BREAKING NEWS
latest

Kuwait Visit - Arab Tamil Daily - The 24×7 Gulf News

சற்றுமுன் Kuwait Visit செய்திகள், கட்டுரைகள், Kuwait Visit புகைப்படங்கள், வீடியோ, முழுநேர வளைகுடா அரபு செய்திகள் தமிழில், சினிமா, பொழுதுபோக்கு, அரசியல் மற்றும் விளையாட்டுச் செய்திகள்.

Sunday, February 4, 2024

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வணிக சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : Kuwait City

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப விசா வழங்கப்படுவது நடைமுறைக்கு வந்த பிறகு, அனைத்து வகையான விசிட் விசாக்களும் விரைவில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சீராக்கல் போன்ற காரணங்களால் வணிக, சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அனுமதியுடன் சிறிய அளவிலான விசாக்கள் மட்டுமே சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தடையை நீக்குவதன் மூலம் வெளிநாட்டவர்களுக்கு எந்த வகையிலும் குவைத் வருகைக்கான வழியை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் மற்ற GCC நாடுகளின் தாராளமயக் கொள்கையை இந்த விஷயத்தில் பின்பற்றவும் குவைத் நாட்டின் பொருளாதார மற்றும் வணிகத் துறைகளில் ஆதாயங்களை மேம்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு சமூக மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கருத்தில் கொண்டு விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு விசிட்டிங் விசாக்களுக்கான கதவுகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கினர்.

அதேசமயம், மின்னணு இணைப்புத்துறையில் உள்துறை அமைச்சகம் செய்து சாதனை, டிஜிட்டல் வேலைகளுக்கான முன்னேற்றம் நாட்டுக்கு வருகின்ற பார்வையாளர்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுதல் என்பதை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் ஷேக் முகமது அல் சபா தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டம் குடும்ப வருகை விசாக்களை தாராளமயமாக்கல் என்ற கண்ணோட்டதை நடைமுறை படுத்த காரணமாக அமைத்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | FamilyVisa | Kuwait Visit

Add your comments to Search results for Kuwait Visit

Monday, February 5, 2024

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது

Image : Kuwait Airport

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

வெளிநாட்டினருக்கு குடும்ப விசிட் விசா வழங்குவதை மீண்டும் தொடங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இந்த முடிவு பிப்ரவரி-7,2024 புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். METTA தளத்தின் மூலம் விசா பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான பின்வரும் நிபந்தனைகள் கட்டாயமாகும். மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு விசிட் விசா பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மாத சம்பளம் 400 தினார் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 800 தினார் சம்பளம் உள்ளவர்களுக்கு, மற்ற உறவினர்கள் (சகோதரர்கள், மனைவியின் தாய் தந்தை, மனைவி/உடன்பிறப்புகள்) ஆகியோருக்கான விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். குவைத்திற்கு சொந்தமான எதாவது ஒரு தேசிய விமான நிறுவனத்தில் விசிட் வந்தவர்கள் வருவதற்கும், திரும்ப செல்வதற்காக டிக்கெட்டுகளை எடுத்து கொண்டு மட்டுமே நாட்டை(குவைத்தை) அடைய வேண்டும். மேலும் விசிட் விசாவை வசிப்பிட(Residence Permit) விசாவாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும் விசிட் வந்துள்ள நேரத்தில் எதாவது காரணத்தால் சிகிச்சை தேவை என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். விசிட் விசா காலம் முடிந்தும் சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தால் விசிட் வந்த நபர் மற்றும் அவருக்கு விசா எடுத்த ஸ்பான்சர் ஆகியோர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்டவை மற்ற நிபந்தனைகள் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Visit Visa | Kuwait Visa | Visit Kuwait

Add your comments to Search results for Kuwait Visit

Sunday, August 25, 2019

குவைத் நண்பரின் கேள்வி...?? வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா விசா எடுக்க முடியும்....


குவைத் நண்பரின் கேள்வி...?? வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா விசா
எடுக்க முடியும்.....


கேள்வி:
குவைத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவரின் கேள்வி நான்  மாதத்திற்கு 430 தினார் சம்பளம் வாங்கி வருகிறேன்... நான் வருடத்தில் எத்தனை முறை மனைவி மற்றும் குழந்தைக்கு சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்....??????

பதில்:

தற்போது( இன்று காலை) வரையில்  நடைமுறையில் உள்ள விசா சட்டத்தின் கீழ் நீங்கள் மனைவி மற்றும் குழந்தைக்கு ஒருமுறை விசா எடுத்து அவர்கள் குவைத்திற்கு வந்தால். அவர்கள்  எந்த தேதியில் கடைசியாக குவைத்திலிருந்து  தாயகம் திருப்புகிறார்களோ அந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் அடுத்த சுற்றுலா விசா( Visit Visa) எடுக்க முடியும். ஆக ஒரு வருடத்தில்  இரண்டு முறை இந்த விசா எடுக்க முடியும்.

மேலும் ஒரு Youtube தளம் பதிவு செய்துள்ள வீடியோவில் சாதாரணமாக ஒருவர் சுற்றுலா விசாவில் குவைத்தில் வந்தால் 3 மாதங்கள் வரையில் குவைத்தில் தங்க முடியும் என்று பதிவு செய்துள்ளது பார்க்க முடிந்தது அது முற்றிலும் தவறானது. 1 மாதங்கள் மட்டுமே தங்க முடியும் இதுதான் சட்டம்.

கணவர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைக்கு மட்டுமே 3 மாதங்கள் செல்லுபடியாகும் சுற்றுலா விசா எடுக்க முடியும், மற்ற இரத்த சொந்தங்கள் தனிப்பட்ட நபர் யார் வந்தாலும், அந்த விசாவின் காலாவதி 1 மாதம் மட்டுமே.

மேலும் வேலைக்காக வரும் நபர்களுக்கு வழங்கபடும் எந்தவொரு உள்நுழைவு விசாவும் 3 மாதங்கள் செல்லுபடியாகும் விதத்தில் இருக்கும். அந்த நபர் குவைத் வந்து இங்குள்ள மெடிக்கல் முடித்து  தகுதி சான்றிதழ்கள் பெற்ற பிறகு மட்டுமே நிரந்தர விசா அடிப்பார்கள்( அதுவும் கம்பெனிகளை பொறுத்து ஒரு வருடமோ(அல்லது)  இரண்டு வருடமோ அடிப்பார்கள்)

இதை தவிர குவைத்தில் உள்ள  கம்பெனிகள் சில  தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுற்றுலா
விசா(Visit Visa) எடுக்க முடியும்.....
ShareAll......
Reporting by Kuwait tamil pasanga Team

Add your comments to Search results for Kuwait Visit

Monday, December 19, 2022

குவைத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லும் நபர்களில் இந்த நாட்டவர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது:

முக்கியமாக உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக இவர்கள் தாய்லாந்துக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Image : தாய்லாந்து

குவைத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லும் நபர்களில் இந்த நாட்டவர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது:

தாய்லாந்துக்கு இந்த ஆண்டு சென்றுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் குவைத் நாட்டினர் முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக தாய்லாந்து மத்திய வங்கி, தாய்லாந்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு தாய்லாந்தில் உள்ள 30 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மொத்தம் 11.9 பில்லியன் தாய் பாட்(சுமார் $344 மில்லியன்) செலவிடப்பட்டதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் பெரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள் என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது.

குவைத்திற்கு அடுத்த படியாக கம்போடியா, மியான்மர், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் குடிமக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் எலும்பு மற்றும் மூட்டு நோய்கள், இதய நோய்கள், இரத்த நாள நோய்கள், பல் நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

மேலும் இதய நோய், புற்றுநோய், எலும்பு, மூட்டு, நரம்பு நோய்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சைகள் மருத்துவமனைகளுக்கு அதிக லாபம் தரக்கூடியவை என்று பாங்காக் போஸ்ட் ஹெல்த் சர்வீசஸ் சப்போர்ட் டிபார்ட்மெண்ட்யின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். சோரா வாசிட்சாக் கூறினார்.

Kuwait Citizen | Visit Thailand | Health Issues

Add your comments to Search results for Kuwait Visit

Friday, February 9, 2024

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் உள்ள வெளிநாட்டினரை தனது கட்டுரை மூலம் முன்னிலைப்படுத்திய குடிமகனான சமூக பார்வையாளர் ஆதில் அவர்கள்

Image : டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால்

குவைத்திலுள்ள பெரும்பாலான குடிமக்களின் மனதில் வெளிநாட்டினருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதற்கு இந்த கட்டுரையே சான்று

குவைத்தில் பல வருடங்கள் கழித்து வெளிநாட்டவர்களுக்கு குடும்ப விசா வழங்க துவங்கியுள்ளதன் மூலம் அரசின் இந்த முடிவை பலரும் பாராட்டி வருகின்றனர். அவர்களில் முக்கிய ஒருவர் குவைத் குடிமகனான கட்டுரையாளர் மற்றும் சமூக பார்வையாளர் டாக்டர் ஆதில் ஃபஹத் அல் மிஷால் ஆவார். இது தொடர்பாக தினசரி நாளிதழில் அவர் வெளியிட்ட ஒரு நெகிழ்ச்சியான குறிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒன்றுமில்லாத பாலைவனத்தை தற்போது நாம் பார்க்கிற இந்த அழகான தோற்றத்திற்கு மாறுவதற்கு பின்னால் நமது விருந்தினராக இருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பங்கை என்றும் மறக்கக்கூடாது என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார்.

தன்னுடைய உயிரிலும் மேலான சொந்தங்களை நாட்டில் விட்டுவிட்டு தங்களுடைய குடும்ப சூழல் காரணமாக அண்ணம் தேடி நம் நாட்டுக்கு வந்த அரேபியர்களானவர்கள் மற்றும் அரபிகள் அல்லாத வெளிநாட்டினர் அவர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்களை குவைத்திகளான நமக்காக மாற்றி வைத்த தியாகிகள் ஆவார்கள். நாம் வசிக்கும் வீடுகள், வாகனங்களை ஓட்டும் சாலைகள், பாலங்கள் எல்லாம் வெளிநாட்டினரின் கடின உழைப்பின் பலன் என்பதை யாரும் மறந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தான், எங்களைப் போலவே, வேலை முடிந்ததும் வீட்டுக்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வாழ்வது வெளிநாட்டினரான அவர்ளுக்கு உரிமை மற்றும் இதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது குடிமக்களான நமது பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதை நினைவில் கொள்ளாமல் விஷயங்களை தவறாக மதிப்பிடும் குடிமக்களும் உள்ளனர் என்பதையும் டாக்டர் அடில் தெளிவு படுத்துகிறார்.

வெளிநாட்டினர் தங்கள் குடும்பங்களை அழைத்து அனுமதி வழங்கியது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் அது அவர்களுக்கு சமூக ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சி அளிக்கும். அவர்கள் நாட்டுக்காகச் செய்யும் சேவைகளில் இதை பலனை குடிமகனான நாம் பார்த்தால் தெரியும். மேலும் வெளிநாட்டினர் அதிகளவில் குடும்ப விசா போன்றவற்றில் நாட்டிற்க்கு வருவது வணிக ரீதியாகவும், கட்டுமான துறையிலும் , சுற்றுலாத் துறையிலும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் வசிக்க ஆட்கள் இல்லாமல் தலை நிமிர்ந்து நிற்கின்றன.அவற்றில் பல பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டது வருத்தமளிக்கிறது.

தற்போது பேச்சிலர் பட்டதாரிகள் தங்கள் நாட்டிலுள்ள குடும்பத்தினரை அழைத்து வந்ததும் குடியிருப்புகளுக்கு மாறி செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் எனவும், இது இந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .மேலும் அரசின் தாராள மனப்பான்மை, நாட்டில் உள்ள தனியார் கல்வித்துறைக்கும் பலன் தரும். எனவே, அரசின் புதிய முடிவு வெளிநாட்டவர்களுக்கும் பலன் தருவது போல் குவைத்துக்கும் பயன் தரும் என்று நீண்ட பட்டியலிட்டு முனைவர் ஆதில் ஃபஹத் அல் மிஷாலின் கட்டுரை முடிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Family Visa | Visit Visa

Add your comments to Search results for Kuwait Visit

Thursday, September 12, 2024

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் 20ம் நம்பர் விசா 18ம் நம்பருக்கு மாற்ற வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்ததாக அதிகாரிகள் அறிவிப்பு

Image : குவைத் வேலை வாய்ப்பு மைய‌ம்

குவைத்தில் விசா மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது

குவைத்தில் வீட்டுப் பணியாளர்கள்(Article-20) தங்களுடைய விசாவை தனியார்(Article-18) துறைக்கு மாற்றுவது தொடர்பான 2024 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானம் எண்-6 இன்று(12/09/2024) வியாழக்கிழமையும் காலாவதியாகிறது என்று மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை அதிகாரிகள் அறிவித்தனர்.

இதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 14ம் தேதி முதல் இம்மாதம் 12-ம் தேதி(அதாவது இன்று வரையில்) ஒதுக்கப்பட்டு இருந்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட இந்த கால அவகாசத்தை இரண்டு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல முதலாளிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது வரையில் விசா மாற்றம் பெற விண்ணப்பம் அளித்தவர்களின் பரிவர்த்தனைகள்(மனுக்கள்) பரிசீலனை செய்யப்படும் எனவும், ஏற்கனவே சுமார் ஐம்பதாயிரம் பேர் இந்த அறிவிப்பு மூலம் விசா மாற்றம் செய்து பயனடைந்துள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Job Visa | Visit Visa

Add your comments to Search results for Kuwait Visit