BREAKING NEWS
latest

PCR Test - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் PCR Test செய்திகள், கட்டுரைகள், PCR Test புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Tuesday, August 24, 2021

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் செப்டம்பர் 1 முதல் ஓமானுக்குள் நுழையலாம்;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியர்கள் உள்ளிட்ட தற்காலிகமாக பயணத்தடை விதிக்கப்பட்ட 18 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் செப்டம்பர்-1,2021 முதல் ஓமானுக்குள் நேரடியாக நுழையலாம்

Image : Beautiful Oman

இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் செப்டம்பர் 1 முதல் ஓமானுக்குள் நுழையலாம்;விதிமுறைகள் பின்வருமாறு

இந்தியா,பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் உட்பட 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நேரடியாக ஓமானில் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை ஓமான் நீக்கியதை அடுத்து வெளிநாட்டவர்கள் மீண்டும் நாட்டில் நுழைய முடியும். நேற்று(24/08/21) ஓமான் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிக்கையின்படி, செப்டம்பர்-1,2021 உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்த புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும். ஓமான் குடிமக்கள், ஓமானில் வேலை செய்துவந்த வெளிநாட்டவர்கள், ஓமான் விசா வைத்திருப்பவர்கள், ஓமானுக்குள் நுழைவதற்கு விசா தேவையில்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள்மற்றும் ஓமானில் நுழைய On- Arrival பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று அனைத்து தரப்பினரும் கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க நாட்டிற்குள் நுழையலாம்.

அனைத்து பயணிகளும் ஓமனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி இரண்டு டோஸ் எடுத்திருக்க வேண்டும். அதுபோல் சில தடுப்பூசி ஒரு டோஸ் எடுத்தால் போதும் என்றவர்கள் அதை எடுத்தால் போதுமானதாகும். பயணிகள் வரும்போது QR-CODE உள்ள தடுப்பூசி சான்றிதழை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கடைசி டோஸ் தடுப்பூசி ஓமானுக்கு வரும் தேதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியல் ஓமன் சுகாதார அமைச்சகத்தால் விரைவில் வெளியிடப்படும். பயணத்திற்கு முன் எடுக்கப்பட்ட எதிர்மறை Rapid-Test பரிசோதனை சான்றிதழ் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு ஓமான் வந்தவுடன் தனிமைப்படுத்தல் தேவையில்லை இந்த பரிசோதனை முடிவிலும் QR-CODE இருக்க வேண்டும்.

அதேபோல் சர்வதேச விமானங்களில் Transit உட்பட எட்டு மணி நேரத்திற்கும் அதிகமான போக்குவரத்து பயண நேரத்துடன் வருபவர்கள், பயணத்தின் 96 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் இந்தியா உள்ளிட்ட எட்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரம் உள்ளவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR பரிசோதனை எதிர்மறை சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். எதிர்மறை PCR பரிசோதனை முடிவு இல்லாமல் வரும் பயணிகள் ஓமான் வந்தவுடன் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் வரும் வரை மின்னணு கண்காணிப்பு சாதனத்தை அணிந்து(Tracking Device) தனிமைப்படுத்தல் செய்ய வேண்டும். தொடர்ந்து PCR பரிசோதனை முடிவு நேர்மறையாக இருந்தால், நோயாளி பரிசோதனை செய்யப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்கு Isolation-யில் இருக்க வேண்டும். அதுபோல் ஓமன் வந்தவுடன் நடத்தப்பட்ட PCR பரிசோதனையின் முடிவு நேர்மறையாக(Positive) இருந்தாலும், முன்பு நாட்டிற்கு வெளியே கோவிட் பாதிக்கப்பட்டு பின்னர் கோவிட் குணமடைந்தவராக இருந்தால் தனிமைப்படுத்தல் செய்ய வேண்டியதில்லை. ஆனால் கோவிட் உறுதிசெய்யப்பட்ட நேரத்தில், அந்த நாட்டில் தனிமைப்படுத்தல் செய்து அதை நிறைவடைந்ததற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

Oman Indians | Return Oman | September Oman

Add your comments to Search results for PCR Test

Tuesday, August 3, 2021

ஆகஸ்டு-5 முதல் இந்தியர்கள் உள்ளிட்டவர்களில் Validity Work Permit மற்றும் இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி அமீரகம் வரலாம்

அமீரகத்தில் ஆகஸ்டு-5 முதல் வெளிநாட்டினர் நுழைய சற்றுமுன் அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியாகியுள்ளது

Image credit: Emirates Airlines

ஆகஸ்டு-5 முதல் இந்தியர்கள் உள்ளிட்டவர்களில் Validity Work Permit மற்றும் இரண்டு டோஸ் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எடுத்தவர்கள் நிபந்தனைகளை பின்பற்றி அமீரகம் வரலாம்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆகஸ்ட்-5,2021 முதல் அதாவது நாளை மறுநாள் முதல் Uae Validity Work Permit(குடியிருப்பாளர்) உள்ளவர்கள் அனைவருமே நிபந்தனைகள் பின்பற்றி வரலாம் என்று நாட்டின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையமும் மற்றும் தேசிய அவசரநிலை நெருக்கடி பேரிடர் மேலாண்மை ஆணையமும் இன்று(03/08/21) செவ்வாய்க்கிழமை சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல்- 24,2021 முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் அமீரகம் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்றரை மாதங்களுக்கு பிறகு இன்று தடை நீக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறுபட்ட நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் அமீரகத்தில் நுழைய முடியாமல் நிலவிவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தடை விதிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருந்து பின்வரும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட 6 நாடுகள் மீதான தடையினை நீக்கியுள்ளாதாகவும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி ஆகஸ்டு-5,2021 முதல் அமீரகத்தில் நுழைய நிபந்தனைகள் பின்வருமாறு:

  1. Validity Work Permit  உள்ள நபராக இருக்க வேண்டும்(இ‌வ்வளவு நாட்களுக்குள் Validity விசா உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிக்கையில் எங்கும் குறிப்பிடவில்லை, 6 மாதங்கள் அல்லது 3 மாதங்கள் கடந்தவர்கள் வரலமா என்று சிலர் கேள்வி எழுப்பலாம் அதனால் இந்த விளக்கம்)
  2. அமீரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர், அதவாது இர‌ண்டாவது டோஸ் எடுத்து 14 நாட்கள் கடந்தவராக இருக்க  வேண்டும். இந்தியாவின் கோவிட்சீல்ட் அமீரக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும்.
  3. துபாயில் வசிக்கின்றவர்கள் என்றால்  ICA தளத்தில் பதிவு செய்தும், அபுதாபி உள்ளிட்ட மற்ற எமிரேட்களில் வசிப்பவர்கள் GDRFAD தளத்தில் பதிவு செய்து அதிகாரிகளிடம் புறப்படுவதற்கு முன்பு அனுமதி பெறவேண்டும். 
  4. இந்தியாவின் சார்பில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் QR-CODE உடன், உங்கள் பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவை தெளிவாக இடம்பெற்றிருக்க வேண்டும். இதை பயணத்தின் போது உங்கள் கைவசம் வைத்திருக்கவும் வேண்டும்.
  5. முன்னர் அறிவிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட PCR Test Negative சான்றிதழ் மற்றும் புறப்படும் விமான நிலையத்தில் வைத்து 4 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்படும் Rapid Test எடுத்துக்கொண்ட Negative சான்றிதழ் ஆகியவையும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  6. அமீரக விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, விமான நிலையத்தில் வைத்து மற்றொரு PCR பரிசோதனை மீண்டும்  குடியிருப்பாளருக்கு நடத்தப்படும்(பரிசோதனை முடிவு வெளிவர 12 மணிநேரம் முதல் ஒரு நாட்கள் வரையில் ஆகலாம், சில நேரங்களில் அதுவரையில் Self Quarantine இருக்க வேண்டியது இருக்கும்)
  7. உங்கள் விசா காலாவதி பற்றி சந்தேகம் உள்ளவர்களுக்கான பதில். நாளைய தினம் உங்கள் விசா முடிகிறது என்று வைத்து கொள்ளுங்கள். நீங்கள் இன்றைய தினம் வரையில் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி அமீரகத்திற்கு பயணிக்க முடியு‌ம் அதில் எந்த பிரச்சனையும் இருக்காது.
  8. இதுபோல் Visit Visa வைத்திருப்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபராக இருந்தாலும்  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்களுக்கு அனுமதி வழங்கி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேநேரத்தில் அமீரகத்தில் பணிபுரியும் கீழ் குறிபிட்ட பிரிவினர்கள் மட்டும் தடுப்பூசி போடப்படாதவர்களாக இருந்தால் மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பின்பற்றி வரலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறையில் வேலை செய்கின்ற தொழில்நுட்ப(டெக்னீசியன்கள்) வல்லுநர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மாணவர்கள், மனிதாபிமான அடிப்படையில் அமீரகம் திரும்ப வாய்ப்புள்ள நபர்கள் ஆனால் இவர்களிடம் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி இருக்க வேண்டும், பெடரல் மற்றும் Local Government Agencies யில் பணிபுரிபவர்களும் நாடு திரும்பலாம். அதேபோல் துபாயில் எக்ஸ்போ 2020 யின் பங்கேற்பாளர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியின் பான்சர்கள் ஆகியோருக்கும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Add your comments to Search results for PCR Test

Monday, January 18, 2021

குவைத்தில் நுழையும் பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் ஒரு வாரமாக குறையும் வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது



வெளிநாட்டிலிருந்து குவைத்துக்கு வரும் பயணிகளின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்த(குறைக்க) சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கலாம் என்று, சம்மந்தப்பட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி உள்ளூர் அரபு செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் இது தொடர்பான ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று செய்தித்தாள் கூறியுள்ளது.குவைத்தில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா தடுப்பு  பாதுகாப்பு விதிகளின்படி,வெளிநாட்டு பயணிகள் குவைத்தில் நுழைந்தால் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.

முன்னதாக, பி.சி.ஆர் சான்றிதழுடன் ஒவ்வொரு விமானங்கள் மூலம் குவைத் விமான நிலையத்தில்  வந்து தரையிறங்கும் பயணிகளில் 10 சதவீதம் பேர் மட்டுமே தோராயமாக தேர்வு செய்யப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அனைவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட காலம் இரண்டு வாரங்கள் முடிக்கும் விதத்தில் விதிமுறை இருந்தது. ஆனால் மரபணு மாற்றப்பட்ட கொரோனா பரவல் துவங்கிய பிறகு ஆதாவது தற்போது, ​​விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வைத்து கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இதையடுத்து புதிய அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் பயணியின் பரிசோதனை முடிவு எதிர்மறையாக(Nagative) அமைந்தால், ஒரு வாரத்திற்குள் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, இதன் முடிவும் மீண்டும் எதிர்மறையாக(Nagative) இருந்தால், தனிமைப்படுத்தல் அன்றுடன் காலாவதியாகும் ஒரு புதிய முறையை சுகாதார அமைச்சகம் செயல்படுத்தப் போகிறது. இதன் மூலம் பயணிகள் தனிமைப்படுத்தலை 14 நாட்களில் இருந்து 7 நாட்களாக குறைக்க முடியும்.

இருப்பினும், விமான நிலையத்தில் நடத்தப்படும் பரிசோதனையில் பயணியின் பரிசோதனை முடிவு நேர்மறையாக(Positive) அமைத்தால் இரண்டு வாரங்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடிக்க வேண்டும். மேலும் விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் எதிர்மறையான முடிவு கண்டறியப்பட்ட பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எத்தனை நாட்களாக....??? சுருக்குவது என்ற இறுதி முடிவை  சுகாதரத்துறை எடுத்த பிறகு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், துபாய் போன்ற நாடுகளை தற்காலிக புகலிடமாக கொண்டு குவைத் திரும்பும் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் நிம்மதியடைவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Kuwait Heath | Reduce Quarantine | PCR Test

Add your comments to Search results for PCR Test

Thursday, August 19, 2021

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்கின்ற இன்டிக்கோ விமானங்களுக்கு ஒரு வாரத்திற்கு அமீரகம் திடிரென தடை விதித்துள்ளது

Image credit: Indigo Air

இந்தியாவில் இருந்து அமீரகம் செல்ல இன்டிக்கோ விமானங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இண்டிகோ விமானங்களுக்கு ஆகஸ்ட்-24,2021(செவ்வாய்கிழமை) வரை திடிரென தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் விமான நிலையத்தில் வைத்து 6 மணிநேரத்திற்கு முன்பு எடுக்க வேண்டிய Rapid-Test எடுக்காமல் பயணிகளை துபாய்க்கு அழைத்து சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த நாட்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகள் Refund வேண்டி விண்ணபிக்கவோ அல்லது மற்றொரு தேதிக்கு கட்டணம் இல்லாமல் பயணச்சீட்டை மாற்றிக் கொள்ளவோ செய்யலாம் என்று விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் வருகின்ற பயணிகள் GDRFAD அனுமதி பெறுவதுடன், 48 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட PCR பரிசோதனையும் மற்றும் 6 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட Rapid-Test பரிசோதனையும் தேவை என்பது குறி்ப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் தான் 4 மணிநேரத்திற்கு முன்பு Rapid-Test எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை 6 மணிநேரத்திற்கு முன்பு என்று திருத்திய புதிய அறிவிப்பை அமீரகம் சார்பில் வெளியிட்டுள்ளது. பயணிகள் புறப்படும் விமான நிலையங்களில் ஏற்படும் நெரிசலை குறைக்க இந்த தளர்வு புதிதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு பரிசோதனையிலும் Negative யாக இருந்தால் மட்டுமே பயணிகள் விமானத்தில் நுழைய அனுமதி வழங்கப்படும் என்பது விதிமுறை ஆகும்.

Indigo Flight | India Uae | Temporary Suspended

Add your comments to Search results for PCR Test

Thursday, August 5, 2021

ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியப் பயணிகள் இன்று நேரடியாக வந்தனர்

அமீரகத்தில் இன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு நேரடியாக வந்திறங்கிய இந்திய பயணிகள்;குழப்பங்களுக்கு தெளிவான விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது

Image : Emirates flight from Kochi

ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியப் பயணிகள் இன்று நேரடியாக வந்தனர்

இந்தியாவில் இருந்து நேரடியாக நுழைய அமீரகம் விதித்திருந்த தடை இன்று(05/08/21) வியாழக்கிழமை அதிகாலையில் 00:01 மணியுடன் விலகிய நிலையில் துபாய் விமான நிலையத்தின் Terminal-3 யில் இந்திய பயணிகள் வந்திறங்கினர். ஆனா‌ல் 15 முதல் 20 வரையிலான குறைந்த பயணிகளை மட்டுமே காண முடிந்தது. மேலும் பயணங்கள் தொடர்பான சந்தேகங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில் இதற்கு தெளிவான விளக்கமாக இந்த பதிவு இருக்கும் என்று நம்புகிறோம். வந்திறங்கிய இந்திய பயணிகள் கூறிய விபரங்களை தெளிவாக பார்ப்போம். முதல்கட்டமாக யார் யார் நுழைவது என்பதே குழப்பமாக உள்ளது. அதற்கான பதில் அமீரக விசா உள்ள அனைத்து தரப்பு தொழிலாளர்களும் வரலாம் ஆனால் நிபந்தனைகள் பின்வருமாறு:

  1. அமீரகத்தில் இருந்து 2 டோஸ் எடுத்த நபர்கள் மட்டுமே விமானத்தில் நுழைய அனுமதி வழங்கபடுகிறது.
  2. மேலும் தடுப்பூசி நிபந்தனை இல்லாத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சில பிரிவுகளில் உள்ளவர்களையும் நுழைய அனுமதி வழங்கியுள்ளனர். 
  3. அது போல் பயணத்திற்கு முன்பு  ICA அல்லது GDRFAD தளத்தில் பதிவு செய்து அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.
  4. 48 மணிநேரத்திற்குள் எடுத்த PCR பரிசோதனை எதிர்மறை(Negative) சான்றிதழ் கைவசம் வைத்திருக்க வேண்டும்.
  5.  விமான நிலையத்தில் வைத்து 4 மணிநேரத்திற்குள் எடுத்த Rapid test  தொடர்பான எதிர்மறை(Negative) சான்றிதழ் கைவசம் இருக்க வேண்டும்.
  6. மேலும் Validity விசா இருந்தும் 6 மாதம் கடந்தவர்களின் விபரங்கள் System தில் காட்டவில்லை என்று சிலரை அதிகாரிகள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
  7. ஒரு டோஸ் அமீரத்தில் எடுத்து இரண்டாவது டோஸ் இந்தியாவில் எடுத்த சில பயணிகளையும் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். அவர்களிடம் தற்போதைய அறிவிப்பில் புதிதாக எதாவது  திருத்தங்கள் வந்தால் பயணிக்க அனுமதி வழங்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.
  8. மேலும் நேற்று இரவு வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில் ICA அல்லது GDRFAD அனுமதி ஆகஸ்டு-4 ஆம் தேதி யிட்டு எடுத்திருந்தால் அவர்களை விமானத்தில் அனுமதிக்க வேண்டியது இல்லை எனவும், ஆகஸ்டு-5 தேதி யிட்டு தான் அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் இது தெரியாமல் சில பயணிகள் விமான நிலையம் வந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகள் அமீரக அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் இந்த ஒரு காரணத்திற்காக அவர்களை திருப்பி அனுப்ப வேண்டியது இல்லை என்று கூறி விமானத்தில் ஏற அனுமதி வழங்கினர் என்று கூறப்படுகிறது. வரும் நாட்களில் இந்த சலுகை செல்லும்படி ஆகுமா என்பது தெரியவில்லை. எனவே சான்றிதழ் ஆகஸ்டு 5-ஆம் தேதியிட்டுள்ளதா  என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் விமானத்தில் பயணித்த பயணிகள் வெளியிட்டுள்ள விபரங்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபோல் அமீரக சுகாதாரத்துறையால் அங்கீகரித்த 2 டோஸ் தடுப்பூசி வெளிநாடுகளில் எடுத்த பயணிகள் நுழைய அனுமதி, விசா காலாவதி 6 மாதங்கள் கடந்த தொழிலாளர்கள் நுழைய அனுமதி மற்றும் விசிட் விசா நபர்கள் உள்ளிட்டவர்கள் நுழைய அனுமதி ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகும் என்று நம்புவோம், இதற்கிடையே அமீரகம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை யு.கே சிவப்பு பட்டியலில் இருத்து நீக்கி Amber list சேர்ந்துள்ள மகிழ்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது.

Add your comments to Search results for PCR Test