BREAKING NEWS
latest

Sunday, April 23, 2023

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட முதல் குழு சவுதியை வந்தடைந்தது

சவுதி கப்பற்படை இந்தியர்கள் உள்ளிட்ட 157 பேரை இதுவரை சூடானில் இருந்து மீட்டுள்ளதாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது

Image : வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட முதல் குழு சவுதியை வந்தடைந்தது

உள்நாட்டு போர் காரணமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை சவுதி வழியாக இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானம் சவுதிக்கு சென்றுள்ளது. ஆனால் போர் கடுமையாக நடைபெற்று வருவதால் விமானங்களை சூடானின் விமான நிலையங்களில் பாதுகாப்பாக இறக்கும் சூழல் தற்போதைய நிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நேரடியாக சென்று இந்தியர்களை மீட்க எடுக்க வேண்டிய மற்ற வழிகள் குறித்து திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்திய உள்ளிட்ட பல நட்பு நாடுகள் அங்கு சிக்கியுள்ள தங்கள் நாடுகளை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஒத்துழைக்க சவுதிக்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. சவுதி வழியாக சூடானில் சிக்கியுள்ள நபர்களை மீட்பது என்பது எளிது. இதற்கு காரணம் ஜித்தா துறைமுகம் மிகவும் அருகில் உள்ளது . இதையடுத்து சவுதி கப்பற்படையின் முதல் கப்பல் தன்னுடைய நட்பு நாடுகளான இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த சூடானில் சிக்கியிருந்த நபர்களை மீட்டெடுத்து ஜித்தாவை வந்தடைந்தது. சூடானின் பிரச்சினைகள் குறைவாக உள்ள, எளிதாக மிக்க முடிந்த பகுதியில் இருந்து இவர்களை மீட்டாத தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் சவுதி நாட்டை சேர்ந்தவர்கள். இந்தியர்கள் சிலரும் பத்திரமாக சவுதி வந்தடைந்தனர். சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

சவுதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் இதுவரை 91 குடிமக்களையும், நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 பேரையும் பத்திரமாக வெளியேற்றியதாக அறிவித்துள்ளது. இதில் குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், இந்தியா, பல்கேரியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், புர்கினா பாசோ உள்ளிட்ட 13 நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Navy | Sudan War | Evacuation Sudan

Add your comments to

குவைத்தில் பணிபெண் தாக்கப்பட்ட விவகாரம் பிரபலம் மற்றும் கணவர் கைது

குவைத்தில் வயதான இந்திய பணிப்பெண் ஒருவர் தாக்கப்பட்ட துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : தாக்கப்பட்ட இந்திய பெண்

குவைத்தில் பணிபெண் தாக்கப்பட்ட விவகாரம் பிரபலம் மற்றும் கணவர் கைது.

குவைத்தின் ஜப்ரியா பகுதியில், இந்தியரான வீட்டுப் பணிப்பெண்(வயது-63) ஒருவர் அவரது ஸ்பான்சரான பெண்மணி மற்றும் ஸ்பான்சரின் கணவரால் உடல் ரீதியாக பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார். இதில் முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட பெண்மணி மீட்கப்பட்டார்.

மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பாக ஜாப்ரியா காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சந்தேக நபர்களை கைது செய்த போலிஸார் கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் கைது செய்யப்பட்ட நபரின் மனைவி தான் பேஷன் துறையில் ஒரு பிரபலம் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indian Maid | Assault Indian | Domestic Worker

Add your comments to

Wednesday, April 19, 2023

திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்தநாளான மணிவிழா குவைத்தில் சிறப்பாக நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

குவைத் தாய்மண் கலை இலக்கியப் பேரவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் தலைவரின் பிறந்தநாள் விழா

Image : நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழ்

திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்தநாளான மணிவிழா குவைத்தில் சிறப்பாக நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

குவைத் தாய்மண் கலை இலக்கியப் பேரவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்தநாளான மணிவிழாவை குவைத்தில் சிறப்பான முறையில் கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளது

இதற்காக வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அபாசியா சர்வதேச ஆஸ்பியர் பள்ளி வளாகத்தில் சரியாக மாலை 4 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவுள்ளன எனவும், இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றார் எனவும், பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வில் தமிழ் சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

குவைத் ஓட்டுநரான இந்தியரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது

குவைத்தில் காரிலிருந்து கிடைத்த பணத்தை திருப்பிக் கொடுத்து உதாரணம் காட்டினார் இந்தியரான ஓட்டுநர் செயல் பாராட்டை பெற்றுள்ளது

Image credit: ஓட்டுநர் சரத் மற்றும் எகிப்து நாட்டவர்

குவைத் ஓட்டுநரான இந்தியரின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது

குவைத்தில் காரிலிருந்து கிடைத்த பணத்தை திருப்பிக் கொடுத்து உதாரணம் காட்டினார் இந்தியரான ஓட்டுநர் ஒருவர். கேரளா மாநிலம் சங்கானசேரியை சேர்ந்த சரத் என்பவரே இந்த சிறந்த முன்மாதிரியான செயலை செய்துள்ளார். சரத் மெஹபூலாவில் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். வழக்கமான பயணத்தில் வண்டியில் எகிப்து நாட்டவர் ஒருவர் ஏறினார், பின்னர் சால்மியாவில் இறங்கினார். பின்னர் வீடு திரும்பிய சரத், மனைவியுடன் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த போது காரில் பர்ஸ் கிடப்பதை அவரது மனைவி நீது பார்த்துள்ளார். அதில் 400 தினார் ரொக்கம், காப்பீட்டு அட்டை மற்றும் பிற ஆவணங்கள் இருந்தன.

இதையடுத்து சற்று முன் தன் காரில் ஏறியது எகிப்து நாட்டவரின் பணப்பை என்பதை உணர்ந்த சரத் அதை எப்படியோ திருப்பி கொடுக்க முயன்றார். ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க வழியின்றி சரத் குழப்பத்தில் இருந்துள்ளார். இதேபோல் எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்ராஹிம் முஹம்மது அஸ்ஸாப் என்பவர் காணாமல் போன பணத்தைக் கண்டுபிடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பயணத்தின் போது பண இழப்பு ஏற்பட்ட தகவலை பலருக்கு தெரிவித்தார். இது கேரளா நண்பர்களால் ஒருங்கிணைத்த KBT வாட்ஸ்அப் குழுவையும் சென்றடைந்தது.

இதை பார்த்த ஷரத், KBTயின் தலைவர் இக்பாலுக்கு தகவல் தெரிவித்தார். அப்போது சரத்துக்கு இப்ராகிம் முஹம்மது ஆசாபின் போன் நம்பர் கிடைத்தது. இதையடுத்து சரத் அவரை தொடர்பு கொண்டார். பின்னர் மெஹபூலா வந்த அவர் பணத்தையும் மற்ற ஆவணங்களையும் நேரடியாக எகிப்து நாட்டவரிடம் திருப்பி கொடுத்தார். சரத் 13 ஆண்டுகளாக குவைத்தில் பணிபுரிந்து வருகிறார்.அவரது மனைவி நீது குவைத்தில் செவிலியராக உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indian Driver | Kuwait Driver | Taxi Driver |

Add your comments to

சவுதிக்கு செல்லும் இந்தியா உட்பட 7 நாடுகளை சார்ந்தவர்களுக்கு விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது

சவுதியில் இனிமுதல் விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Image : Saudi City

சவுதிக்கு செல்லும் இந்தியா உட்பட 7 நாடுகளை சார்ந்தவர்களுக்கு விசா ஸ்டிக்கர் பாஸ்போர்ட்டில் ஒட்டப்படாது

இதன்படி மே-1 முதல் சவுதியில் பாஸ்போர்ட்டில் ஸ்டிக்கர் மாதிரியிலான ஸ்டாம்பிங் செய்யப்படும் விசாவானது ரத்து செய்யப்படுகிறது. Work, Visit மற்றும் Resident விசாவில் சவுதி அரேபியாவிற்கு வருபவர்களுக்கு இனி QR கோடு பதிக்கப்பட்ட ஆவணத்தை(A4-தாளை) சரிபார்த்து விமான நிறுவனங்கள் பயண அனுமதி வழங்க வேண்டும் எனவும், சிவில் விமான போக்குவரத்து துறை விமான நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவை தவிர அமீரகம், எகிப்து, ஜோர்டான், இந்தோனேஷியா, பிலிப்பின்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களின் பாஸ்போர்ட்டிலும் விசா ஸ்டிக்கர் ஒட்டப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Visa | Saudi Permit | Saudi Jobs

Add your comments to

குவைத்தில் சிவில் ஐடி காலாவதியாகும் முறைக்கு வங்கி கணக்குகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை நேரிட கூடும்

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கான சிவில் ஐடி அட்டை காலாவதியாகும் முறைக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக முன்வந்து ரத்து செய்யப்படும் அல்லது பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

Image : குவைத் ஏ.டி.எம் மையம்

குவைத்தில் சிவில் ஐடி காலாவதியாகும் முறைக்கு வங்கி கணக்குகள் ரத்து உள்ளிட்ட நடவடிக்கை நேரிட கூடும்

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கான சிவில் ஐடி அட்டை காலாவதியாகும் முறைக்கு அவர்களின் வங்கிக் கணக்குகள் தானாக முன்வந்து(Automatically) ரத்து செய்யப்படும் அல்லது பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறைகளின் ஒரு பகுதியாக தற்போதுள்ள கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன. இந்த நடைமுறையில் சேவைக்குப் பிந்தைய சலுகைகள், விசா மற்றும் மாஸ்டர் கார்டு சேவைகளும் அடங்கும். உதாரணமாக முன்பு தினசரி பணம் திரும்பப் பெறும் வரம்பு 2000 தினார்களாக இருந்தது, ஆனால் இதுபோன்ற சமயங்களில் அது 500 தினார்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வகையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, முன்கூட்டியே கடனுக்காக நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு வங்கியில் கடன் பெற ஒப்புதல் பெறப்பட்டாலும், சிவில் ஐடி காலாவதியானால் அவை ரத்து செய்யப்படும். இந்த நடைமுறை வெளிநாட்டவர்களுக்கும், குடிமக்களுக்கும் பொருந்தும். சில வங்கிகளின் சிவில் அடையாள அட்டைகள் காலாவதியான நிலையில் ஏ.டி.எம் கார்டுகளும் தற்காலிகமாக முடக்கப்படும். குடியிருப்பு ஆவணத்தை புதுப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பலர் இந்த நிலையை எதிர்கொள்கின்றனர்.

இதன் காரணமாக பலர் வங்கிக் கணக்குகளை ரத்து செய்வது என்ற தீர்வை நம்பியிருக்கிறார்கள். ஆனால் இது குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டினரையே அதிகம் பாதிக்கும், ஏனென்றால் புதிய வங்கி கணக்கைத் திறக்க பல நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன. குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு இவை பெரும்பாலும் கடினமாக இருக்கும். குடியிருப்பு அனுமதி காலாவதியாகும் முன் ஒரு மாதத்திற்கு குறைந்தது 3 முறை டேட்டாவை புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை வங்கிகள் குறுஞ்செய்தி மூலம் வாடிக்கையாளருக்கு தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Bank | Account Suspended | Workers Accounts

Add your comments to

இந்தியா உட்பட நான்கு நாடுகளில் இரு‌ந்து வீட்டு பணியாளர்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது

குவைத்திற்கு இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் இருந்து வீட்டு வேலையாட்கள் பணியமர்த்தப்படுகின்றனர் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது

Image: செய்தி பதிவுக்கான மட்டும்

இந்தியா உட்பட நான்கு நாடுகளில் இரு‌ந்து வீட்டு பணியாளர்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது

குவைத்திற்கு இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் இருந்து வீட்டு வேலையாட்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அதிகளவான வீட்டுப் பணியாளர்களைக் கண்டறிவதன் ஒரு பகுதியாக இந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா, நேபாளம், வியட்நாம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்று உள்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்புக்கான அல்-துரா நிறுவன இயக்குநர்கள் குழுவின் துணைத் தலைவர் முகமது ஃபஹத் அல் சுவாபி அறிவித்தார்.

மேலும் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து ஆட்சேர்ப்பு தொடரும். நிறுவனம் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு(வெளிநாட்டினருக்கு) சிறந்த சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்றும் நாட்டிலுள்ள தொழிலாளர் அலுவலகங்களுடன் போட்டியிடவோ அல்லது லாபம் ஈட்டவோ முயற்சிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, இலங்கையில் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை ஏற்று வெளிப்படைத்தன்மையுடன் வீட்டுப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். விரைவில் தொழில்துறை பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதும் நிறுவனத்தின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று அல் ஜுவாபி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Housemaid Job | New Job | Kuwait Job

Add your comments to

Tuesday, April 18, 2023

வெளிநாட்டில் வேலைக்காக வந்து தற்கொலை செய்வதாக இருந்தால், ஊரில் சென்று அதை பண்ணுங்க...

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை, நீண்ட போராட்டத்துக்கு பிறகு உடல் இன்று தாயகம் சென்றடைந்தது

Image : உயிரிழந்த இளைஞர் மற்றும் பெற்றோர்

வெளிநாட்டில் வேலைக்காக வந்து தற்கொலை செய்வதாக இருந்தால், ஊரில் சென்று அதை பண்ணுங்க...

துபாயில் ஆஸ்டர் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து கொண்டிருந்தவர் விஷ்ணு பிரகாஷ்(வயது-26). இவர் இந்தியா, தமிழகம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த மாதம் விடுமுறைக்கு ஊருக்கு சென்று இருக்கிறார், வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்கள், அவரும் அதற்கு சரி என்று ஒப்புதல் கொடுத்துவிட்டு திரும்பவும் துபாய் திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார் காரணம்???? தன்னுடன் வேலை செய்த ஒரு கேரளாவை சேர்ந்த பெண்ணை காதலித்ததாகவும், ஏதோ காரணத்தினால் காதல் முறிந்து விட்டதால் விரக்தியில் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. சாதாரணமாக தூக்கில் தொங்கியோ, விஷம் குடித்து அல்லது மாடியில் இருந்து குதித்து இறந்து விட்டால் பரவாயில்லை. மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த ஒரு உயிர் கொல்லி மருந்தினை திருடி இருக்கிறார்.

தொடர்ந்து அந்த மருந்தினை இன்சுலின் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக உடலில் ஏற்றி இருக்கிறார். அவருடைய அறையில் இருந்த மற்ற நபர்கள் கேட்ட பொழுது வயிற்று வலி என்பதாக கூறி, மருத்துவர் தான் மருந்தை கொடுத்ததாக சொல்லி இருக்கிறார். இவர் அதே துறையில் வேலை செய்வதால் அதை உண்மை என்று நம்பியுள்ளனர். ஆனால் உண்மையில் அந்த மருந்தானது உடலில் செலுத்தினால் முதலில் மூளை சாவு ஏற்படும், பிறகுதான் அவர் இறக்க கூடுமாம், வலி இல்லாமல் இறக்கலாமாம் அதை அறிந்தே செய்து இருக்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டால் பரவயில்லை அடுத்து நடந்ததை பாருங்கள்.

தொடர்ந்து பல இடங்களில் பலரிடம் அந்த பையனின் குடும்பம் உதவி கேட்டும், உடலை ஊருக்கு அனுப்ப முடியாததால் அமீரகத்தில் உள்ள சமூக ஆர்வலர் கௌசர் அவர்களிடம் உதவி கேட்டு மார்ச் 24ஆம் தேதி வந்திருந்தார்கள். குடும்பத்தின் நிலை அறிந்து உடலை ஊருக்கு அனுப்ப ஆவணங்களை சேகரிக்க தொடங்கினார். ஆனால் இவர் தற்கொலை தொடர்பான வழக்கு துபாய் உயர் நீதிமன்றத்தில் இருந்தது மற்ற எல்லா ஆவணங்களையும் சரி செய்து தயார் செய்து வைத்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரு ஆவணம் வேண்டி இருந்தது.

ஆனால் நீதிமன்றமோ வழக்கினை தீவிரமாக விசாரிக்க சொன்னார்கள், அவருக்கு மருந்து எப்படி கிடைத்தது, இந்த மருந்தை பெட்டகத்தில் இருந்து எடுக்க சாவியை கொடுத்தது யார்....??? அறையில் இருந்தவர்கள் ஏன் அதை பரிசோதிக்கவில்லை...?? அவர் காதல் தோல்வி பிரச்சனை இருந்த பொழுது தனியாக அறையில் விட்டது ஏன்...??? என பல கோணங்களில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்க, முக்கிய காரணமாக அவர் செலுத்திக்கொண்ட மருந்து தடை செய்யப்பட்ட மருந்தாகும், அதை சரியான அனுமதியின்றி எடுக்கவும் முடியாது, எப்படி அவர் கையில் அது வந்தது என வழக்கு நீட்டிக்கொண்டே போக, அறையில் உடன் இருந்தவர்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கடைசியாக அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்கிற தீர்ப்பு நீதிமன்றத்தில் இருந்து வந்தது, ஒரு வழியாக ஊருக்கு அனுப்பி விடலாம் என்று பார்த்தால், சுகாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து ஒரு ஆவணம் தேவைப்பட்டது அதே காரணம் சொன்னார்கள். கிட்ட தட்ட மார்ச் 24 தேதி முதல்PRO, HR, போலீஸ் ஸ்டேஷன், மார்சுவரி, நீதி மன்றம் என எல்லா இடத்திற்கும் பலமுறை அலைந்தும், தினமும் தொலைபேசியில் அழையத்தவாரும் இருந்தனர் பெற்றோர், நேற்று முன்தினம் காலையில் கூட அழைத்திருந்தேன் ஆனால் ஒரு விவரம் இல்லாததால் எப்படியும் விடுமுறைக்குப் பிறகே உடல் செல்லும் என்று நினைத்தேன்.

இதற்கிடையே சொந்த விஷயமாக கௌசர்(நாளை) ஊருக்கு செல்ல வேண்டியது இருந்தது. குடும்பத்தார் அங்கிருந்து ஐயா நீங்கள் கிளம்புவதற்கு முன் உடலை அனுப்பி விடுங்கள் என்று கெஞ்சி கொண்டிருந்தார்கள். இறந்தவரின் தாய் தந்தை சரியாக உணவு உட்கொள்ளாமல், அவர்களும் படுத்த படுக்கையாக ஆகிவிட Glucose ஏற்றி கொண்டு இருக்கிறார்கள். கடந்த தினங்களில் எண்ணிடம் வந்த எல்லா மரண கேஸ் முடித்து விட்டேன்... ஆனால் இது முடியாமல் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் இன்று(நேற்று) மதியம் ஆவணங்கள் வந்துவிட்டது, மீதி உள்ள எல்லா ஆவணங்களையும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தோம். கம்பெனி பி.ஆர்.ஓ உடனடியாக நாம் ஏற்கனவே சொல்லி இருந்த வழிகாட்டுதலின்படி, சற்றும் தாமதப்படுத்தாமல் இந்திய தூதரகம் சென்று உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு நேற்று இரவு 11:30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்கு உடலை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, ஒரு வழியாக உடல் இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையில் தரை இறங்கும் என்றும், 38 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக விடிவு காலம் பிறந்தது என்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சாதாரணமாக, உடல்நலக்குறைவு, விபத்து இப்படி எதாவது ஒன்று இறந்தால் விதி என்று கூறலாம். நல்ல பெற்றோர்கள், நல்லததொரு வேலை எல்லாம் இருந்தும் ஏன் இப்படி இருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.. காதலி என்று கூறும் அவளுக்கு என்ன???? இன்னொரு திருமணம் செய்து கொண்டு ஒன்னும் நடக்காது போல் இருப்பாள். போனது யார்க்கு அவருடைய பெற்றொருக்கு. ஊரில் இருந்து தற்கொலை செய்தால் கூட பரவில்லை.... 38 நாட்கள் போராட்டம் அந்த பயனுடைய வீட்டில் உள்ளவர்கள் இவ்வளவு நாட்கள் எவ்வளவு துயரத்துடன் இருந்து இருப்பார்கள் என்பது கூற முடியாத வலியே.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

India Nurse | India Suicide | Daubi Nurse

Add your comments to

உலகின் உயரமான கட்டிடம் கட்ட போட்டி போடும் வ‌ளைகுடா நாடுகள்

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் சாதனையை முறியடிக்க குவைத் தயாராகி வருகிறது என்ற புதிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image: மூன்று கட்டிடங்களின் புகைப்படம்

உலகின் உயரமான கட்டிடம் கட்ட போட்டி போடும் வ‌ளைகுடா நாடுகள்

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் சாதனையை முறியடிக்க குவைத் தயாராகி வருகிறது. நாட்டின் கனவுத் திட்டமான சில்க் சிட்டியில் 'புர்ஜ் முபாரக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரமாண்ட கட்டிடத்தின் கட்டுமான பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புர்ஜ் முபாரக்கின் உயரம் 1001 மீட்டராக இருக்கும். அதாவது புர்ஜ் கலீஃபாவை விட புர்ஜ் முபாரக் 172 மீட்டர் உயரம் கூடுதலாக இருக்கும். சில்க் சிட்டியின் கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டிலேயே நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புர்ஜ் முபாரக் கட்டிடம் கட்டி முடிக்க குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில்க் சிட்டியின் நகரத்தின் முக்கிய ஈர்ப்பு புர்ஜ் முபாரக்காக இருக்கும். இதன் காரணமாக புர்ஜ் முபாரக் இருக்கும் இடம் திட்டத்தின் மைய பகுதியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் சற்றே வளைந்த வடிவத்தில் மூன்று கோபுரங்கள் ஒன்றாக நிற்பது போல் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றையும் தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் முபாரக்கின் உயரம் புர்ஜ் கலீஃபாவின் உயரத்தை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல.ஆயிரத்தியோரு மீட்டர் உயரம் தேர்வு செய்ய மற்றொரு காரணம் உள்ளது. இதற்குப் பின்னால் ஆயிரத்தொரு இரவுகளை நினைவுபடுத்தும் அரேபிய நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு உள்ளது. 234 மாடிகள் கொண்ட புர்ஜ் முபாரக்கில் ஒரே நேரத்தில் 7,000 பேர் தங்க முடியும். ஹோட்டல்கள், குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் பொழுதுபோக்குக்கு சிறப்பு மையங்கள் என்று கட்டிடத்தின் உள்ளே உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும்.

புர்ஜ் முபாரக் கட்டுமானத்திற்கு இரண்டாயிரத்து ஐநூறு கோடி தினார்கள்(6.69 லட்சம் கோடிகள்) செலவு எதிர்பார்க்கப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிக உயரமான கட்டிடமாக இது இருக்கும் புர்ஜ் கலீஃபாவின் தற்போதைய சாதனையை புர்ஜ் முபாரக் மாற்றி எழுதும். இதற்கிடையே சவுதியும் புரூஜ் கலிபாவைவிட உயர்ந்த கிங்டம் டவர்(ஜித்தா டவர்) என்ற கட்டிடத்தை கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் 1.6 கிலோமீட்டர் உயரத்தில் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் அவ்வளவு உயரமான கட்டிடம் கட்ட வசதி இல்லாததால் 1 கிலோமீட்டருடன் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

கிங்டம் டவர் கட்டிடத்தை துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவை வடிவமைத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஏட்ரியன் ஸ்மித் தான் வடிவமைத்துள்ளார். இந்த இரண்டு கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே தெரியவரும் உலகின் உயரமான கட்டிடம் எதுவென்று. அதுவரையில் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.

Jeddah Tower | Burj Mubarak | Burj Khalifa

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Sunday, April 16, 2023

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

அமீரகத்தில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து நான்கு இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் பலி மற்றும் 9 பேர் காயமடைந்ததனர்

Image : உயிரிழந்த 4 இந்தியர்கள்

துபாயில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர்

துபாயில் உள்ள தேராவில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையாள தம்பதிகள் உட்பட 16 பேர் வரையில் உயிரிழந்தனர். மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக துபாய் சிவில் டிஃபென்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அல் ராஸ் பகுதியில் உள்ள ஃபிர்ஜ் முராரில் உள்ள தலால் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் உள்ள சமூக சேவகர் நசீர் வதனாபள்ளி கூறுகையில், தீ விபத்தில் கேரளா தம்பதி உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்தனர் எனவும், இதில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார். இதை தவிர மூன்று பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்த பாகிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் ஒரு நைஜீரிய பெண் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த மற்றவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியர்கள் யாராவது உள்ளார்களா என்பது மருந்துவ அறிக்கை வந்த பிறகே தெரியவரும். அதேபோல் காயமடைந்த 9 பேர் எந்தெந்த நாட்டவர்கள் என்ற விபரங்களும் வரும் மணிநேரத்தில் வெளியாகும் என்று தெரிகிறது.

உயிரிழந்த 4 இந்தியர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த காவலாளியாக வேலை செய்துவந்த ரபீக் மற்றும் பெயிண்டிங் தொழிலாளியாக வேலை செய்துவந்த இமாம் காசிம் ஆகியோர் தீயினை அணைக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். உயிரிழந்த கேரளா தம்பதியினர் விவரங்களும் வெளியாகியுள்ளது. மலப்புரம் வெங்கரைச் சேர்ந்த களங்கடன் ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பதும் தெரியவந்துள்ளது. இறந்த ரிஜேஷ் தேராவில் டிராவல்ஸ் நிறுவன ஊழியராக உள்ளார். இவரது மனைவி ஜிஷி கிசைஸ் கிரசண்ட் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.பக்கத்து அறையில் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி ரிஜேஷ் மற்றும் அவரது மனைவி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் ரஷித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கட்டிடத்தில் சனிக்கிழமை(நேற்று) மதியம் 12.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏசி வெடித்து தீப்பிடித்ததாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிவில் பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indians Death | Fire Accident | Dubai News

Add your comments to