BREAKING NEWS
latest

Friday, December 9, 2022

குவைத்திலுள்ள இந்திய தூதரகம் இந்திய இஞ்சினியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

குவைத்திலுள்ள இந்திய தூதரகம் இந்திய இஞ்சினியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Image: Indian Embassy

குவைத்திலுள்ள இந்திய தூதரகம் இந்திய இஞ்சினியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

குவைத்தில் உள்ள இந்திய பொறியாளர்கள் இந்திய தூதரகத்தில் உங்கள் பெயர் விவரங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று நேற்று(08/12/2022) வியாழக்கிழமை இரவு அதிகாரபூர்வ செய்தியை வெளியிட்டுள்ளது. இதற்கான கூகுள் ஃபோம் வழியாக பதிவு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முன்னர் நீங்கள் பதிவு செய்துள்ள விபரங்களை புதுப்பித்தல் செய்வதே இதன் முக்கிய நோக்கம். முன்னதாக ரெஜிஸ்டர் செய்துள்ள பொறியாளர்களும் மற்றும் இதுவரையில் விபரங்கள் பதிவு செய்யாத புதிதாக வந்துள்ள பொறியாளர்கள் என்று குவைத்தில் வேலை செய்கின்ற அனைத்து தரப்பு பொறியாளர்களும் மீண்டும் உங்கள் பெயர் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெளிவுபடுத்தியுள்ளது.

இதற்காக நீங்கள் பின்வரும் Link https://docs.google.com/forms/d/e/1FAIpQLScSqg_T5O0Zg08frG60e_yK8wFophMqiA5NPCqN3wvLHDOAQw/viewform -ஐ Click செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தையும் பதிவேற்ற வேண்டு்ம். குவைத்திலுள்ள இந்தியப் பொறியாளர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களுக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக மீண்டும் நெருக்கடி எழுந்துள்ள சூழ்நிலையில் இந்திய தூதரகம் மீண்டும் புதிதாக பொறியாளர்கள்(இஞ்சினியர்களின்) விபரங்களை சேகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பர்-2020 லும் இதே பிரச்சனை காரணமாக குவைத் இந்திய தூதரகம் இந்திய இஞ்சினியர்களின்(பொறியாளர்கள்) பெயர் விபரங்களை சேகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Image: Embassy Press Release

Kuwait Job | Kuwait Engineers | Kuwait Indians

Add your comments to

Thursday, December 8, 2022

குவைத் இந்திய தூதர் பதிவியேற்ற பின்னர் ஜிலீப் பாஸ்போர்ட் சேவை மையத்தை பார்வையிட்டார்:

குவைத்திற்கான புதிய தூதர் ஜிலீபில் உள்ள தூதரக துணை சேவை மையத்தின் செயல்பாடுகளை நேரடியாக பார்வையிட்டார்

Image : தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா அவர்கள்

குவைத் இந்திய தூதர் பதிவியேற்ற பின்னர் ஜிலீப் பாஸ்போர்ட் சேவை மையத்தை பார்வையிட்டார்:

குவைத்திற்கான புதிய இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா அவர்கள் ஜிலீப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் விசா சேவை மையத்தை பார்வையிட்டார். அங்குள்ள ஊழியர்கள் அவரை மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து தூதர் பாஸ்போர்ட் மற்றும் சான்றளிப்பு சேவை மையத்தின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து சேவை மைய அதிகாரிகள் மற்றும் அங்கு சேவைகள் பெறவந்த இந்தியர்களுடன் கலந்துரையாடினர்.

மேலும் தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா அவர்களுடன் முதன்மை செயலாளர் வினோத் கெய்க்வாட், மூத்த தூதரக அதிகாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பழைய இந்திய தூதராக இருந்த சிபி ஜார்ஜ் அவர்கள் மாறுதல் பெற்று சென்ற நிலையில் குவைத்தின் புதிய தூதராக ஆதர்ஷ் ஸ்வைகா நியமிக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் வருட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக தேர்ச்சியான ஆதர்ஷ் ஸ்வைகா, முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளிக்கிழமை குவைத் வந்தடைந்த அவர் ஞாயிற்றுகிழமை அன்று குவைத் இந்திய தூதரகத்திற்கு வந்து அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டு தன்னுடைய பணிகளை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Adarsh swaika | Indian Ambassador | Indian Embassy

Add your comments to

குவைத்தில் 4 இந்தியர்கள் உட்பட 7 போலியான பொறியாளர்களின் பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்:

குவைத்தில் போலியான பொறியாளர்களின் பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் பரிசோதனையில் சிக்கியுள்ளன

Image : Kuwait Society Of Engineers Head Office

குவைத்தில் 4 இந்தியர்கள் உட்பட 7 போலியான பொறியாளர்களின் பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்:

குவைத்தில் கடந்த ஆறு மாதங்களில் 4 இந்தியர்கள் உட்பட 7 வெளிநாட்டு பொறியாளர்களின் போலியான பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்களை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளதாக பொறியாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள் பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தினர். மேலும் மற்ற மூன்று போலியான சான்றிதழ்கள் எகிப்து, வெனிசுலா மற்றும் ஜோர்டான் நாட்டை சேர்ந்த பொறியாளர்களுடையது.

பத்திரிக்கையாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பட்டப்படிப்பு சான்றிதழ்கள் பரிசோதனை குறித்தும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த 7 நபர்களுக்கு எதிராகவும், அவர்களை பணியமர்த்திய நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வேலை செய்கின்ற 5248 பொறியாளர்களின் பொறியியல் பட்டப்படிப்பு சான்றிதழ்கள் சங்கத்தால் சான்றளிக்க சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இவற்றில் 4320 சான்றிதழ்கள் மனிதவளக் குழுவின் ஒத்துழைப்புடன் சரிபார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டன. 928 சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 74 சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இதுவரை துவங்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kuwait Engineers | Kuwait Job | Gulf Job

Add your comments to

குவைத் தேசிய தினத்தை முன்னிடடு ஐந்து நாட்கள் பொது விடுமுறை:

குவைத்தில் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் தேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தொடர் விடுமுறையாக இருக்கும்

Image : Kuwait National Day

குவைத் தேசிய தினத்தை முன்னிடடு ஐந்து நாட்கள் பொது விடுமுறை:

குவைத்தில் 2023 பிப்ரவரி 23, 24, 25, 26 மற்றும் 27(வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) ஆகிய நாட்களில் National Day, Liberation Day, Isra and Miraj உள்ளிட்ட தினங்கள் வருவதால் விடுமுறை என்று தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு Isra and Miraj விடுமுறை பிப்ரவரி18-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஆனால் இந்த விடுமுறையை அதே மாதம் வியாழக்கிழமைக்கு மாற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றன. குவைத்தில் விடுமுறைக்கான முக்கியமான விதிமுறை என்பது எதாவது அரசு விடுமுறை வார விடுமுறை நாள்களில் வந்தால் அதை மற்றொரு நாள் விடுமுறையாக மாற்றுவது ஆகும்.

அப்படியானால் பிப்ரவரி-23 வியாழன் விடுமுறை என்றும், சனிக்கிழமைக்கு பதிலாக பிப்ரவரி 25 திங்கள்கிழமை, பிப்ரவரி 27 ஆகிய தினங்கள் விடுமுறை என்றும் கருதப்படும். இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் தேவை. மேலும் நாட்டில் புத்தாண்டு விடுமுறை இந்த மாதம் டிசம்பர்-2022 வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட மூன்று நாட்களாக இருக்கும், அதாவது டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 இதன் பிறகு ஜனவரி 2 திங்கட்கிழமை மீண்டும் அதிகாரப்பூர்வமான வேலை நாளாக இருக்கும் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.

Official Holiday | Liberation Day | National Day

Add your comments to

Wednesday, December 7, 2022

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

உயிரிழந்த வர்கீஸ் கடந்த 8 ஆண்டுகளாக குவைத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார்

Image : உயிரிழந்த வர்கீஸ்

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்த துயரமான செய்தி வெளியாகியுள்ளது. மரணமடைந்தவர் இந்தியா,கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், எலந்தூரை அடுத்த வரியாபுரம் பகுதியை சேர்ந்த மேத்யூ வர்கீஸ்(வயது-48) ஆவார். அவர் குவைத்தின் சபா மருத்துவமனையில் வைத்து இறந்தார். இவருடைய அப்பா பெயர வர்கீஸ், அம்மா பெயர் சோசம்மா வர்கீஸ் என்பது ஆகும்.

இவருக்கு சிபி என்ற மனைவி, சரண் என்ற மகனும்,ஷெல்வி என்ற மகளும் உள்ளனர். உயிரிழந்த மேத்யூ குவைத்திலுள்ள அலி முடலாக் அல் முடேரி ஜெனரல் டிரேடிங் நிறுவனத்தில் வெல்டராக கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவருடைய உடலை சட்ட நடவடிக்கைகள் முடித்து தாயகம் அனுப்பும் பணிகளை பிரவாஸி வெல்ஃபேர் அமைப்பின்,பொதுச் சேவை பிரிவான டீம் வெல்ஃபேர் அப்பாசியா தலைமையில் நடைபெற்று வருகின்றன.

Family Man | Indian Death | Indian Worker

Add your comments to

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

எகிப்தில் இருந்து குவைத்திற்கு வருகின்ற தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தொடர்பாக எகிப்து அரசு எடுத்துள்ள நடவடிக்கையின் எதிரொலி

Image: Kuwait Airport

குவைத் எகிப்து நாட்டினருக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது:

குவைத் எகிப்து தொழிலாளர்களுக்கான வேலை விசாவை நிறுத்தி வைத்துள்ளது. உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பரில் இருந்து அமல்படுத்தப்பட்ட இந்த உத்தரவு தொடரும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் எகிப்தில் இருந்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை எகிப்திய தூதரகம் நிர்ணயித்துள்ளது. இந்த நிபந்தனைகள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, எகிப்தியர்களுக்கான பணி அனுமதி வழங்குவதை நிறுத்துமாறு முதல் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அவர்கள் உத்தரவிட்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. எகிப்து தூதரகம் விதித்துள்ள நிபந்தனைகள் குவைத் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக விதிமுறைகளுக்கு முரணானது எனவும் தெரிகிறது.

இதன் காரணமாகவே குவைத் கடுமையான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. அதேபோல் எகிப்தில் இருந்து குடும்ப விசாவில் குவைத் வருபவர்களுக்கான ஸ்டாம்பிங் கட்டணத்தை எகிப்தில் உள்ள குவைத் தூதரகம் கடந்த தினத்தில் ஒரேயடியாக மூன்று மடங்கு உயர்த்தியது. இதேபோல் இரு நாடுகளிலும் Online வழியான பணியாளர்கள் தேர்வு அமைப்பு நடைமுறை ரத்து செய்யப்பட்டன. குவைத்தில் இந்தியர்களுக்கு அடுத்தபடியாக எகிப்தியர்கள் இரண்டாவது பெரிய வெளிநாட்டு சமூகமாக நாட்டில் வேலை செய்து வருகின்றனர்.

Kuwait Banned | News Visa | Kuwait Visa

Add your comments to

Sunday, December 4, 2022

குவைத்தின் ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை:

குவைத்தின் பிரபலமான கடல்வழி ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன

Image : Kuwait Jaber Bridge

குவைத்தின் ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை

குவைத்தின் பிரபலமான கடல்வழியான ஜாபிர் பாலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இயங்கவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளன. பாலத்தின் குறுக்கே சுமார் 470 அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள் இருப்பதாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் பாலத்தில் உள்ள மின் மாற்றி பழுதடைந்ததால் கேமராக்கள் எதுவும் இயங்கவில்லை. கேமராக்கள் இயங்காமல் உள்ளத்தை சரி செய்யுமாறு மின்வாரியத்துக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இருப்பினும், இது அவர்களின் அதிகார வரம்பிற்குள் இல்லை எனவும் மற்றும் ரோட்ஸ் பொது ஆணையத்தின் பொறுப்பாகும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு மின்சார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் பழுதை சரிசெய்ய சுமார் 40,000 தினார் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் ஜாபர் பாலம் வழியாக பயணிக்கின்றனர். நாட்டின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான இந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயலிழப்பு பல பாதுகாப்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Jaber Bridge | Camera Down | Kuwait Sea

Add your comments to

Monday, November 28, 2022

குவைத்தில் கள்ளச்சாராய குவியலுடன் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்:

குவைத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த ஆசியா நபரை காவல்துறை நடத்திய பரிசோதனை போது கைது செய்தனர்

Image : கைது செய்யப்பட்ட நபர்

குவைத்தில் கள்ளச்சாராய குவியலுடன் வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டார்:

குவைத்தில் நேற்று(27/11/2022) மாலையில் அல்-அஹ்மதி பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு ஆசிய வெளிநாட்டு தொழிலாளி வசம் இருந்த 154 கள்ளச்சாராய பாட்டில்களை மஹ்பூலா மற்றும் மங்காஃப் பகுதிகளில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்றபோது பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மஹ்பூலா பகுதியில் அஹ்மதி பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு கார் மீது சந்தேகமடைந்து அதன் ஓட்டுநரை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் அவர் தப்பிக்க முயன்றார், தொடர்ந்து அவரை காவல்துறை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். தொடர்ந்து நடந்த பரிசோதனையில் 154 கள்ளச்சாராய மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மது தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டார். கூடுதல் நடவடிக்கைக்காக உயர் அதிகாரிகளின் உத்தரவின் அடிப்படையில் போதை தடுப்பு பிரவு அதிகாரிகளிடம் அந்த நபரை பாதுகாப்பு துறை ஒப்படைத்தது.

Asian Arrest | Local Alcohol | Kuwait Police

Add your comments to

குவைத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பினார்

குவைத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பினார் என்று மருத்துவ அதிகாரி தகவல்

Image credit: ஜஹரா மருத்துவமனை

குவைத்தில் காலரா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி சிகிச்சை முடிந்த நிலையில் வீடு திரும்பினார்

குவைத்திற்க்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த பயணி ஒருவருக்கு காலரா நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது இதையடுத்து அந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அந்த நபர் நோய் முற்றிலுமாக குணமடைந்த நிலையில் வீடு திரும்பியாதாக ஜஹரா மருத்துவமனை இயக்குநர் டாக்டர். ஜமால் அல்-துய்ஜ் அவர்கள் தெளிவுபடுத்தினார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் அனைத்து சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை முடித்த பிறகு நோயாளி மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதித்ததாக அவர் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நாட்டில் முதன் முதலாக காலரா நோய்த் தொற்று பதிவானது. சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் சரியாக வேகவைக்காத உணவு பொருட்கள் உள்ளிட்டவையில் இருந்து இந்த நோய் பெரும்பாலும் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்கவில்லை என்றால் உயிரை பறிக்ககூடியது இந்த நோய். மேலும் ஈராக்கில் இருந்து நாடு திரும்பிய குவைத் குடிமகன் ஒருவருக்கே இந்த நோய் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் ஜஹரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jahra Hospital | Cholera Disease | Kuwait Airport

Add your comments to

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்:

குவைத்தில் தேடப்பட்ட பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது

Image : மீட்கப்பட்ட அபியா

குவைத்தில் காணவில்லை என்று தேடப்பட்ட இந்திய பெண்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்

குவைத்தின் அப்பாசியாவில் இருந்து நேற்று(27/11/2022) மாலை 6:30 முதல் காணவில்லை என்று தேடப்பட்ட அபியா என்ற இந்திய பெண் குழந்தை நள்ளிரவில் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தையை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் பெற்றோர்கள் நன்றி தெரிவி்த்துள்ளனர்.நேற்று(27/11/2022) ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் இந்தி குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிக பகிரப்பட்ட நிலையில் இந்த புதிய செய்தி வெளியாகியுள்ளது.

Missing Child | Indian Girl | Kuwait Police | Kuwait News

Add your comments to