BREAKING NEWS
latest

Sunday, February 4, 2024

குவைத்தின் இன்றைய Exchange மற்றும் Gold Rate பின்வருமாறு

குவைத்தின் தினசரி தங்கம் விலை மற்றும் பணப்பரிமாற்ற மதிப்பு நிலவரங்கள் இங்கே அறியலாம்

Image : தங்கம் மற்றும் தினார்

இன்றைய Exchange மற்றும் Gold Rate பின்வருமாறு

குவைத்தின் தினசரி தங்கம் விலை மற்றும் பணப்பரிமாற்ற மதிப்பு நிலவரங்கள் இங்கே அறியலாம் குவைத்தின் இன்றைய Exchange மற்றும் Gold Rate பின்வருமாறு 

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(04/02/24) இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 268.67 
  • இலங்கை 1KD = 1008.17 
  • பதிவு மதியம் 12:00 PM நிலவரப்படி

குவைத்தின் இன்றைய(04/02/24) தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வரியாக 1 கிராமின் இன்றைய விலை பின்வருமாறு:

  •  24K= 20.65 KD
  •  22K= 19.60 KD
  •  21K= 18.71 KD 
  •  18K= 16.04 KD 
  •  பதிவு மதியம் 02:00 PM நிலவரப்படி

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Gold Price | Dinar Rate | Daily Update

Add your comments to

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த மாரியப்பன்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் குவைத்தில் மரணமடைந்தார்

குவைத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்த இந்தியா, தமிழகம், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாகதேவியை அடுத்த சுண்ணாம்புக்கல் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது-50). இவருடைய தந்தை பெயர் முத்தையா, இவர் குவைத்தின் எகேலா பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம்(02/02/2024) வெள்ளிக்கிழமை அன்று திடிரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார்.

இந்த தகவலறிந்த மக்கள் சேவை மைய அமைப்பு துரிதமாக செயல்பட்டு சட்ட நடவடிக்கைகளை முடித்தது. இதையடுத்து அன்னாரின் பூத உடல் இன்று(04/02/2024) இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுகிறது. அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் இன்று மதியம் சரியாக 1 மணிக்கு குவைத்தின் சபா மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Worker | Kuwait News | Indian Worker

Add your comments to

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 6°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : குவைத் சிட்டி

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(04/02/24) ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை குளிர்ச்சியாகவும்,குறைந்தபட்சம் 6°C அளவுக்கும் அதிகபட்சமாக 21°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 06-26 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் கடுமையான குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 06-20 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

Wednesday, January 31, 2024

இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவிலும் இதை பின்பற்றலாம்

சாதாரணமாக படத்திற்காக பல கோடி ரூபாய் செலவழித்து கடைசியில் செட் இடிக்கப்படுவது வழக்கமான ஒன்று அதை மாற்றி அமைத்து காட்டி சினிமா குழுவினர்

Image : படப்பிடிப்புக்காக கட்டப்பட்ட வீடு

இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவிலும் இதை பின்பற்றலாம்

சாதாரணமாக படத்திற்காக பல கோடி ரூபாய் செலவழித்து கடைசியில் செட் இடிக்கப்படுவது வழக்கமான ஒன்று. ஆனால் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு படத்தின் குழுவினர் மாற்றி யோசித்து உள்ளனர். வரும் காலங்களில் இந்திய சினிமாவே இமிடேட் செய்யக்கூடிய கூடிய மாதிரியை இவர்கள் ஆரம்பித்து வைத்துள்ளனர்.

Image : வீடு முன்பு மற்றும் பின்பு

அதாவது அவர்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்ட பகுதியில் முதலில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து படத்தை முடிக்க திட்டமிட்ட பட குழுவினர். ஆனால் பட குழுவினர் பிறகு அந்த ஊரில் கஷ்டத்தில் உள்ள ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்து அதில் படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்தனர். அத‌ன்படி வீட்டை கட்டி முடித்த பிறகே இந்த படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

Image : திறப்பு நிகழ்ச்சி

இந்தியா கேரளா மாநிலம், கண்ணூர் அடுத்த பானூரில் சினிமா படப்பிடிப்புக்காக கட்டப்பட்ட வீடு ஒரு குடும்பத்திற்கு இனிமுதல் நிழல் தரும். அன்போடு கண்மணி படத்தின் படப்பிடிப்பிற்காக கட்டப்பட்ட வீடுதான் ஏழ்மையான குடும்பத்திற்கு நிரந்தரமான வீடாக மாறியுள்ளது. கடந்த நாள் படப்பிடிப்பு முடிந்த நாளே நடிகர் சுரேஷ் கோபி வீட்டை திறந்து வைத்து இதற்கான சாவியை குடும்பத்திடம் வழங்கினார்.

இந்த புதிய முன்னுதாரணமானது பானூரில் உள்ள பினு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான வீடு என்ற கனவு படத்தின் மூலம் நனவாகியுள்ளது. பெயரைப் போலவே, இந்த வீடு ஒரு அடையாளமாகவும், நினைவகம் மற்றும் மகிழ்ச்சியின் சின்னமாகவும் என்றும் இப்படியே அழகாக இருக்கட்டும் என்று வாழ்த்துவோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Sunday, January 28, 2024

குவைத் சாலை விபத்தில் தமிழக இளைஞர் உயிரிழந்தார்

குவைத் சாலை விபத்தில் தமிழக இளைஞர் உயிரிழந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது

Image : உயிரிழந்த அமீர்

குவைத் சாலை விபத்தில் தமிழக இளைஞர் உயிரிழந்தார்

குவைத்தில் வேலை செய்து வந்த இந்தியா தமிழகம், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அடுத்த வடக்கு தெரு பகுதியை சேர்ந்த அமீர் அஹமது(வயது-23). இவருடைய அப்பா பெயர் முஹம்மது இப்ராஹிம் ஆகும். அமீர் குவைத்திலுள்ள உணவகம் ஒன்றில் டெலிவரி பைக் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று(27/01/24) சனிக்கிழமை மாலை ரிக்கா என்ற பகுதியில் வைத்து நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இவருடைய உடலை தாயகம் அனுப்பும் பணிகளை மக்கள் சேவை மையம் செய்து வருவதாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவு‌ம், உடல் தாயகம் அனுப்பும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Worker | Road Accident | Delivery Driver

Add your comments to

Friday, January 26, 2024

குவைத்தில் கடந்த தினம் அறிவிக்கப்பட்ட குடும்ப விசா நிபந்தனையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

குவைத்தில் புதிய குடும்ப விசா நிபந்தனையில் இருந்து குறிப்பிட்ட சில பிரிவினருக்கு நிபந்தனை தளர்வுகள் அறிவிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளன

Image credit: குவைத் உள்துறை

குவைத்தில் கடந்த தினம் அறிவிக்கப்பட்ட குடும்ப விசா நிபந்தனையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளித்து புதிய உத்தரவு வெளியாகியுள்ளது

குவைத்தில் குடும்ப விசா பெற விதிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச சம்பள வரம்பு 800 தினார்கள் மற்றும், பல்கலைக்கழக பட்டம் போன்ற விதிமுறையில் இருந்து 14 பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துணைப் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஆக்டிங் உள்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகள் உடைய ஃபஹத் அல் யூசெப் அவர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்தார் என்று குவைத்தின் தினசரி நாளிதழ் இன்று(26/01/24) சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது. பின்வரும் பிரிவினருக்கு இந்தத் நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  1. அரசுத் துறையில் வேலை செய்கின்ற ஆலோசகர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் சட்ட ஆராய்ச்சியாளர்கள் 
  2. மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்கள் 
  3. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள்
  4. பள்ளி முதல்வர்கள், அவர்களின் பிரதிநிதிகள், கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை துறையில் வேலை செய்கின்ற பணியாளர்கள் உட்பட அரசுத்துறையில் வேலை செய்கின்ற ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குவார்கள் 
  5. நிதி ஆலோசகர்கள் 
  6. பொறியாளர்கள்
  7. இமாம்கள், போதகர்கள், மசூதிகளில் பாங்கு அழைப்பவர்கள், குர்ஆனை மனப்பாடம் செய்தவர்கள்
  8. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் வேலை செய்கின்ற நூலகர்கள்
  9. செவிலியர்கள், துணை மருத்துவர்கள், அதே துறையில் பல்வேறு சிறப்பு பிரிவுகளில் வேலை செய்பவர்கள், அத்துடன் சமூக சேவை வேலை செய்கின்ற அமைச்சகத்தின் கீழ் நர்சிங் துறையில் வேலை செய்கின்ற ஊழியர்கள் 
  10. அரசுத் துறையில் வேலை செய்கின்ற சமூகப் பணியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் 
  11. பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் நிருபர்கள்
  12. கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களில் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் 
  13. விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் 
  14. கல்லறை தோட்டங்களில் இறந்த உடல்களை பராமரிப்பவர்கள் மற்றும் தகனம் செய்பவர்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Family Visa | Kuwait Visa | Kuwait Workers

Add your comments to

Thursday, January 25, 2024

குவைத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் அனுப்பபட்ட பிரச்சினை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது

குவைத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் அனுப்பபட்ட இந்த சம்பவம் கம்பெனி எடுத்த தனிபட்ட நடவடிக்கையாக தெரிகிறது

Image : குவைத் விமான நிலைய நுழைவாயில்

குவைத்தில் இருந்து இந்தியர்கள் தாயகம் அனுப்பபட்ட பிரச்சினை வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது

குவைத்தில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்த இந்தியர்கள் தங்கள் முதலாளிகளால் இந்தியா அனுப்பப்பட்ட பிரச்சனையின் பின்னனி குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது. இதையடுத்து குவைத் இந்திய தூதரகம் இந்த பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தியது. விசாரணையில் கிடைத்த தகவல் வெளியுறவு அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்படும்.

நாட்டின் எண்ணெய் தொடர்பான தொழில் நிறுவனமான ஈக்விட்க்கான இரண்டு நிறுவனங்களில் ஒப்பந்தப் பணிகளில் ஈடுபட்டு பணிபுரிந்து வந்த இந்தியர்கள் 13 பேர் நிறுவன உரிமையாளர்களால் பணி நீக்கம் செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அவர்கள் வேலை செய்கிற நிறுவனங்களில் முழக்கங்கள் எழுப்பியதுடன் இனிப்பு வழங்கியதாகவும், இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிற பாகிஸ்தான் குடிமக்கள் சிலர் இந்தக் காட்சிகளை படமாக்கி நிறுவன அதிகாரிகளுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கடும் அழுத்தத்திற்கு உள்ளான நிறுவன அதிகாரிகள், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர் எனவும் ஒன்பது பேர் திங்கட்கிழமை அன்று இரவே வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அடுத்த தினத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவரும் வட இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள். மேலும் இதே நேரத்தில் கொண்டாத்தில் ஈடுபட்ட மற்ற சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது ஒரு தனிப்பட்ட சம்பவமாகும், குவைத் உள்துறை அமைச்சக நடவடிக்கையாக தெரியவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Wednesday, January 24, 2024

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மதுபானக் கடையை திறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

சவுதி மதுபானக் கடையை திறக்கத் தயாராகி வருகிறது என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது

Image : சவுதி அரேபியா சிட்டி

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாக மதுபானக் கடையை திறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

சவுதி அரேபியா தனது முதல் மதுபானக் கடையை தலைநகர் ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது, இது முஸ்லீம் அல்லாத குறிப்பிட்ட பிரிவுகளில் உள்ள வெளிநாட்டினருக்காக மட்டுமே சேவை செய்யும் என்ற செய்தி இன்று(24/01/24) மாலையில் வெளியாகியுள்ளது.

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளதால், முஸ்லீம் கொள்கைகள் தீவிரமாக பின்பற்றும் நாட்டை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறக்க சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் ஆகும். எண்ணெய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தை உருவாக்க விஷன் 2030 எனப்படும் பரந்த திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.

மேலும் முஸ்லீம் அல்லாத சாதாரண வெளிநாட்டினர் இந்த கடைக்கு செல்ல முடியுமா என்பது தொடர்பான தகவல்கள் தெளிவாக இல்லை. மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் ஆசியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை சற்றுமுன் பல பிரபலமான செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Saudi Arabia | Alcohol Store | First Shop

Add your comments to

Tuesday, January 23, 2024

இந்தியாவில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்புகள் வழங்கிய இந்தியர்கள் குவைத்தில் இருந்து திருப்பி அனுப்பபட்ட தகவல் வெளிவந்துள்ளது

குவைத்தில் பிராண பிரதிஷ்டை தினத்தன்று இனிப்பு வழங்கிய இந்தியர்கள் நாடு கடத்தபட்டதாக செய்தி வெளியாகியுள்ளது

Image : செய்தி பதிவுக்காக மட்டும்

இந்தியாவில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்புகள் வழங்கிய இந்தியர்கள் குவைத்தில் இருந்து திருப்பி அனுப்பபட்ட தகவல் வெளிவந்துள்ளது

இந்தியாவில் ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இனிப்புகள் வழங்கிய இந்தியர்கள் குவைத்தில் இருந்து விமானம் மூலம் தாயகத்திற்கு திரும்பி அனுப்பபட்டதாக இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து செய்திகளை வெளியிடும் இந்திய மீடியா ஒன்று சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் ஒன்பது இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி இருந்த இரண்டு நிறுவனங்கள் அவர்களை வேலையில் இருந்து நீக்கி நாட்டை விட்டு அனுப்பியதாக மேலும் தெரிவித்துள்ளது. பிரதிஷ்டை தினமான நேற்று(22/01/24) திங்கள்கிழமை தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இனிப்புகளை இவர்கள் வழங்கினர் எனவும், இதையடுத்து அவர்கள் மீது நிறுவன உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தனர் எனவும் செய்தியில் தெரிவித்துள்ளது. ஒன்பது பேரும் திங்கள்கிழமையான நேற்று இரவே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தொடர்பான கூடுதல் விபரங்களை மீடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த விஷயம் தொடர்பாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்க்கு இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை என்று தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் ஆகும். குவைத்திலுள்ள எந்த பத்திரிகையிலும் இந்த நேரம் வரையில் இந்த விஷயம் தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

ஷார்ஜாவில் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் இந்தியரை கொலை செய்து பாலைவனத்தில் புதைத்த கொடுரமான சம்பவம் அரங்கேறியுள்ளது

இந்தியர் பணியிடத்தில் வைத்து கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் மூலம் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Image : கொலை செய்யப்பட்ட அனில்குமார்

ஷார்ஜாவில் கண்டித்ததால் ஏற்பட்ட முன்விரோதம் இந்தியரை கொலை செய்து பாலைவனத்தில் புதைத்த கொடுரமான சம்பவம் அரங்கேறியுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இந்தியர் ஒருவரை கடத்தி கொலை செய்து குழிதோண்டி புதைத்த வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் முட்டடையை சேர்ந்த அனில்குமார் வின்சென்ட் (வயது-60) என்பவரே உயிரிழந்த இந்தியர். அனில் கடந்த ஜனவரி 2ம் தேதி காணாமல் போனார். துபாயில் உள்ள டி சிங் டிரேடிங் என்ற நிறுவனத்தில் பி.ஆர்.ஓ- வாக வேலை செய்து வந்தார்.

மேலும் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட இரண்டு பாகிஸ்தான் குடிமக்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அனில் குமார் கண்டித்ததன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் அனில் குமார் கடந்த 36 ஆண்டுகளாக ஊழியராக உள்ளார்.

போலீசார் விசாரணையில், அனில் குமாரை கழுத்தை நெரித்து கொன்று, வாகனத்தில் எடுத்து சென்று ஷார்ஜா பாலைவனத்தில் புதைத்தது தெரிய வந்துள்ளது. ஜனவரி 12ஆம் தேதி போலீஸார் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தான் நாட்டவர்கள் மூவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சடலத்தை மறைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் ஓட்டுநரான முன்றாவது குற்றவாளி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தப்பித்து பாகிஸ்தான் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Indian Worker | Dubai Police | Pakistans Arrested

Add your comments to