BREAKING NEWS
latest

Tuesday, January 23, 2024

குவைத்திலுள்ள வெளிநாட்டினர் முக்கியமாக அறிய வேண்டிய வசதிகளை தற்போது Sahal செயலி வழியாக பெற முடியும்

குவைத் உள்துறை அமைச்சகம் சஹால் செயலியில் மூன்று புதிய அம்சங்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது

Image : Kuwait Sahal Application

குவைத்திலுள்ள வெளிநாட்டினர் முக்கியமாக அறிய வேண்டிய வசதிகளை தற்போது Sahal செயலி வழியாக பெற முடியும்

குவைத்தில் ஆன்லைன் வழியான சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அரசு செயலியான "SAHAL APP" மூலம் உள்துறை அமைச்சகம் நாட்டில் வசிப்பவர்களுக்காக 3 புதிய சேவைகள் தொடங்கியுள்ளது. இவற்றில் முக்கியமான ஒன்று அவர்கள் தங்கள் கடன்களைப் பற்றிய தகவல்களை இதன் வழியாக பெறக்கூடிய வசதி ஆகும். பொருட்கள் வங்கிகள் அல்லது பிற நிறுவனங்களில் கடன் வாங்கப்பட்டிருந்தால் அந்தத் தகவலை இந்த ஆப் மூலம் அறிய முடியும்.

மேலும் ஏதேனும் வழக்குகள் தொடர்பாக அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் என்னென்ன என்பது பற்றிய தகவல்களைப் பெறவும் வெளிநாட்டவர்களும் இந்த சஹால் செயலியை நம்பலாம். வெளிநாட்டவர்கள் தங்கள் கடனைத் தீர்த்த பிறகு நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் எனபதே சட்டமாகும். குவைத்திலிருந்து விடுமுறைக்காகவோ அல்லது வேறு தேவைகளுக்காக செல்ல விரும்பும் வெளிநாட்டினருக்கான பயண தடைகளைத் தவிர்க்க இந்த வசதி மிகவும் உதவியாக இருக்கும்.

துறைமுக பாதுகாப்பு பகுதியில் குடிமக்களுக்கான நுழைவு மற்றும் வெளியேற்றம் தொடர்பான இயக்கங்கள் பற்றிய தகவல்களை இந்த சஹால் செயலி வழங்கும் என்பதே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வசதி. குடிமக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும், சில அரசாங்க நடவடிக்கைகளை முடிப்பதற்கும் முந்தைய வெளிநாட்டு பயணங்களின் அறிக்கை தேவை. சஹால் செயலி மூலம் இந்த ஒரு வசதியைப் பெறுவது குடிமக்களுக்கு இத்தகைய சேவைகளை நடைமுறை படுத்த இந்த புதிய வசதி எளிதாக்கும்.

மேலும் குவைத்திலுள்ள குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான வாகனங்களின் பதிவு புதுப்பித்தல்(டஃப்தார்) மின்னணு முறையில் செய்யும் வசதி சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்த நிலையில் இந்த வசதியும் சஹால் செயலி மூலம் நடைமுறையில் வந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சஹால் செயலி மூலம் ஏற்கனவே பல அரசு சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விரைவான மற்றும் துரிதமான முறையில் பொது சேவைளை இலகுவாக மக்களக்கு கிடைக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதே இதன் முக்கியமான நோக்கம் எனவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Sahel App | Kuwait Moi | New Features

Add your comments to

Monday, January 22, 2024

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த சாமுவேல்

குவைத்தில் மண்சரிவு தமிழர் மரணம் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தின் Al-Zour சாலை‌யி‌ல் கட்டுமானத்தில் உள்ள ஒரு இடத்தில் இன்று(21/01/24) ஞாயிற்றுக்கிழமை மணல் சரிந்து இருவர் மண்ணில் புதைத்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த தேடல் மற்றும் மீட்பு மையங்களின் தீயணைப்புபடை வீரர்கள் துரிதமாக செயல்பட்டுஇடிபாடுகளுக்கு அடியில் இருந்து இரண்டு தொழிலாளர்களையும் வெளியே எடுத்தனர் .

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மற்றவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாக செய்தி வெளியான நிலையில் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற புதிய செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதில் உயிரிழந்த இந்தியர் பெயர் சாமுவேல்(வயது-41) எனவும், தமிழகம், அறந்தாங்கி எனவும், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மற்றவர் பெயர் திருஞானம் எனவும், அவரும் அதே ஊரைச் சேர்ந்தவர் தான் எ‌ன்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to

Thursday, January 18, 2024

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் செலுத்தி விசாவை சட்டபூர்வமாக்க அனுமதி

குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு குவைத் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது

Image credit: சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்கள்

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் அபராதம் செலுத்தி விசாவை சட்டபூர்வமாக்க அனுமதி

குவைத்தில் வேலைக்காக வந்து 2020க்கு முன்பு பல்வேறு காரணங்களால் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் குறிபிட்ட அபராதம் செலுத்தினால், குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

குடியிருப்பு அனுமதி இல்லாமல் அல்லது குடியிருப்பு அனுமதியின் காலாவதி ஆகியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை நாட்டை வீட்டு வெளியேற்ற வேண்டும் என்ற வரையறை செய்யப்பட்ட 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் வெளியிடப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை குவைத் தினசரி நாளிதழ் இன்று(18/01/24) வியாழக்கிழமை மாலையில் செய்தியாக வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தேதிப்படி இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் 600 தினார் அபராதம் செலுத்தி. அந்த ரசீதுடன் வேலை செய்யப்பட்ட நிறுவனம் இருக்கிற கவர்னரேட்டில் உள்ள சம்பந்தப்பட்ட துறையை அணுகி போதுமான ஆவணங்களை சமர்ப்பித்து தங்களுடைய குடியிருப்பு அனுமதியை சட்டப்பூர்வமாக்க வேண்டும். இதன் மூலம் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு புதிய முடிவு பயனளிக்கும் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | Kuwait Residency | Visa Status

Add your comments to

Wednesday, January 10, 2024

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்:

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்

Image credit: உயிரிழந்த தமிழர்கள்

குளிர்காய நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இரண்டு தமிழர்கள் தமாமில் உயிரிழந்தனர்

சவுதி அரேபியாவின் தம்மாமில் உள்ள தங்களுடைய குடியிருப்பில் நெருப்பு மூட்டிவிட்டு தூங்கிய இந்தியாவைச் சேர்த்த இருவர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் அங்கு வீட்டு ஓட்டுநர்களாக வேலை செய்து வந்தனர். உயிரிழந்தவர்கள் விபரங்கள் வெளியாகியுள்ளது. வாளமங்கலத்தை சேர்ந்த தாஜ் முஹம்மது மீரா மொய்தீன்(வயது-42) மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த முஸ்தபா முஹம்மதலி(வயது-66) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் குளிர்காலம் கடுமையாக நிலவி வருகின்ற நிலையில் குளிரில் இருந்து தப்ப நெருப்பு முட்டியதே இந்த துயரமான சம்பவம் ஏற்பட காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரியை பயன்படுத்தி உணவு சமைத்த பிறகு, குளிரில் இருந்து தப்பித்து தூங்குவதற்காக மீதமுள்ள நிலக்கரியை அறையில் தீப்படுக்கை தயார் செய்தனர். அவர்கள் தூங்கும் போது அறையில் இருந்த புகையை சுவாசித்ததால் மூச்சு திணறி உயிரிழந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், புகையை சுவாசித்ததே மரணத்திற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இருவரும் வேலைக்கு வராத காரணத்தால் தேடிய பொது காலையில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரும் ஒரே ஸ்பான்சரின் கீழ் பணிபுரிந்து வந்தவர்கள். முஸ்தபா 38 வருடங்களாக இந்த ஸ்பான்சரின் கீழ் ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறி்ப்பிடத்தக்கது. நடைமுறைகள் முடிந்த பின் தம்மாமில் உடல் அடக்கம் செய்யப்படும் என சமூக ஆர்வலர் நாஸ் வக்கம் தெரிவித்தார். குளிர் காலநிலையில் தீமூட்டி குளிர் காய்தல் மற்றும் மின்சார ஹீட்டர்களைப் பயன்படுத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு மீண்டும் வலியுறுத்தியது. தமாமில் உள்ள கதீஃப்பில் என்ற இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற விபத்தில் கேரளாவை சேர்ந்த இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு விழிப்புணர்வுகள் செய்ததாலும் குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் குளிரில் இருந்து தப்பிக்க இதுபோன்று தீ மூட்டி மூச்சுத்திணறி உயிரிழப்பது தொடர்கதை ஆகிறது. குவைத்திலும் கடந்த சில வருடங்களில் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதே காரணத்திற்காக உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குவைத் தீயணைப்பு துறையையும் குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை நேற்று முன்தினம் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக மூடிய காற்றே வாராத அறைகளில் நிலக்கரி மற்றும் கரிக்கட்டை பயன்படுத்தி தீப்படுக்கை தயார் செய்ய கூடாது என்று எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது. அப்படி செய்தால் தூங்கும் முன்னர் அதை அணைத்து விட்டு தூங்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Fire Accident | Death Dammam

Add your comments to

Saturday, January 6, 2024

வளைகுடா நாடுகளில் குற்றம் செய்யாமல் இது போன்ற ப‌ல்வேறு வழக்குகளில் இந்தியர்கள் கைதாவது தொடர்கதை ஆகிறது

குவைத்தில் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ள 4 அப்பாவி தமிழக இளைஞர்களை மீட்க குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

Image : கைது செய்யப்பட்ட 5 பேர்

வளைகுடா நாடுகளில் குற்றம் செய்யாமல் இது போன்ற ப‌ல்வேறு வழக்குகளில் இந்தியர்கள் கைதாவது தொடர்கதை ஆகிறது

இந்தியா,தமிழகம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியை சேர்ந்த 4 இளைஞர்கள் கடந்த செப்டம்பர்-2023 யில் மீன்பிடி வேலைக்காக குவைத்திற்க்கு வந்துள்ளனர். இந்நிலையில் டிசம்பர்-5,2023 அன்று இவர்களுடன் இன்னொரு எகிப்து நாட்டை சேர்ந்த நபர் உட்பட 5 பேரையும் போதைப்பொருள் வழக்கில் குவைத் கடலோர காவல்படை கைது செய்ததாக கும்ம்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. புதிதாக வேலைக்கு சென்ற இவர்களுக்கு மொழிகூட தெரியாத நிலையில் உடன் உள்ள நபர் சொல்லி வேலைகளை செய்து வந்துள்ளனர் என்றதும், அந்த எகிப்து நபர் கடலில் மீன்பிடிக்க சென்ற போது ஈராக்,ஈரான் எல்லையில் இருந்து இதை கடத்தி வந்துள்ளதும், சிக்கிய போது இந்த அப்பாவி தமிழ் இளைஞர்களையும் மாட்டி விட்டதும் தெரிய வந்துள்ளது.

போலீஸ் விசாரணையில் அந்த நபர் இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று காவல்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. குவைத்திலுள்ள சிலரை குடும்பத்தினர் தொடர்பு கொண்ட போது இந்த தகவல்கள் கிடைத்துள்ளது.மேலும் இவருடைய முதலாளியும்(Sponsor) தமிழக நபர்கள் அப்பாவிகள் எனவும், எகிப்து நாட்டவர் தான் ஏதோ செய்துள்ளான் எனவும், இருநாட்டு வெளியுறவுத்துறை மூலம் முயற்சி செய்து, இவர்கள் குற்றவாளி இல்லை என்பதை நிருபித்து மீட்க முயற்சி எடுக்க சொல்லியுள்ளார்.

இந்த வழக்கில் சிக்கியுள்ள தமிழர்கள் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது. வினோத், சந்துரு, ஷேசு மற்றும் கார்த்திக் என்பதாகும். இதில் ஒருவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளது. இன்னொரு நபருக்கு 3 தங்கைகள் உள்ளது. மேலும் இது தொடர்பாக குடும்பத்தினர், நாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் சென்று குடும்பத்தை கரையேற்றுவார்கள் என்று கடன்பட்டு அனுப்பிய நிலையில் இவர்கள் கண்டிப்பாக இப்படி ஒரு தவறையும் செய்ய மாட்டர்கள் எனவும், எப்படியாவது இவைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் குவைத் இந்திய தூதரகம் முயற்சி எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு மனு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாதாரண ஒரு பிரச்சனை என்றால் சமூக ஆர்வலர்கள், அந்தந்த நாட்டு தூதரகங்கள் மூலம் எப்படியாவது மீட்க முடியும், போதை பொருள் கடத்தல் போன்ற பயங்கரமான குற்றங்களுக்கு மரணதண்டனை வரையில் வழங்கபடும். எனவே இரு நாட்டு உயர்மட்ட வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்க முடிந்தால் மட்டுமே இதற்கான தீர்வு கிடைக்கும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்துக்கு செல்லும் வரை ஒவ்வொரு வளைகுடா இந்தியர்களும் இதை பகிர்வு செய்து உதவுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Workers | Arrested Kuwait | Drug Case

Add your comments to

Sunday, October 29, 2023

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் நாட்டிற்கு வெளியே உள்ள வீட்டு தொழிலாளர்(வீட்டுப் பணியாளர்கள்) பிரிவை சேர்ந்த அனைவரின் பணி அனுமதியையும் 3 மாதங்களுக்குப் பிறகு, ஸ்பான்சர் ரத்து செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

Image : துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்

குவைத்தில் நீங்கள் ஒரு வீட்டு பணியாளர் என்றால் இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்

குவைத் உள்துறை அமைச்சகம் இன்று(29/10/23) ஞாயிற்றுகிழமை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் நாட்டிலிருந்து வெளியேறிய வீட்டுப் பணியாளரின்(Article-20) குடியிருப்பு அனுமதியை(விசாவை) 3 மாதங்களுக்குப் பிறகு ஒரு ஸ்பான்சர்(குவைத்தி) ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வருகின்ற நவம்பர்-5,2023 முதல் இது அமலுக்கு வரும் என்று முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் அஹ்மத் அல் சபாவை மேற்கோள்காட்டி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'SAHAL' செயலி மூலம் தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யலாம். அது முடியாவிட்டால், குடியிருப்பு விவகாரத் துறையின் அலுவலகம் ஒன்றுக்கு சென்று தொழிலாளியின் குடியிருப்பு அனுமதியை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். விசா Validity உள்ள ஒரு தொழிலாளி நாட்டை விட்டு வெளியேறி 6 மாதங்களுக்குப் பிறகு குவைத்தில் நுழையத் தவறினால், தொழிலாளியின் குடியிருப்பு அனுமதி தானாக(Automatically) முன்வந்து ரத்து செய்யப்படும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் இந்த புதிய உத்தரவு இன்று வெளியாகியுள்ளது. இந்த புதிய உத்தரவு 6 மாத கால தாமதத்தை தவிர்க்க உதவும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதில் பிரச்சனை என்னவென்றால், பணம் கொடுத்து வெளியே விசா அடித்து சட்டவிரோதமாக(இப்படி செய்வது தொழில் சட்டவிரோதமான செயல்) ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் குவைத்தில் வேலை செய்து வருகி்ன்றனர். இந்த வகை விசா உள்ள நபர்கள் குவைத் விமான நிலையம் வழியாக தாயகம் செல்லும் போது சம்பந்தப்பட்ட ஸ்பான்சருக்கு(குவைத்திக்கு) குறுந்தகவல் போகும். புதிய உத்தரவை பயன்படுத்தி 90 நாட்களுக்குள் நீங்கள் திரும்பவில்லை என்றால் உங்கள் விசாவை ஸ்பான்சர் கேன்சல் செய்தால் யாரையும் கேள்வி கேட்க முடியாது.

எனவே இப்படிப்பட்ட நபர்கள் குவைத் திரும்பும் முன்னர் உங்கள் விசா Validity ஐ சோதனை செய்த பிறகு குவைத் திருப்புவது நல்லது. இல்லை என்றால் குவைத் விமான நிலையம் வரையில் வந்து குவைத்தில் நுழைய முடியாமல் மீண்டும் டிக்கெட் போட்டு தாயகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும்...இல்லை ஏற்படுகிறது. உங்களுக்கு இப்படி வெளியே விசா அடித்து தருகின்ற நபர்கள் இப்படி பலரை ஏமாற்றுகின்றனர். இதிலும் ஒருபடி மேலே சென்று உங்கள் மேல் வழக்கு பதிவும் செய்கின்றனர். அப்படிப்பட்ட நபர்கள் என்றால் கைது செய்து Finger வைத்தே அனுப்புவார்கள். பிறகு குவைத் வரவே முடியாது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Domestic Worker | Kuwait Visa | Visa Cancel

Add your comments to

Saturday, October 28, 2023

வளைகுடா பயணிகள் கவனத்துக்கு ஊறுகாய், நெய் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் செக்-இன் பைகளில் கொண்டு செல்ல தடை

இது இந்தியாவின் அனைத்து விமான நிலையத்திற்கும் பொருந்தும், எனவே இத்தகைய காரணங்களால் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் எந்த பலனும் இல்லை என்பதை கவனத்தில் கொள்க

Image : Indian Airport

வளைகுடா பயணிகள் கவனத்துக்கு ஊறுகாய், நெய் உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் செக்-இன் பைகளில் கொண்டு செல்ல தடை

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் பயணம் செய்யும்போது கொண்டு வரக்கூடாத பொருட்களின் பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களுக்காக ஏராளமான இந்தியர்கள் வளைகுடாவிற்குச் செல்வதால், இந்தியா-யுஏஇ விமானப் பாதை மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றாகும், மேலும் பண்டிகைக் காலம் நெருங்கும்போது பார்வையாளர்களின் வருகை கணிசமாக அதிகரிக்கும். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் எடுத்துச் செல்வதால்,செக்-இன்(Check-In) பேக்கேஜ் நிராகரிப்பு அதிகரித்துள்ளது.

பயணிகள் எடுத்து செல்கின்ற சாமான்களில் கொப்பரை மற்றும் பட்டாசுகள் வரை:

செக்-இன் சாமான்களில் அடிக்கடி காணப்படும் சில தடைசெய்யப்பட்ட பொருட்கள் உலர்ந்த தேங்காய்(கொப்பரை), பட்டாசுகள், தீப்பெட்டிகள், பெயிண்ட், கற்பூரம், நெய், ஊறுகாய், எண்ணெய் உணவுகள், இ-சிகரெட்டுகள், லைட்டர்கள், பவர் பேங்க்கள் மற்றும் ஸ்ப்ரே பாட்டில்கள் போன்ற பொருட்களில் சில. பல பயணிகள் இதைப்பற்றி தெரியாமல் இந்த அனைத்து பொருட்களையும் கொண்டு வருகிறார்கள். இது ஆபத்தை உருவாக்குகிறது. இந்த பொருட்கள் வெடிக்கும் திறன் காரணமாக விபத்துகளின் தீவிரத்தை அதிகரிக்கின்றன.

எரியக்கூடிய பொருட்கள்:

கடந்த ஆண்டு, ஒரே மாதத்தில் பயணிகளின் செக்-இன் பைகளில் 943 காய்ந்த தேங்காய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காய்ந்த தேங்காயில் அதிக அளவு எண்ணெய் இருப்பதால், அது தீயை உண்டாக்கும். இந்தியாவின் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி பணியகம் (BCAS) மார்ச் 2022 இல் இதை தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் சேர்த்தது. இதுபற்றி பெரும்பாலான பயணிகளுக்கு இன்னும் தெரியவில்லை.

பயணிகளின் கவனம்:

செக்-இன் சாமான்களை நிராகரிக்கும் போக்கு அதிகரித்து வருவது, விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் தடைசெய்யப்பட்ட அல்லது ஆபத்தான பொருட்களைப் பற்றி பொதுவான பயணிகளிடையே விழிப்புணர்வு இல்லாததைக் குறிக்கிறது. ஆபத்தான மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்கள் தொடர்பாக விமான நிலையம் அல்லது விமான நிறுவனங்கள் வழங்கும் வழிகாட்டுதல்களை தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகள் பயணிகளை கேட்டுக்கொள்கிறார்கள்.

செக்-இன் பேக்கேஜ் ஸ்கிரீனிங் செயல்முறை:

திரையிடப்பட்ட மொத்த பைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது நிராகரிக்கப்பட்ட செக்-இன் பைகளின் விகிதம் டிசம்பர் 2022 இல் 0.31 சதவீதத்திலிருந்து மே மாதத்தில் 0.73 சதவீதமாக அதிகரித்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் உள்ள பேக்கேஜ் அமைப்பு, டெர்மினல் இரண்டில் ஒரு மணி நேரத்திற்கு 9,600 பைகளையும், டெர்மினல் ஒன்றில் மணிக்கு 4,800 பைகளையும் கையாளும் 8 கிமீ பேக்கேஜ் பெல்ட்டைக் கொண்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பொருட்களில் சில:

  1. காய்ந்த தேங்காய்(கொப்பரை) 
  2. பெயிண்ட் 
  3. பட்டாசுகள்
  4. தீப்பெட்டிகள்
  5. பெயிண்ட்
  6. கற்பூரம் 
  7. நெய் 
  8. ஊறுகாய் 
  9. எண்ணெய் உணவு பொருட்கள் 
  10. மின் சிகரெட்டுகள் 
  11. லைட்டர்கள் 
  12. பவர் பேங்க்கள் 
  13. ஸ்ப்ரே பாட்டில்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Airport | Uae Travel | Banned Items

Add your comments to

Sunday, October 22, 2023

குவைத்தில் வலைதள பதிவு மூலம் இந்தியரான செவிலியர் ஒருவர் சிக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய செவிலியர் ஒருவர் மீது இன்று பொது நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

Image : பதிவுக்காக மட்டுமை

குவைத்தில் வலைதள பதிவு மூலம் இந்தியரான செவிலியர் ஒருவர் சிக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய செவிலியர் ஒருவர் மீது இன்று(22/10/23) பொது நல நீதிமன்றத்தில் புகார்(வழக்கு) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. முபாரக் அல் கபீர் மருத்துவமனையில் பணிபுரியும் இந்திய செவிலியருக்கு எதிராக இந்த வழக்கு தொடர பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று மாலையில் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீன போர் துவங்கிய பிறகு இதுபோன்ற ஒரு புகார் குவைத்தில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். காசாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்தற்கு ஆதரவாக செவிலியர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது இஸ்ரேல் மீதான குவைத்தின் ஆதரவான நிலைப்பாட்டிற்கு முரண்பாடானதாகவும், குவைத் அரசுக்கு சவால் விடுவதாக இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த செவிலியர் குறித்த கூடுதல் தகவல்களை அமைச்சகம் வெளியிடவில்லை. இந்த செவிலியர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வளைகுடா உள்ளிட்ட பல நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கும் தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றன நிலையில், இந்தியா, அமெரிக்கா போன்ற பல நாடுகள் இஸ்ரேலுக்கு தங்களுடைய ஆதரவை அளித்து வருகின்றன. தங்களுடைய நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்க்கு செல்கின்ற யாராக இருந்தாலும் அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் மற்றும் நிலைப்பாடு போன்றவற்றை அறிந்து செயல்படுவது நலம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர்.சுனில் ராவ் பஹ்ரைன் நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Nurse | Social Post | Case Filed

Add your comments to

Friday, October 20, 2023

குவைத்தில் சிவில் ஐடி பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நபர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்

குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது

Image : Civil Id Office

குவைத்தில் சிவில் ஐடி பெற விண்ணப்பித்து காத்திருக்கும் நபர் நீங்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்கு தான்

குவைத்தில் இந்த ஆண்டு மே-23க்கு முன் பெறப்பட்ட சிவில் ஐடி அட்டைக்கான விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக புதிதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதற்காக ஏற்கனவே 5 தினார் கட்டணம் செலுத்தியவர்கள், புதிதாக மீண்டும் விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. சிவில் கார்டு வழங்குவதற்கு முன்பு செலுத்தப்பட்ட 5 தினார் கட்டணம் அவர்கள் பெயரில் ரசீது பதிவு செய்யப்படும்.

இந்த தகவலை சிவில் தகவல் ஆணைய பதிவு விவகார துணை இயக்குநர் ஜெனரல் ஜாபர் அல்-கந்தாரி தெளிவுபடுத்தினார். இந்தத் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்களின் அட்டை வழங்கல் விரைவுபடுத்தும் நோக்கில் இதை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். பெரும்பாலான புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு சிவில் ஐடி கார்டுகளை 24 முதல் 48 மணி நேரத்திற்குள் வழங்க முடிகிறது எனவும், மே 23க்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 200,000 சிவில் ஐடி அட்டைகள் விநியோகிக்கப்பட உள்ளன,இதில் எத்தனை நபர்கள் தற்போதைய நிலையில் விண்ணப்பித்த சிவில் ஐடி அட்டைகளை பெறுவார்கள் என்பது தெரியவில்லை.

மேலும் இவ்வளவு விண்ணப்பங்களுக்கு சிவில் ஐடி அட்டை வழங்குவதில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்நிலையிலேயே இந்தத் தேதிக்கு முன் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான சிவில் ஐடி விநியோகம் நிறுத்தப்பட்டு,புதிய விண்ணப்பத்தை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Id | Kuwait Paci | Civil Id

Add your comments to

Wednesday, October 18, 2023

அனைவரும் Share செய்யுங்கள்;போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல் இருக்க உதவியாக இருக்கும்:

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஏஜென்சிகளில் மத்திய அரசின் அனுமதி பெற்ற ஏஜன்சிகளின் விவரங்கள் பின்வருமாறு

Image : செய்தி பதிவிற்க்காக பதிவிறக்கம் செய்யப்பட்டது

அனைவரும் Share செய்யுங்கள்;போலி ஏஜெண்டுகளிடம் ஏமாறாமல் இருக்க உதவியாக இருக்கும்

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஏஜென்சிகளில் மத்திய அரசின் அனுமதி பெற்ற ஏஜன்சிகளின் விவரங்கள் பின்வருமாறு.அனுமதி பெற்றுள்ள ஏஜென்சிகள் விபரங்களை அரசு இடையிடையே புதுப்பித்தல் செய்து வெளியிடும். அத‌ன்படி நிலுவையிலுள்ள அனுமதி பெற்றுள்ள ஏஜென்சிகள் விவரங்கள்

இனி வரும் காலங்களில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல இருப்பவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட ஏஜன்சிகளின் மூலம் சென்றால் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஒருவேளை அப்படியே பிரச்சனைகள் வந்தாலும் அந்த ஏஜன்சிகள் பொறுப்பேற்பார்கள்.

ஏனெனில் அரசு அறிவுறுத்தி உள்ள விதிகளின் படி இந்த நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த தகவல்களை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அதன் மூலம் சில நேரங்களில் பலர் காப்பாற்றப்படலாம். தமிழகத்தில் அனுமதி பெற்றுள்ள ஏஜென்சிகள் விபரங்களை அறிய இந்த PDF File- ஐ Download செய்து 151-166 வரையிலான பக்கங்களை பார்க்கவும். PDF DOWNLOAD LINK

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to