BREAKING NEWS
latest

Tuesday, February 6, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(06/02/24) தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.60 KD
  2. 22K= 19.50 KD 
  3. 21K= 18.61 KD 
  4. 18K= 15.95 KD 

 (பதிவு மதியம் 04:15 மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to

குவைத்தின் இன்றைய துல்லியமான Exchange மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத்தின் இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகளை இங்கே அறியலாம்

Image : குவைத் தினாரின புகைப்படங்கள்

குவைத்தின் இன்றைய துல்லியமான Exchange மதிப்புகள் நாடுகள் வாரியாக பின்வருமாறு

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(06/02/24) இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 270.45
  • இலங்கை 1KD = 1017.00 
  • நேபாளம் 1KD = 432.73
  • பிலிப்பைன்ஸ் 1KD = 183.89
  • பாகிஸ்தான் 1KD = 909.92

(பதிவு மாலை 03:30 PM நிலவரப்படி மற்றும் சில நேரம் Exchange நிறுவனங்களை பொறுத்து இங்கு குறிப்பிட்டுள்ள மதிப்பில் சிறிய மாற்றங்கள் வரலாம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Exchange | Dinar Rate | Daily Update

Add your comments to

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 6°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(06/02/24) செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 6°C அளவுக்கும் அதிகபட்சமாக 22°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 08-32 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 06-30 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூடுபனிக்கான வாய்ப்பும் உள்ளது. சில பகுதிகளில் இடி மின்னல் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

குவைத்தில் மொபைல் பயனாளர்கள் தங்களுடைய மொபைல் சேவை தடைப்படாமல் இருக்க தங்களுடைய சமீபகால KYC விபரங்களை புதுபிக்க வேண்டும் என்று மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது

குவைத்தில் மொபைல் பயனாளர்கள் சேவை தடைப்படாமல் இருக்க KYC விபரங்களை புதுபிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

Image : மாதிரி புகைப்படம

குவைத்தில் மொபைல் பயனாளர்கள் தங்களுடைய மொபைல் சேவை தடைப்படாமல் இருக்க தங்களுடைய சமீபகால KYC விபரங்களை புதுபிக்க வேண்டும் என்று மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளது

குவைத்திலுள்ள மொபைல் பயனாளர்கள் தங்கள் KYC விவரங்களை புதுப்பிக்குமாறு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்(CITRA) கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைகளைப் பெற இது அவசியம். தங்கள் விவரங்களைப் புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் செயலற்றதாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான அடையாளச் சான்றுகள் மற்றும் பிற தகவல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும், பழைய தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களைப் புதுப்பிக்க வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன என்றும் Competition and Operators Affairs Department மேலாளர் காலித் அல் கராவி கூறினார். இதையடுத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் பயனாளர்கள் தங்கள் சிவில் ஐடியை ஆன்லைனில் அல்லது மொபைல் செயலி மூலம் புதுப்பிக்குமாறு பயனாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இதை எப்படி செய்வது என்று கேட்டால் நீங்கள் குவைத்திலுள்ள எந்த மொபைல் நெட்வொர்கை பயன்படுத்தி வந்ததாலும் அதற்காக அதிகாரப்பூர்வ செயலியை சம்பந்தப்பட்ட நிறுவனம் Playstore யில் வெளியிட்டு இருக்கும்,அதை உங்கள் கைபேசியில் Download செய்யலாம், பெரும்பாலானவர்கள் Recharge உள்ளிட்டவை செய்வதற்காக ஏற்கனவே Download செய்து பயன்படுத்தி வரலாம். புதியதாக Download செய்பவர்கள் உங்களுடைய மொபைல் எண்ணை கொடுத்து login செய்த பிறகு மேற்குறிப்பிட்ட விபரங்களை Update செய்ய முடியும்.

இது Online மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும் மற்றும் புதிய அறிவிப்பின் படி நீங்கள் பயன்படுத்தி வருகின்ற சிம் உங்களுடைய பெயரில் இல்லை என்றால் எந்த நேரத்திலும் சேவை ரத்து ஆகாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலியை Download செய்து நீங்கள் பயன்படுத்தும் Mobile எண்ணை கொடுத்து login செய்து Profile என்ற Option-ஐ click செய்து பார்த்தாலே சிம் யாருடைய பெயரில் உள்ளது என்று தெரிந்து விடும். சில நேரத்தில் உங்களுடைய I'd proof கொடுத்து சிம் எடுத்திருந்தால் கூட குளறுபடி காரணமாக பெயர் மாற வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Moble Network | KYC Update | Kuwait SIM

Add your comments to

Monday, February 5, 2024

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று விற்கப்படும் தங்க விலை நிலவரத்தை துல்லியமாக இங்கே அறியலாம்

Image : தங்க விலை நிலவரம்

குவைத்தின் இன்றைய தங்க விலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தின் இன்றைய(05/02/24) தங்கத்தின் விலை நிலவரங்கள் கேரட் வாரியாக 1 கிராமின் விலை பின்வருமாறு: 

  1. 24K= 20.60 KD
  2. 22K= 19.50 KD 
  3. 21K= 18.61 KD 
  4. 18K= 15.95 KD 

 (பதிவு மதியம் 02:00 மணி நிலவரப்படி)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Buying Gold | Gulf Jewellery | Gold Rate

Add your comments to

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

குவைத்தில் வசிக்கின்ற வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளின் நீண்ட நாள் காத்திருப்புக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது

Image : Kuwait Airport

குவைத்தில் விசிட் விசா வழங்குவது மீண்டும் துவங்கியுள்ளது

வெளிநாட்டினருக்கு குடும்ப விசிட் விசா வழங்குவதை மீண்டும் தொடங்க குவைத் அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இந்த முடிவு பிப்ரவரி-7,2024 புதன்கிழமை முதல் அமலுக்கு வரும். METTA தளத்தின் மூலம் விசா பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப விசிட் விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான பின்வரும் நிபந்தனைகள் கட்டாயமாகும். மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள் ஆகியோருக்கு விசிட் விசா பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மாத சம்பளம் 400 தினார் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 800 தினார் சம்பளம் உள்ளவர்களுக்கு, மற்ற உறவினர்கள் (சகோதரர்கள், மனைவியின் தாய் தந்தை, மனைவி/உடன்பிறப்புகள்) ஆகியோருக்கான விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். குவைத்திற்கு சொந்தமான எதாவது ஒரு தேசிய விமான நிறுவனத்தில் விசிட் வந்தவர்கள் வருவதற்கும், திரும்ப செல்வதற்காக டிக்கெட்டுகளை எடுத்து கொண்டு மட்டுமே நாட்டை(குவைத்தை) அடைய வேண்டும். மேலும் விசிட் விசாவை வசிப்பிட(Residence Permit) விசாவாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்க மாட்டேன் என்று உறுதி மொழி பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும் விசிட் வந்துள்ள நேரத்தில் எதாவது காரணத்தால் சிகிச்சை தேவை என்றால் அரசு மருத்துவமனைகளுக்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். விசிட் விசா காலம் முடிந்தும் சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்தால் விசிட் வந்த நபர் மற்றும் அவருக்கு விசா எடுத்த ஸ்பான்சர் ஆகியோர் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என்பவை உள்ளிட்டவை மற்ற நிபந்தனைகள் ஆகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Visit Visa | Kuwait Visa | Visit Kuwait

Add your comments to

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்றைய வானிலை நிலவரம் குறைந்தபட்ச வெப்பநிலை 7°C அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது

Image : Kuwait City

குவைத்தின் இன்றைய வானிலை அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

குவைத்தில் இன்று(05/02/24) திங்கள்கிழமை பகல் நேரத்தில் நாட்டில் பொதுவாக வானிலை வெப்பம் மிதமாக இருக்கும்,குறைந்தபட்சம் 7°C அளவுக்கும் அதிகபட்சமாக 22°C அளவுக்கும் இருக்கும், வடமேற்கு திசையிலிருந்து காற்று மணிக்கு 08-28 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இரவு நாட்டில் நல்ல குளிரான வானிலை நிலவும், விவசாயம் மற்றும் பாலைவனப் பகுதிகளான எல்லைப்புற இடங்களில் நல்ல குளிர் உணர முடியும், காற்று மணிக்கு 06-26 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Weather | Today Weather | Weather Report

Add your comments to

குவைத்தின் இன்றைய Exchange மதிப்புகள் பின்வருமாறு

இன்றைய பணப்பரிமாற்ற மதிப்புகளை இங்கே அறியலாம்

Image : Kuwait Dinar

குவைத்தின் இன்றைய Exchange மதிப்புகள் பின்வருமாறு

குவைத் தினாருக்கு இணையான இன்றைய(05/02/24) இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் EXCHANGE RATE பின்வருமாறு: 

  • இந்தியா 1KD = 270.42 
  • இலங்கை 1KD = 1017.00 
  • நேபாளம் 1KD = 432.72 
  • பிலிப்பைன்ஸ் 1KD = 183.25 
  • பாகிஸ்தான் 1KD = 911.00 

(பதிவு காலை 10:30 AM நிலவரப்படி மற்றும் சில நேரம் Exchange நிறுவனங்களை பொறுத்து இங்கு குறிப்பிட்டுள்ள மதிப்பில் சிறிய மாற்றங்கள் வரலாம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Exchange | Dinar Rate | Daily Update

Add your comments to

Sunday, February 4, 2024

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

வணிக சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : Kuwait City

குவைத்தில் அனைத்து வகையான விசிட் விசாக்கள் விரைவில் அனுமதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப விசா வழங்கப்படுவது நடைமுறைக்கு வந்த பிறகு, அனைத்து வகையான விசிட் விசாக்களும் விரைவில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சகம் தொடர்பான உயர்மட்ட ஆதாரங்களை மேற்கோள் காட்டி தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சீராக்கல் போன்ற காரணங்களால் வணிக, சுற்றுலா மற்றும் குடும்ப வருகை விசாக்கள் பெரிய அளவில் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு அனுமதியுடன் சிறிய அளவிலான விசாக்கள் மட்டுமே சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த தடையை நீக்குவதன் மூலம் வெளிநாட்டவர்களுக்கு எந்த வகையிலும் குவைத் வருகைக்கான வழியை எப்படி ஏற்படுத்துவது என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் மூலம் மற்ற GCC நாடுகளின் தாராளமயக் கொள்கையை இந்த விஷயத்தில் பின்பற்றவும் குவைத் நாட்டின் பொருளாதார மற்றும் வணிகத் துறைகளில் ஆதாயங்களை மேம்படுத்துவது நோக்கமாகக் கொண்டுள்ளது. பல்வேறு சமூக மற்றும் பாதுகாப்புத் தரங்களைக் கருத்தில் கொண்டு விதிமுறைகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு விசிட்டிங் விசாக்களுக்கான கதவுகள் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் விளக்கினர்.

அதேசமயம், மின்னணு இணைப்புத்துறையில் உள்துறை அமைச்சகம் செய்து சாதனை, டிஜிட்டல் வேலைகளுக்கான முன்னேற்றம் நாட்டுக்கு வருகின்ற பார்வையாளர்கள் நாட்டின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுதல் என்பதை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள உதவுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் ஷேக் முகமது அல் சபா தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வளர்ச்சி திட்டம் குடும்ப வருகை விசாக்களை தாராளமயமாக்கல் என்ற கண்ணோட்டதை நடைமுறை படுத்த காரணமாக அமைத்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Visa | FamilyVisa | Kuwait Visit

Add your comments to

குவைத்தில் இந்த மாதம் தொடர் விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது

குவைத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : குவைத் டவர்

குவைத்தில் இந்த மாதம் தொடர் விடுமுறை சிவில் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது

குவைத்தில் இந்த மாதம் Hala February என்று அழைக்கப்படும் நாட்டின் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டில் நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் குவைத்தில் பிப்ரவரி-25 தேசிய தினமாகவும், பிப்ரவரி-26 விடுதலை தினமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் விடுமுறைக்காக இருக்கும்.

ஆனால் இந்தமுறை வார விடுமுறை தினங்களும் சேர்ந்து வருவதால் பிப்ரவரி-23 வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி-26 திங்கள்கிழமை வரை 4 நாட்கள் தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. அரசுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த அனைவருக்கும் தொடர் விடுமுறை கிடைக்கும் வகையில் இந்த முறை தேசிய தினம் அமைந்துள்ளது. நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு பிப்ரவரி-27 செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வேலை நாள் தொடங்கும் என்றும் அந்த செய்தியில் சிவில் சர்வீஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

National Day | Liberation Day | Kuwait Celebration

Add your comments to