BREAKING NEWS
latest

Wednesday, October 11, 2023

குவைத்தில் இன்று நள்ளிரவு முதல் இந்த தவறை செய்யும் வெளிநாட்டினரை உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது

குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கிற எந்த வெளிநாட்டவரையும் உடனடியாக நாடுகடத்த உத்தரவு

Image : Kuwait Airport

குவைத்தில் இன்று நள்ளிரவு முதல் இந்த தவறை செய்யும் வெளிநாட்டினரை உடனடியாக நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது

குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்கிற எந்த வெளிநாட்டவரையும் உடனடியாக நாடுகடத்த முதல் துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்கள் அதிகாரிகளுக்கு கடுமையான(அதிகப்படியான) உத்தரவுகளை வழங்கினார். அதேபோல் விமான நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் பிதுனிகளை(குடியுரிமை இல்லாத மக்கள்) இரண்டு நாட்கள் காவலில் வைக்கவும் மற்றும் அவர்களது வாகனத்தை இரண்டு மாதங்களுக்கு பறிமுதல் செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்காக இன்று நள்ளிரவு 12 மணிமுதல்,அதாவது புதன்கிழமை(11/10/23) முதல் விமான நிலையத்தில் சோதனைகளை செய்ய ஒரு குழுவை நியமித்து,24 மணி நேரமும் கண்காணிக்கும் சிறப்பு போக்குவரத்துப் பிரிவை அமைக்கவும் உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. விமான நிலையத்தில் உத்தியோகபூர்வ டாக்ஸி சாரதிகளான பூர்வீகவாசிகளிடமிருந்து அமைச்சருக்கு நேரடியாகப் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குடிமக்களான விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ டாக்ஸி டிரைவர்களாக இருக்கும் மக்களிடம் இருந்து அமைச்சருக்கு நேரடியாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தங்களுடையவாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் விமான நிலையங்களை குறிவைத்து சட்டவிரோத டாக்சி ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர் என்று குடிமக்களான டாக்சி ஓட்டுநர்கள் அமைச்சரை நேரடியாக சந்தித்து தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

அவர்களின் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான புகார்கள் மற்றும் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்ய உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் மற்றும் பாதுகாப்புத் துறையின் தலைவர்களுடன் விரைவில் ஆலோசனை செய்வார் என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம் தாயகத்தில் இருந்து வரும் உறவினர்களை சொந்த வாகனங்களில் ஏற்றிச் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் பொருந்துமா இல்லையா என்பதை குறித்து அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Taxi| Kuwait Airport | Kuwait Drivers

Add your comments to

Tuesday, October 10, 2023

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர் வெடிகுண்டு இல்லை என்று கூறியதால் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்

Image : Saudi Arabia Airport

சவுதியில் கோபத்தால் வாழ்க்கையினை இழந்த தமிழகத்தை சேர்ந்த இன்ஜினீயர்

சவுதி அரேபியாவில் உள்ள தமாம் விமான நிலையத்தில், தனது பேக்கேஜில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதால் வெடிகுண்டு இல்லை என்று கூறிய இந்தியர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இறுதியாக ஒரு மாத சிறைத்தண்டனை மற்றும் நாடு கடத்தல் விதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியாளர்களிடம் ஒத்துழையாமை மற்றும் தவறாக நடந்து கொண்டதற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

துபாய் செல்வதற்காக தமாம் விமான நிலையத்திற்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரிடம் சிக்கினார். Fly Dubai விமானத்தில் டிக்கெட் எடுத்து கொண்டு, அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது பிடிபட்டார். பையில் என்ன இருக்கிறது என்று பலமுறை கேட்டதற்கு, கோபமடைந்த பயணி விமான நிலைய அதிகாரியிடம் பையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கூறினார்.

இதுபற்றி விமான நிலைய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், மோப்ப நாய் அடங்கிய தீவிரவாத தடுப்பு பிரிவு பாதுகாப்பு பிரிவினர் பயணியை கைது செய்ய விரைந்தனர். அரசாங்க வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும், ஒரு மாத சிறைத்தண்டனையை அனுபவித்துவிட்டு, நாட்டில் நுழைய முடியாதபடி நாட்டை விட்டு வெளியேற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய தகவலறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார்.

அவரது மனைவி தமாமில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தூதரகத்தின் உதவியுடன் சட்ட உதவி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் நீதிமன்ற உத்தரவு நடைமுறை படுத்தப்பட்டதால் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கைது செய்யப்பட்ட நபர் தமாமில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Tamil Engineer | Saudi Airport | Saudi Jail

Add your comments to

Monday, October 9, 2023

வெளிநாடுகளில் முக்கியமாக ஓட்டுநர்கள் இதன் மூலம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

வெளிநாடுகளில் வேலை செய்கின்ற அனைவரும் உங்களுடைய ஆவணத்தை சரியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்

Image : Kuwait Road

வெளிநாடுகளில் முக்கியமாக ஓட்டுநர்கள் இதன் மூலம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

வெளிநாடுகளில் வேலை செய்யும் பலருக்கும் பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமத்தில் விலாசம் சரியாக இல்லாத காரணத்தால் ஒரு சிலர் வேலை இழந்து சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் புதுபிக்க தூதரகத்தில் ஆவணத்தை சமர்பித்து விட்டு வந்து பிறகு, அந்த ஆவணத்தை தூதரக அதிகாரிகள் பாஸ்போர்ட்யில் உள்ள விலாசத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கு, விலாசத்தில் அந்த மனுதாரர் வசிக்கிறாரா என்பதை உறுதி படுத்த அனுப்பி விடுவார்கள்.

தற்போது இந்த நடைமுறை எல்லாம் ஆன்லைன் என்பதால் தினங்களிலேயே முடிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. அதை விசாரிக்க பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்த மனுதாரரின் வீட்டிற்கு செல்லும் போது, அந்த மனுதாரர் அந்த வீட்டில் வசித்து கொண்டு இருப்பார் என்றால், அதற்க்கான அடையாள அட்டை(ஆதார் கார்டு) பெற்று கொண்டு, காவல் துறை அதிகாரி மனுதாரர் இந்த விலாசத்தில் வசிக்கிறார் என்பதை உறுதி செய்து தூதரகத்திற்க்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவார்கள். அதன் பிறகு தான் பாஸ்போர்ட் புதுபித்து கொடுப்பார்கள்.

ஆதார் கார்டில் பெயர் தவறாக இருந்தாலோ அல்லது மனுதரர் அந்த விலாசத்தில்(அந்த வீட்டு பட்டா அவர் பெயரில் இருந்தாலும்) வசிக்கவில்லை என்றாலும் பாஸ்போர்ட் புதுபிக்க சிக்கல் ஏற்படும். ஓட்டுனர் உரிமத்தில் இருக்கும் விலாசம் மற்றும் பாஸ்போர்ட் விலாசம் ஒரு எழுத்து பிழை இல்லாமல் இருக்க வேண்டும், எழுத்து பிழை இருந்தால் ஓட்டுனர் உரிமத்திற்க்கு சான்றளிப்பு(Attestation ) செய்யவும் சிக்கல் ஏற்படும். பாஸ்போர்டில் இருப்பது போல் மற்ற அனைத்து ஆவணங்களையும், எழுத்து பிழை இன்றி திருத்தம் செய்வது நலம்.

நீங்கள் புது விலாசத்திற்க்கு குடித்தனம் மாற்றினால், அதை உங்களுடைய தன்னிபட்ட முக்கியமான ஆவணங்களிலும் புதுபித்து கொள்ளுங்கள். இதுவே சில இக்கட்டான சூழ்நிலைக்கு நம்மளை தள்ளுவதை தவிர்க்க உதவியாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்கின்ற, முக்கியமான ஓட்டுநர் உரிமம் கைவசம் உள்ள மற்றும் பெறுவதற்காக முயற்சியில் உள்ள நபர்கள் இதை கவனத்தில் கொள்ளவும். சிலர் நினைக்கிறார்கள் நாம் வெளிநாட்டில் தானே இருக்குறோம். இங்கு இருந்து பாஸ்போர்ட் புதுப்பித்தல் செய்ய விண்ணப்பித்தால்,நாட்டில் போலீஸ் Verification எல்லாம் இல்லை என்று, இது ஒரு தவறான எண்ணம் ஆகும்.

Indian Passport | Driving Licence | Gulf Licence

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 WHATSAPP CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 TELEGRAM CHANNEL ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Wednesday, October 4, 2023

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத் துணைப் பிரதமரின் மனிதாபிமானத்தின் அடிப்படையில் 34 இந்தியர்கள் உட்பட 60 செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்ட நெகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது

Image : ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்கள்

அமைச்சரை சந்தித்து குடும்பத்தினர் தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தன நிலையில் நடவடிக்கை

குவைத்தில் கடந்த 23 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்ட 34 இந்தியர்கள் உட்பட 60 சுகாதாரப் பணியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களின் நேரடித் தலையீட்டிற்குப் பிறகு, இன்று(04/10/23) புதன்கிழமை பிற்பகல் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த செவிலியர்களின் உறவினர்கள் தங்களது சிறு குழந்தைகளுடன் நேற்று இரவு உள்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அமைச்சரின் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிவாசலில் வைத்து தங்களது துயரத்தை அவரிடம் தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அனைவரையும் விடுவிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து இன்று பர்வானியா குடியிருப்புத்துறை அமைச்சகத்தில் 60 பேரின் குடும்பத்தினர் ஆவணங்களுடன் விடுவிப்பதற்கான நடைமுறைகளை முடிக்க வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் இன்று மதியம் 2 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் தலையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இவர்கள் கைதானத்திற்கான காரணம் பின்வருமாறு:

குவைத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 12ம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையில் மருத்துவமனை சார்ந்த சில ஆவணங்கள் சட்டப்படி இல்லை என்று 34 இந்தியர்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் பிலிப்பைன்ஸ், ஈரான் மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலரும் கடந்த 3 முதல் 10 ஆண்டுகளாக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். ஈரானிய குடிமகன் ஒருவரின் உரிமையின் கீழ் பல ஆண்டுகளாக மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் சிலரின் உறவினர்கள் முன்னர் தெரிவித்திருந்தனர். கைது செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களும் இந்த நிறுவனத்தில் சட்டப்படி பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையின் Sponsorship யில் சட்டப்படி தான் வேலை செய்து வந்தனர்.

இந்த செவிலியர்களில் 5 பேர் பாலூட்டும் தாய்மார்கள்.இதில், இந்திய கேரளா மாநிலம் அடூரைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஆன குழந்தை இருந்தது. மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அப்பாசியாவில் உள்ள குடியிருப்பில் கணவர் பராமரிப்பில் குழந்தை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால், குழந்தைகளுக்கு சிறையில் கொண்டு சென்று தாய்ப்பால் கொடுப்பதற்கான வசதிகளை குவைத் அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர்.

ஆனால் பல குழந்தைகளுக்கு தாயிடமிருந்து உண்மையான கவனிப்பு கிடைக்காத காரணத்தால் உடல்நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சரின் மனிதாபிமான அடிப்படையிலான தலையீடு மூலம் அனைவரும் விடுதலை ஆகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபா அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Indian Nurse | Kuwait MOH | Kuwait Minister

Add your comments to

Tuesday, October 3, 2023

குவைத்தில் Sahel செயலியில் ஆங்கிலம் இல்லை என்ற பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு

Sahel செயலியில் ஆங்கிலம் எப்படி வரவழைப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்

Image : Sahel Application Front View

குவைத்தில் Sahel செயலியில் ஆங்கிலம் இல்லை என்ற பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு

குவைத்திலுள்ள வெளிநாட்டினர் மற்றும் குடிமக்கள் தங்களுடைய அடையாளம் உள்ளிட்ட அனைத்து விதமான சேவைக்கும் ஆதாரமாக Sahel செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் உள்ள ஒரே குறைபாடு தற்போதைய நிலையில் அதில் அரபு மொழி மட்டுமே உள்ளது என்பதாகும். ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி தேர்வு வசதி அதில் இல்லை வரும் காலங்களில் பிற மொழிகளும் கிடைக்கும் வகையில் மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

ஆனால் தற்போதைய நிலையில் ஆங்கிலம் இல்லாத காரணத்தால் பெரும்பாலான நபர்கள் அரபு மொழி தெரிந்த பிறருடைய உதவியை பயன்படுத்தியே அதை login செய்து மற்றும் பிற வசதிகளை இணைப்பது போன்றவற்றை செய்ய முடிகிறது. இதற்கான தற்காலிகமான தீர்வு ஒன்றை உங்களுக்கு தெரிய படுத்தலாம் என்று நினைக்கிறேன். பலருக்கும் தெரியலாம், தெரியாத நபர்களுக்கு இதை பகிர்ந்து உதவுங்கள். இந்த trick ஆனது Android Mobile யில் Work ஆகும், ஆனா‌ல் I-phone யில் work ஆகாது.

அரபு மொழியயை ஆங்கில மொழிக்கு மாற்ற முதலில் உங்கள் கைபேசியில் உள்ள Sahel செயலியை Open செய்ய வேண்டும் பிறகு அந்த பக்கத்தை Close செய்யாமல் Minimise செய்த பிறகு அப்படியே phone Setting ஐ open செய்து Language Option தேர்வு செய்து அதில் UK or US உள்ளிட்ட எதாவது ஒரு English Language தேர்வு ஆகி இருக்கும், அதில் எது தேர்வாகி இருந்தாலும் அதற்க்கு எதிர்மறை Change செய்யுங்கள். UK English என்றால் US English எனவும், US என்றால் UK English என மாற்றலாம்.

இது மட்டுமல்ல Indian English இப்படி எதாவது ஒரு English language ஐ மாற்றுங்கள் அப்போது சில நொடியில் Language change ஆகும். இந்நிலையில் அதை அப்படியே Minimise செய்து Sahel செயலி பக்கத்தை மாற்றி பாருங்க அரபு மொழி English ஆக மாறும். கண்டிப்பாக இதை செய்யும் போது செயலி பக்கம் Setting பக்கம் இரண்டும் Close ஆக கூடாது. ஒவ்வொரு முறையும் செயலியில் எதாவது அறிய வேண்டும் என்ற இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். இதுபோல் மற்றொரு தகவலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Sahel Application | Kuwait Id | Civil Id

Add your comments to

Monday, September 11, 2023

ஓமன் சுல்தான் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்

ஓமனின் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Image : ஒமான் சுல்தான்

ஓமன் சுல்தான் மொராக்கோவிற்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டார்

ஸ்கட்: மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக மீட்புக் குழுக்களை அனுப்பவும், அவசர உதவிகளை வழங்கவும் சுல்தான் ஹைதம் பின் தாரிக் ஞாயிற்றுக்கிழமை அரச ஆணை பிறப்பித்தார். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஓமனின் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு மிக அருகில் உள்ள மராகேஷில் உள்ள வரலாற்று கட்டிடங்களும் நிலநடுக்கத்தில் சேதமடைந்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

குவைத்தில் தூங்கும் போது உயிரிழந்த இந்தியர் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

வேலைக்குச் செல்ல எழுந்திருக்காததால் அறையில் உள்ள நண்பர்கள் அவரை அழைத்த போது அவர் எழவில்லை

Image : உயிரிழந்த சைஜு

குவைத்தில் தூங்கும் போது உயிரிழந்த இந்தியர் துயரமான செய்தி வெளியாகியுள்ளது

குவைத்தில் இந்தியா, கேரளா மாநிலம் , திருவனந்தபுரம் மாவட்டத்தை அடுத்த பவுடிகோணத்தை சேர்ந்தவர் துளசிதரன் சைஜு(வயது-49), இவர் குவைத்தில் தான் தங்கியிருந்த குடியிருப்பில் வைத்து வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்திலேயே இறந்தார். அல் ஜஹ்ரா நேஷனல் கிளீனிக் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்.

நேற்று சனிக்கிழமை வேலைக்குச் செல்ல எழுந்திருக்காததால், அவரது அறையில் உள்ள நண்பர்கள் அவரை அழைத்தனர் ஆனால் அவர் எழவில்லை. மரண காரணம் மாரடைப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு போபி என்ற மனைவியும், ஸ்வாதிஷ் மற்றும் ஸ்வேதா என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சட்ட நடவடிக்கைகளை முடித்து உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளளை OICC அமைப்பின் கெயர் டீம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துயரமான செய்தி இன்றையதினம் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

கடந்த 24 ஆண்டுகளாக விசா இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர் சோதனையில் சிக்கியுள்ளார்

குவைத்தில் கடந்த 29 ஆண்டுகளாக தாயகம் செல்லாத தொழிலாளி அனைவரையும் ஆச்சரியப்பட செய்துள்ளார்

Image : Kuwait Police

கடந்த 24 ஆண்டுகளாக விசா இல்லாமல் தங்கியிருந்த வெளிநாட்டவர் சோதனையில் சிக்கியுள்ளார்

குவைத்தில் நேற்று நடந்த பாதுகாப்பு சோதனையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்பு(விசா) அனுமதி காலாவதியான எகிப்திய வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டார். நாட்டின் முட்லா விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அவரது குடியிருப்பு அனுமதி கடந்த 1998 இல் காலாவதியானது.

இதற்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1994-ல் அவர் குவைத் வந்ததாகவும், இது வரையில் வீட்டிற்கு(தாயகம்) செல்லவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இந்த தகவல் அதிகாரிகளை மட்டுமல்ல குவைத்திலுள்ள வெளிநாட்டினர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு தற்போது 56-வயது எனவும், அவர் தனது சக ஊழியர்களிடையே ராம்சேஸ் என்ற பெயரில் அறியப்பட்டார். குவைத் வந்ததிலிருந்து, அவர் முட்லாவில் உள்ள பண்ணையில் தான் வேலை செய்து வந்துள்ளார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரை திருப்பி அனுப்பும் மையத்திற்கு(நாடுகடத்தல் மையம்) மாற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Add your comments to

Friday, July 28, 2023

குவைத்தில் இறுதி நேரத்தில் தமிழரின் தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது:

குவைத்தில் இந்திய தூதரகத்தின் தலையீட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா, தமிழகத்தை சேர்ந்த அன்புதாசனின் தூக்குத்தண்டனை கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது தகவல் வெளியாகியுள்ளது

Image : தண்டனை விதிக்கப்பட்ட அன்புதாசன்

குவைத்தில் இறுதி நேரத்தில் தமிழரின் தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது:

இந்திய தூதரகத்தின் தலையீட்டால் குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியா, தமிழகத்தை சேர்ந்த அன்புதாசனுக்கு மன்னிப்பு கேட்க வாய்ப்பு கிடைத்துள்ளது. குவைத்தில் நேற்று(28/07/23) வியாழக்கிழமை காலையில் குடிமகன், எகிப்து நாட்டவர், இலங்கை நாட்டவர் மற்றும் 2 பெதுனிகள்(குடிமக்கள் அல்லாதவர்) உட்பட 5 பேரின் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. குவைத் நாட்டில் 2013, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட கொலை, தீவிரவாத செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு குற்றவாளிகளான 5 பேரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டனர்.

குவைத் மத்திய சிறையில் இவர்களின் தூக்கு தண்டனை நேற்று காலை 7:00 மணிக்கு நிறைவேற்றப்பட்டது. ஆனால் தூக்கிலிடப்பட உள்ளவர்கள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அன்புதாசன் நடேசனும் சேர்க்கப்பட்டு இருந்தார். 2015-ம் ஆண்டு இலங்கை பெண் கொலை வழக்கில் அன்புதாசன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மற்றவர்களுடன் சேர்ந்து அன்புதாசனுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்த தூதரக ஊழியர்கள் அவரை நேரில் சந்தித்தபோது கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் குடும்பத்திடம் இரத்தப்பணம் செலுத்தி மன்னிப்பு கோரும் நடவடிக்கைகளை நாட்டில் குடும்பத்தினர் செய்து வருவதாக அவர் கூறுகிறார். ஆனால் குடும்பத்தினர் குவைத் அதிகாரிகளுக்கோ, இந்திய தூதரகத்திற்கோ அத்தகைய நடவடிக்கை குறித்து தெரிவிக்கவில்லை.

இதையறிந்த தூதரக அதிகாரிகள் உடனடியாக தொழிலாளர் துறை தலைவர் ஆனந்த சுப்ரமணிய அய்யருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தூதரக அதிகாரிகள் தமிழகத்தில் உள்ள அன்புதாஸின் சகோதரர் சங்கரன் நடேசனை தொடர்பு கொண்டனர். பிறகு இரத்தப்பணம் செலுத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் குடும்பத்தினர் பொதுமன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்த ஆவணங்களை பெற்றனர். தொடர்ந்து இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமையில், குவைத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மன்னிப்பு கோரி விண்ணப்பிக்க தூக்கு தண்டனையை காலதாமதம் செய்ய கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில், அன்புதாசின் தூக்கு தண்டனை கடைசி நிமிடத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னர் அன்புதாசன் உட்பட ஏழு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் இவர் உட்பட இருவரின் மரணதண்டனை நீட்டி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட மற்றொரு நபர் வங்காளதேச நாட்டவர் என்று தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்

Kuwait Court | Indian Sentenced | Indian Worker

Add your comments to

Tuesday, July 18, 2023

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக 356 ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளது

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம், அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது

Image : தொழிலாளர்களின் ஓய்வு நிலையம்

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக 356 ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளது

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் டெலிவரி ஓட்டுநர்களுக்காக 356 ஓய்வு நிலையங்களைத் தொடங்கியுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) இன்று(18/07/23) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.குறிப்பாக கோடைக் காலத்தில், கொளுத்தும் வெயில் மற்றும் வெப்பக் களைப்பிலிருந்து ஓட்டுநர்களைப் பாதுகாக்க, ஓய்வு நிலையங்கள் அத்தியாவசிய சேவைகளை வழங்குகின்றன என்று ஆணையம் மேலும் கூறியது.

இந்த நடவடிக்கை ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை, மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரையிலான மதிய இடைவேளை ஏற்பாட்டிற்கு ஏற்ப தயார் செய்யப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் மேலும் கூறுகையில் கோடை காலத்தில் டெலிவரி தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான எங்கள் அர்ப்பணிப்பு இந்த நல்ல முயற்சியில் பிரதிபலிக்கிறது, மேலும் பல அரசு நிறுவனங்களின் ஆதரவுடன் தொடர்புடைய தனியார் துறை விநியோக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

Arabcountry Summer | Delivery Drivers | Rest Station

Add your comments to