BREAKING NEWS
latest

Tuesday, March 14, 2023

இந்தியரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் இடையேயும் நினைத்ததை முடிந்த மாமனிதர்

சவுதியில் சிறையில் இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு சவுதி குடிமகன் இரண்டு கோடி வசூல் செய்த நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : அவதேஷ் சாகர் மற்றும் ஹாதி பின் ஹமூத்

இந்தியரின் விடுதலைக்காக பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் இடையேயும் நினைத்ததை முடிந்த மாமனிதர்

கார் விபத்து வழக்கில் சவுதி அரேபிய சிறையில் ஐந்தரை ஆண்டுகளாக இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு சவுதி பிரஜை ஒருவர் முன்வந்துள்ளார். சமூக வலைதளப் பிரச்சாரம் மூலம் சொந்த சமூகத்திடம்(சவுதி குடிமக்களிடம்) இருந்து இந்திய ரூபாய் மதிப்பில் இரண்டு கோடி ரூபாயை Blood Money திரட்டிய ஹாதி பின் ஹமூத், நாடு, மொழி, மதம் கடந்து நன்மைக்கும் கருணைக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜாப்பூரைச் சேர்ந்த அவதேஷ் சாகர்(வயது-52) சவுதி குடிமக்களின் கருணையால் பலருக்கும் உதவி வருகிறார். சவுதியின் குவையாவில் உள்ள அலஹ்சா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட பிஷா அருகே ரியாத்-துவைஃப் சாலையில் நடந்த கார் விபத்தில் அவர் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். தண்ணீர் வினியோகம் செய்யும் லாரி ஓட்டுவது இவரது வேலை. இவர் சவுதியில் தங்கிஓட்டுநர் உரிமம் மற்றும் இகாமா இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தார். ஒரு நாள் மாலை, ஒருவழிப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு வளைவில் வேகமாக வரும் வாகனங்களைத் தவிர்ப்பதற்காக, பக்கவாட்டாகச் சென்ற அவரது லாரியின் மீது சவுதி இளைஞன் ஒருவரின் பிக்கப் பலமாக மோதியது

இந்த பயங்கரமான விபத்தில் வாகனம் அருகில் இருந்த பாறை குவியல் மீது விழுந்ததில் வாகனத்தில் இருந்த மூன்று பெண்களும் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞரும் உயிரிழந்துள்ளனர். அவருடன் இருந்த சிறுமி பலத்த காயமடைந்தார். உரிமம் மற்றும் இகாமா இல்லாததால் அவதேஷ் சாகர் முழு குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டார். உயிரிழந்த நால்வருக்கும், காயமடைந்த சிறுமிக்கும் இழப்பீடாக விதிக்கப்பட்ட தொகை 9,45,000 ரியால்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த அவதேஷுக்கு இந்தத் தொகை நினைத்துப் பார்க்க முடியாதது.

இந்த மனிதனால் சிறையில் தனது தலைவிதியை நினைத்து தினமும் அழுது புலம்புவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவரது மனைவி சுசீலா தேவி மற்றும் 10 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு சொந்தமாக தங்க வீடு கூட இல்லை. இதற்கிடையில், அவதேஷின் இரண்டு பெண்கள் இறந்தனர். வாழ வழியின்றி அலைந்து கொண்டிருந்த அவதேஷின் குடும்பம், அவரது விடுதலைக்காக தட்டாத கதவுகள் இல்லை.ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

அவதேஷின் குற்றமற்ற தன்மையை அறிந்த சிறையிலுள்ள போலீசார் சிலர் உள்ளூர் சமூக சேவகர் ஹாதி பின் ஹமூத் என்பவரிடம் இதனைத் தெரிவித்தனர். ஹாதி பின் ஹமூத் சிறைக்கு சென்று அவதேஷை சந்தித்து தகவல் சேகரித்தார். வாழ்நாள் முழுவதும் சிறையில் கழித்தாலும் இவ்வளவு பெரிய தொகையை தன்னால் வழங்கவே முடியாது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். அவரது இயலாமையை உணர்ந்த ஹாதி பின் ஹமூத்,அவதேஷுக்கு உதவ முன்வந்தார்.

அவதேஷின் ஆதரவற்ற நிலையை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்கள், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக தளங்கள் மூலம் சவுதி சமூகத்தில் பரவலாகப் பரவியுள்ளன. மேலும் ஹாதி பின் ஹமுதின் உதவிக்கான வேண்டுகோள் தொடர்பான ஒவ்வொரு வீடியோ இடுகையிலும், அவர் இந்தியர்களுக்கும் சவுதிகளுக்கும் இடையிலான பாரம்பரிய நல்லுறவு பற்றி நினைவுபடுத்தினார்.

இதனால், சமூக வலைதளங்கள் மூலம் பணம் வசூலிப்பதாக சிலர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் உண்மையை உணர்ந்த சவுதி அதிகாரிகள் அவருக்கு தொண்டு நிறுவனத்துக்காக சிறப்பு வங்கிக் கணக்கு தொடங்க அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, ஊர் மக்கள் உதவ முன்வந்தனர். ஹாதி பின் ஹமூத் என்ற நல்ல மனிதர் வசூலித்த 9,45,000 ரியால்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் கட்டப்பட்டன. இதையடுத்து அவதேஷ் நாளை மறுநாள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்ற மகிழ்ச்சியாக செய்தி வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Monday, March 13, 2023

குவைத்தில் நகராட்சியின் கழிவு சேகரிப்பு துறை ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

குவைத்தில் சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான தினார்கள் சம்பாதித்த கும்பலை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்

Image credit: நகராட்சி வாகனம்

குவைத்தில் நகராட்சியின் கழிவு சேகரிப்பு துறை ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

குவைத் நகராட்சியின் கழிவு சேகரிப்பு துறை ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நகராட்சி வாகனங்களில் கழிவுகளை சேகரித்து, அவற்றில் இருந்து மதிப்புமிக்க பொருட்களை கழிவுகளை பிரிக்கும் மையத்திற்கு கொண்டு சென்று வழங்குவதற்கு முன் திருடி மறுவிற்பனை செய்யும் குழுவை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் ஆசிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள், இவர்களுக்கு தேவையான வசதிகளை பேரூராட்சி துறையின் அதிகாரி(குவைத்) ஒருவர் செய்து கொடுத்தார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

இதில் முக்கியமாக பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் இருந்து அட்டைப்பெட்டிகளை சட்டவிரோதமாக மறுவிற்பனை செய்வது. இதற்காக தானியான வாகனங்கள் மூலம் இப்படிப்பட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வது,ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் மாதம் ஒன்றுக்கு குறைந்தது 20,000 தினார்கள் வரை வருமானம் ஈட்டியதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதேநேரம் ஒரு குப்பை சேகரிப்பாளருக்கு மாதத்திற்கு 600 தினார் வரை ஊதியம்(கையூட்டு) வழங்கப்பட்டதையும் அவர்கள் வெளிப்படுத்தினர். தற்போது அவர்களை கூடுதல் நடவடிக்கைகளுக்காக உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பேரூராட்சி இயக்குநர் ஜெனரல் அகமது மனஃபூஹி கூறுகையில் உடந்தையாக இருந்த இவர்களின் முதலாளிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Sunday, March 12, 2023

இந்தியாவில் இருந்து குவைத் வந்தவர் கஞ்சா குவியலுடன் பிடிபட்டார்:

இந்தியாவில் இருந்து விமான மூலம் கடத்தி வரப்பட்ட போதை பொருட்களுடன் பயணி ஒருவர் குவைத் விமான நிலைய அதிகாரிடம் பிடிபட்டார்

Image : பிடிபட்ட கஞ்சா குவியல்

இந்தியாவில் இருந்து குவைத் வந்தவர் கஞ்சா குவியலுடன் பிடிபட்டார்:

குவைத் விமான நிலையத்தின் முனையம்(T1) வழியாக நாட்டிற்கு நுழைய முயன்ற பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர் தன்னுடைய பையில் மறைத்து வைத்து கடத்த முயன்ற 280 சிறிய பொட்டலங்களாக கஞ்சா குவியலை அதிகாரிகள் பறிமுதல் செய்து பயணியை கைது செய்தனர்.

மேலும்கைது செய்யப்பட்ட நபர் டெல்லியில் இருந்து வந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சட்ட நடைமுறைகள் முடிக்கப்பட்டு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் கூடுதல் நடவடிக்கைகளுக்காக போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்ற முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Airport | Passenger Arrested | India Kuwait

Add your comments to

Thursday, February 2, 2023

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு:

சவுதி அறிமுகம் செய்த 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் அறியாமல் இந்த புதிய வகையான விசாவுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

Image : Saudi Arabia City

சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு

சவுதி வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை முதல் 96 மணிநேர " உங்கள் டிக்கெட் உங்கள் விசா" என்ற 4 நாட்கள் Validity உள்ள Transit விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதை எப்படி பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை இங்கே பார்க்கலாம்:

இந்தியா, இலங்கை உள்ளிட்ட சவுதியுடன் வெளியுறவு வைத்துள்ள உலகின் எந்த நாட்டினராக இருந்தாலும், எங்கு வசிக்கின்ற நபர்களாக இருந்தாலும் இந்த விசாவை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.

இந்த Transit Visa-வை நீங்கள் சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் உங்கள் டிக்கெட்களை முன் பதிவு செய்யும்போது ட்ரான்சிட் விசாவிற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு பணத்தையும் இந்த நேரத்தில் செலுத்த வேண்டியது இருக்கும்.

விசா பெற முயற்சிக்கும் நபர் இந்த தளங்களில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது Multiple City Option-ஐ தேர்வு செய்து இந்த இலவச விசா பெறுவதற்காக உங்கள் புகைப்படம் மற்றும் சில விபரங்கள் பதிவேற்றியவுடன் நீங்கள் பதிவு செய்கின்ற உங்களுடைய Mail ஐடிக்கு 3 நிமிடங்களில் விசா வந்து சேரும்.

இப்படி பெறுகின்ற விசாவின் அதிகபட்சமாக செல்லுபடியாகும் நாட்கள் 90 தினங்கள் மட்டுமே. இந்த 90 நாட்களுக்குள் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சவுதியில் நுழைந்த பிறகு அதிகபட்சமாக 4 நாட்கள்( 96 மணிநேரம்) அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இந்த நான்கு நாட்களில் உம்ரா செய்வது அல்லது சவுதியின் எந்த இடத்திற்கும் செல்லலாம் சுற்றி பாக்கலாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம், உங்கள் உறவினர்கள் அங்கு இருந்தால் அவர்களை சென்று சந்திக்கலாம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். உம்ரா செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான செயலி வழியாக விண்ணப்பித்து கூடுதலாக அனுமதி பெற வேண்டும்.

இந்த புதிய விசா பெறுவதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:

Transit என்ன என்பது தெரியாத நபர்களுக்கு இந்த ஒரு வரி விளக்கம். எடுத்துகாட்டாக நீங்கள் துபாயில் இருந்து இந்தியா வருகின்ற நபர் என்று வைத்து கொள்ளுங்கள். பலர் பயணச்சீட்டு அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் நேரடியான விமானங்கள் பயன் படுத்தி இந்தியா வருவதில்லை. மாறாக இடையில் ஓமன், குவைத், சவுதி, கத்தார் இப்படி எதாவது ஒரு நாட்டின் விமான நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அல்லது அதே விமானத்தில் அங்கிருந்து சென்னைக்கான விமானத்தில் வருவார்கள் இதுவே Transit எனப்படும்.

இப்படி வருகின்ற நபர்களுக்கு இந்த புதிய வகையான விசா பயன்படுத்தி சவுதியில் நுழைய முடியு‌ம். ஆமா கண்டிப்பாக நீங்கள் இன்னொரு நாட்டிற்க்கு செல்வதற்காக மற்றொரு விசாவை வைத்திருக்கின்ற நபராக இருக்க வேண்டும்.

மேலும் புரிதலுக்காக நீங்கள் இந்தியர் என்று வைத்து கொள்ளுங்கள் துபாயில் வேலைக்காக சென்று தங்கியுள்ள நபர் விடுமுறைக்காக தாயகம் வருகின்ற நேரத்தில் இந்திய புதிய விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து பிறகு இந்தியா கிளம்பலாம். இதுபோல் விடுமுறைக்காக இந்தியா வந்த நபர் என்று வைத்து கொள்ளுங்கள் நீங்கள் மீண்டும் துபாய்க்கு இந்தியாவில் இருந்து கிளம்பும் போதும் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு தங்கியிருந்து மீண்டும் துபாய் புறப்பட்டு செல்ல முடியும்.

மாறாக எந்தவொரு நாட்டின் விசாவும் இல்லாத நபர் நீங்கள் என்றால் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டவராக இருந்தாலும் சவுதி சென்று மீண்டும் தாய்நாடு திரும்ப முடியாது. ஆமா இந்த புதிய வகையான விசா உங்களுக்கு கிடைக்காது.

இல்லாமல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டில் இருந்து இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதிக்கு சென்று மீண்டும் உங்கள் நாட்டிற்கே திரும்புவது என்ற இருவழி பயணத்தை மேற்கொள்ள முடியாது. சுருக்கமாக சொன்னால் நீங்கள் இன்னொரு நாட்டின் விசா கைவசம் வைத்திருந்தால் இடையில் சவுதியில் இறங்கி 4 நாட்கள் அங்கு செலவிட்டு மீண்டும் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Visa | New Visa | Transit Visa

Add your comments to

Tuesday, January 24, 2023

குவைத்தில் படுகொலை செய்யப்பட்ட பணிபெண் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது:

Image credit: கொலை செய்யப்பட்ட பணிப்பெண்

குவைத்தில் படுகொலை செய்யப்பட்ட பணிபெண் தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது

குவைத்தில் இரு தினங்களுக்கு முன்னர் அதாவது ஞாயிற்றுகிழமை மாலையில் வீட்டு பணிப்பெண் ஒருவர் படுகொலை செய்யபட்டு சல்மி சாலை ஓரத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சி செய்தி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் கொல்லபட்ட பிலிப்பைன்ஸ் நாட்டவரான அந்த பெண்ணின் பெயர் ஜூலிபீ ரணரா(வயது-35) என்பது தெரியவந்துள்ளது. அந்த வீட்டுப் பணிப்பெண் கர்ப்பமாக இருந்தார் என்ற புதிய தகவலை தினசரி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தெரியவந்தது முதல் துரிதமாக செயல்பட்ட குவைத் காவல்துறை 24 மணிநேரத்திற்குள் குற்றவாளியான 17-வயது குவைத் குடிமகனான இளைஞனை கைது செய்தனர். அவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான், மேலும் கொலைக்கான காரணத்தை கண்டறிய கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே உயிரிழந்த பணிப்பெண்ணின் குடும்பத்தினை நேரில் சென்று சந்தித்த பிலிப்பைன்ஸ் நாட்டிற்கான புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைச்சகத்தின் செயலாளர் சூசன்-வோ அமைச்சகம் சார்பிலும், தன்னுடைய தனிப்பட்ட இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த துயரமான நேரத்தில் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று குடும்பத்தினருக்கு வாக்குறுதி அளித்தார்.

மேலும் இந்த வழக்கில் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிலிப்பைன்ஸில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துறை குவைத் அதிகாரிகளை கேட்டுக் கொண்டதாகவும், இளம் பெண்ணுக்கு நீதி உறுதி செய்யப்படும் என்றும், இது தொடர்பாக எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைள் குறித்து தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்கவும், அவர் செய்த கொடூரமான குற்றத்திற்காக குற்றவாளியை தண்டிக்கவும் குவைத் அரசாங்கத்தை குவைத் வலியுறுத்தியதாக சூசன்-வோ தெரிவித்ததாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Housemaid | Housemaid Kuwait | Housemaid Killed

Add your comments to

Tuesday, January 3, 2023

குவைத் பாதுகாப்பான பட்டியலில் அரபு நாடுகளில் 2-வது இடத்தில் உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது:

குவைத் பாதுகாப்பான பட்டியலில் அரபு நாடுகளில் 2-வது இடத்தில் உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது:

Image : Kuwait City

குவைத் பாதுகாப்பான மற்றும் அமைதியான அரபு நாடுகளின் பட்டியலில் 2-வது இடத்தில், கத்தார் முதல் இடத்திலும் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

அரபு நாடுகளிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளின் பட்டியலில் குவைத் இரண்டாவது இடத்தில் உள்ளது. எந்த நாடுகள் மிகவும் பாதுகாப்பானவை மற்றும் ஆபத்தானவை என்பது குறித்து Institute For Economics and Peace நிறுவனம் தயார் செய்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் உலக அளவில் குவைத் 39-வது இடத்தில் உள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் நாடுகளிலேயே மிகவும் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாடுகளின் பட்டியலில் கத்தார் முதலிடத்தில் உள்ளது. அதேநேரம் உலக அளவில் கத்தார் 23-வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகள் அரபு உலகில் மூன்றாவது இடத்தில் ,உலக அளவில் 57-வது இடத்தையும் எட்டியுள்ளது

ஜோர்டான் அரபு நாடுகளில் ஐந்தாவது இடத்திலும், உலக அளவில் 64-வது இடத்திலும் உள்ளது. மொராக்கோ ஆறாவது இடத்திலும், துனிசியா ஏழாவது இடத்திலும், பஹ்ரைன் எட்டாவது இடத்திலும், அல்ஜீரியா ஒன்பதாவது இடத்திலும், மொரிட்டானியா பத்தாவது இடத்திலும் உள்ளது. மேலும் அரபு நாடுகளுக்கான பட்டியலில் சவுதி அரேபியா 11-வது இடத்தில் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

World Ranking | Qatar First | Kuwait Second

Add your comments to

குவைத்தில் தமிழக பெண்மணி ஒருவர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

பணிப்பெண்ணாக வேலை செய்துவந்த இடத்தில் வைத்து அவர் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளன

Image credit: உயிரிழந்த ரிபாயா

குவைத்தில் தமிழக பெண்மணி ஒருவர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது:

குவைத்தில் இந்தியா, தமிழகம், திருச்சி மாவட்டம், கீழக்கரை பகுதியை சேர்ந்த பாத்திமுத்து ரிபாயா(வயது-40) என்ற பெண்மணி பணியிடத்தில் வைத்து பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது.

வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கு வந்தவர், பணியிடத்தில் தங்கியிருந்த அறையில் உள்ள ஹீட்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெளியேறியதால் மூச்சுத்திணறி ஞாயிற்றுகிழமை அன்று(1/01/2023) உயிரிழந்தார் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

உயிரிழந்த ரிபாயா அவர்களுக்கு 3 பெண் மற்றும் 1 ஆண் என்று 4 குழந்தைகள் உள்ளனர். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ள இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு வேலை செய்து மாதாமாதம் குடும்பத்துக்கு பணத்தை அனுப்பி வந்ததாக தெரிகிறது. தன்னுடைய தாயின் பாதுகாப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்காக குவைத்திற்கு வந்த அவருக்கு இப்படியொரு துயரமான சம்பவம் நடந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Housemaid India | Indian Girl | Maid Death |

Add your comments to

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் ஒரு வருடத்தில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன

Image : காவல்துறை சோதனை

குவைத்தில் கடந்த ஒரு வருடத்தில் 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர்:

குவைத்தில் 2022 தொடக்கம் முதல் வருடம் முடியும் வரையிலான 12 மாதங்களுக்கு இடையில் 6,400 இந்தியர்கள் உட்பட 30,000 வெளிநாட்டவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நாடுகடத்தபட்டனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 660 பேர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து நாடு கடத்தப்பட்டனர். மீதமுள்ளவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், சண்டை தொடர்பான வழக்குகள், திருட்டு, மதுபானம் தயாரித்தல், விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த நபர்கள், தொழில் சட்டத்தை மீறிய நபர்கள், நாட்டின் பொது நலனுக்கு எதிராக செயல்பட்ட நபர்களுக்கு எதிரான பொது மக்களிடம் இருந்து வந்த புகார்கள் போன்றவை காரணமாகும்.

இந்த காலகட்டத்தில் நாடு கடத்தப்பட்ட மொத்த ஆண்களின் எண்ணிக்கை 17,000 ஆகும். இவர்களில் முதலிடத்தில் 6,400 இந்தியர்களான ஆண்கள், அடுத்த படியாக 3,500 பங்களாதேஷ் நாட்டினர், 3,000 எகிப்து நாட்டினர். மேலும் இதே காலகட்டத்தில் நாடு மொத்த பெண்களின் எண்ணிக்கை 13,000 ஆகும். இதில் முதலிடத்தில் 3,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், அடுத்தபடியாக 2,600 இலங்கையர்கள், 1,700 இந்தியா, 1400 பேர் எதியோப்பியா நாட்டவர்கள், இது தவிர குறைந்த எண்ணிக்கையிலான பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 30,000 பேர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deport Kuwait | Kuwait Police | Kuwait Worker

Add your comments to

Friday, December 30, 2022

குவைத்தில் பெண் தன்னை கடத்தி கற்பழித்ததாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்:

குற்றவாளி காவ‌ல்துறை அதிகாரி என்று கூறி விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்வதாக கூறி கடத்தி இதை செய்ததாக தெரிவித்துள்ளார்

Image credit: Kuwait Police

குவைத்தில் பெண் தன்னை கடத்தி கற்பழித்ததாக காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்:

குவைத்தில் வெளிநாட்டை சேர்ந்த பணிப்பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் குவைத் நாட்டின் பாரம்பரிய உடை அணிந்த ஒருவரால் தான் கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தன்னை கடத்திய நபர் அவரிடம் தான் ஒரு துப்பறிவாளன்(காவ‌ல்துறை அதிகாரி) என்று கூறி அவரின் அடையாள அட்டையினை(சிவில் ஐடி) கேட்டுள்ளார்.

மேலும் அடையாள அட்டையினை சரிபார்த்த அவர் காவல்துறை மூலம் அந்த பெண்மணியை தேடிக்கோண்டு இருப்பதாகவும் காவல்நிலையம் அழைத்து செல்ல வாகனத்தில் ஏறும்படி கூறினான் எனவும், அதை நம்பி காவல்நிலையம் தான் அழைத்து செல்வதாக நம்பி ஏறியுள்ளார். ஆனால் அந்த நபர் அவரை (Fintas) பிண்டாஸில் உள்ள தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான், பிறகு அவன் பெண்மணியை அடித்து துன்புறுத்தி கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை சாலையில் வீசிவிட்டு தப்பியோடினார் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். இதையடுத்து கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இடத்துக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய வழக்கு விசாரணை துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தேக நபர்கள் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வது நம்முடைய கடமை எனவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தனர் இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

Kuwait Police | Kuwait Worker | Raped Worker

Add your comments to

குவைத் தினார் உலகின் மதிப்பு மிக்க நாணயமாக தன்னுடைய வெற்றிக்கனியை இன்றுவரை சுவைத்து வருகின்றன

குவைத் தினார் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை அதன் மதிப்பை ஒரு துளியும் இன்றுவரை இழக்கவில்லை

Image credit: Kuwait Dinner

குவைத் தினார் உலகின் மதிப்பு மிக்க நாணயமாக தன்னுடைய வெற்றிக்கனியை இன்றுவரை சுவைத்து வருகின்றன

குவைத் தினார் உலகின் மிக மதிப்புமிக்க நாணயமாக அதன் பயணத்தைத் தொடர்கிறது. டாலரை விட மூன்று மடங்கு மதிப்புள்ள குவைத் தினார், மதிப்பில் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வருகிறது. ஒரு குவைத் தினாருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 270 வரையில் தற்போது உள்ளது. சமீபகாலமாக டாலருக்கு நிகரான உலகின் பெரும்பாலான நாடுகளின் கரன்சிகள் வீழ்ச்சியடைந்தாலும் மதிப்பை இழக்காத அரிதான கரன்சிகளில் குவைத் தினார் ஒன்றாகும்.

கடந்த 2 வருடங்களில் டாலருக்கு நிகரான குவைத் தினார் மதிப்பு அரை சதவீதத்திற்கும் குறைவாக மட்டுமே சர்வதேச சந்தையில் குறைந்துள்ளது. உலகின் மிக மதிப்புமிக்க நாணயங்களில் ஒன்றான ஜப்பானின் யென் மதிப்பில் இதே காலகட்டத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான இழப்பை சந்தித்தது என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையான பின்னடைவை சந்தித்தது, இது குவைத்தில் உள்ள இந்தியர்களான வெளிநாட்டினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

குவைத் தினார் 1961 இல் தினார்கள் அதிகாரப்பூர்வ பணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் வரையில் இந்தியா ரூபாயே குவைத்தில் பயன்பாட்டில் இருந்தது. 1990 இல் ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டபோது,1961 யில் அறிமுகம் செய்யப்பட்ட பழைய தினார்கள் ரத்து செய்யப்பட்டு புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும் கூட குவைத் தினார் அதன் பழைய மதிப்பை ஒரு துளியும் இன்றுவரை இழக்கவில்லை.

இதற்கிடையே கள்ள நோட்டுகளை கண்டறிய குவைத் மத்திய வங்கி புதுமையான முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் வங்கிகள் போலி நோட்டுகளை அடையாளம் காணும் ஒருங்கிணைந்த அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மெமோராண்டம் டெபாசிட் கேட்பதன் மூலமாக போலி நோட்டுகளை கண்டறிவது உறுதி செய்யப்படும்.

India Money | Kuwait Money | Kuwait Dinner

Add your comments to