உள்ளது. இவை அனைத்தும் நடைமுறையில் வருவதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத் அரசு சார்பில் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடித்து, கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் இரண்டாம் கட்ட டோஸ்  தடுப்பூசி மருந்து எடுத்துக்கொண்ட நபர்களுக்கு நேற்று முதல் மின்னணு சான்றிதழ்களை வழங்கும் பயணிகள் தொடங்கியுள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் அறிவித்தார்.

Add your comments to Search results for Kuwait Heath

Saturday, January 23, 2021

குவைத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட இந்திய தம்பதியினர் அடுத்தடுத்து உயிழந்தனர்

குவைத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட இந்திய தம்பதியினர் அடுத்தடுத்து உயிழந்தனர்;இருவரும் மிஷிரிஃப் கள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

குவைத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட இந்திய தம்பதியினர் அடுத்தடுத்து உயிழந்தனர்

குவைத்தில் கோவிட் வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததவர்கள் இந்திய,கேரளா மாநிலம், மலப்புரம், திரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தம்பதியினர் என்ற தகவல் வெளியாகியுள்ளன. கோவிட் நோய்த்தொற்று காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்த கணவர் அப்துல் ரஹ்மான்(வயது- 65) நேற்று(22/01/21) மிஷிரிஃப் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதுபோல் கோவிட் நோய்த்தொற்று காரணமாக சிகிச்சையில் இருந்தபோது அவரது மனைவி சுஹராபி அவர்கள் இந்த மாதம் 9-ஆம் தேதி இதை மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார் என்ற துயரமான தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தம்பதியினர் குவைத்தில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் முதலில் சிகிச்சை பெற்றனர், பின்னர் நோய்தொற்று உறுதியான நிலையில் ஃபர்வானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு வைத்து நோய்த்தொற்று தீவிரமாக நிலையில் இருவரும் மிஷிரிஃப் கள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்துல் ரஹ்மான் ஃபர்வானியா அல்-உம்மா டிராவல் ஏஜென்சியில் பணியாற்றியவர். இவர்களது குழந்தைகள் செரின் மற்றும் நீலுஃபா ஆகியோர் தாயகத்தில் உள்ளனர். இறந்த ரஹ்மான் குவைத்தில் இயங்கும் கே.கே.எம்.ஏ அமைப்பின் கைதன் கிளையின் உறுப்பினர் என்றும், இருவரின் உடல்களும் சர்வதேச சுகாதாரதுறை நெறிமுறைகளின்படி குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

Indian Couple | Covid19 Infection | Kuwait Heath

Add your comments to Search results for Kuwait Heath