BREAKING NEWS
latest

Wednesday, December 21, 2022

இந்தியா வருகின்ற விமானப் பயணிகளுக்கு மீண்டும் ரேண்டம் கோவிட் பரிசோதனை:

சீனாவை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியா கொரோனாவின் புதிய மருபணுமாற்ற வைரஸ் காரணமாக நடவடிக்கை

Image : Chennai Airport

இந்தியா வருகின்ற விமானப் பயணிகளுக்கு மீண்டும் ரேண்டம் கோவிட் பரிசோதனை:

சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் ரேண்டம் கோவிட் பரிசோதனை. இன்று முதல் தொடங்கும் என்று சுகாதார அமைச்சக அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவ்யா நாட்டில் கோவிட் நிலைமையை மதிப்பிடுவதற்கான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு நிலைமை மதிப்பிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். நாடு கோவிட் நோயிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. கடுமையான கண்காணிப்பைத் தொடர வேண்டும் எனவும், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சீனாவை மீண்டும் நெருக்கடிக்குள்ளாக்கியா கொரோனாவின் புதிய மரபணுமாற்ற வைரஸ் BF-7 பாதிக்கப்பட்ட மூன்று நபர்களிடம் நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளன.குஜராத்தில் இருவர் மற்றும் ஒடிசாவில் ஒருவரும் கொரோனாவின் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிடிஐ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த மாறுபாட்டின் முதல் பாதிப்பு அக்டோபர் மாதம் குஜராத் உயிரியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவிட் பாதிப்பு விகிதம் தற்போது நாட்டில் அதிகரிப்பு இல்லை என்றாலும், புதிய மரபணுமாற்ற வைரஸ் BF-7 க்கு எதிராக விழிப்புடன் இருக்க தொடர்ந்து கண்காணிப்பு அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Search_tags

Add your comments to

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்:

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தி 300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ஏற்கனவே புகார்கள் வந்துள்ளது

Image : Any Desk preview window

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்:

குவைத்தில் Any Desk அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பயன்படுத்தும் நபர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு வழக்கறிஞர் அலுவலகம்(Public Prosecution Office) கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் Any Desk அப்ளிகேஷனை நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ஏற்கனவே புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Any Desk அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யச் சொல்லி மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியுள்ளனர். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மற்றவர்களின் மொபைல் ஃபோன், கணினி போன்ற சாதனங்களையும் கட்டுப்படுத்தவும், மோசடி செய்பவர்கள் உங்களுடைய வங்கிக் கணக்குகளுக்குள் புகுந்து பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றவும் முடியும்.

எனவே இந்த அப்ளிகேஷன் அல்லது இதுபோன்ற வேறு ஏதேனும் அப்ளிகேஷனை எந்த தேவைகளுக்காகவும் பதிவிறக்கம் செய்ய சொல்லி WhatsApp, Messenge வழியாக Link உள்ளிட்டவை அனுமதி கோரிக்கை விடுத்தால் அத்தகைய குறுந்தகவல்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Any Desk | Cyber Crime | Kuwait Police

Add your comments to

Tuesday, December 20, 2022

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு கண்டனம் எழுந்துள்ளது:

வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது குவைத் மனித உரிமை ஆணையம்

Image : கண்டனம்

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு கண்டனம் எழுந்துள்ளது:

குவைத்தில் வெளிநாட்டவர்களுக்கு சிறப்பு மருந்து கட்டணம் வசூலிக்கும் முடிவுக்கு எதிராக தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்துள்ளது. குடியுரிமை பெறாதவர்களின் குடியிருப்பு ஆவணத்தைப் புதுப்பிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கும் பட்சத்தில் சிறப்பு மருந்து கட்டணம் வசூலிக்க முடிவு அனுமதிக்க முடியாது என்று குவைத் தேசிய மனித உரிமைக் குழுவின் உறுப்பினரும் ஆலோசகருமான ஹம்தான் அல் நிம்ஷான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறைந்த வருமானம் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கும். புதிய கட்டணத்தை செலுத்த முடியாத வெளிநாட்டு தொழிலாளிகள் நோய் வாய்ப்பாட்டு வேதனையையும் அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். முற்றிலும் மனித உரிமை மீறலான இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றார.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுகாதார‌த்துறை அமைச்சர் டாக்டர். அகமது அல் அவாடி புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது சுகாதார நிலையங்களிலும், பாலிகிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் வெளிநாட்டவர்களுக்கு 5 தினார்களும், வெளிநோயாளர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுபவர்கள் மருந்து கட்டணமாக 10 தினார்களும் செலுத்த வேண்டும். பொது சுகாதார நிலையங்களில் தற்போது 2 தினார்கள் வெளிநோயாளிளுக்கு வசூலிக்கப்படுகிறது கிளினிக்குகளில் வசூலிக்கப்படும் 10 தினார்களுக்கு கூடுதலாக மருந்துக்கான இந்த புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kuwait Moh | Kuwait Health | Kuwait Hospital

Add your comments to

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடல் வழி பாலத்தில் இருந்து குதித்து மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி நடந்துள்ளது

Image : மீட்கப்பட்ட சிறுமி

குவைத்தின் கடல் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி மீட்கப்பட்டார்:

குவைத்தின் பிரபலமான Jaber கடல் பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி ஒருவர் மீட்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. நேற்று இரவு ஒரு சிறுமி பாலத்தின் மேலிருந்து கடலில் குதித்ததை பார்த்த சிலர் உடனடியாக கட்டுபாட்டு அறைக்கு கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த கடலோர காவல்படை, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை சேர்ந்து பத்திரமாக 10 நிமிடத்தில் அந்த குழந்தையை மீட்டனர். முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த குழந்தை எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற கூடுதல் விபரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கியுள்ளதாக இரகசிய பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் இந்த பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்வது தொடர்கதை ஆனதால் பாலத்தின் ரோந்து வாகனங்களின் கண்காணிப்பு கடுமையாக்கப்பட்டு இருந்ததால் தற்கொலை தொடர்பான முயற்சிகள் குறைந்திருந்தது குறி்ப்பிடத்தக்கது.

Kuwait Police | Jaber Bridge | Save Girl

Add your comments to

குவைத் பிஎஸ்சி மற்றும் பாங்க் ஆப் பஹ்ரைன்க்கு இந்தியன் ரிசர்வ் வங்கி ரூ.2.66 கோடி அபராதம் விதித்துள்ளது:

இந்தியன் ரிசர்வ் வங்கி விதித்துள்ள சைபர் பாதுகாப்பு உத்தரவுகளுக்கு இணங்காதது காரணம் என்று தெரியவந்துள்ளது

Image : Reserve Bank of India Head office

குவைத் பிஎஸ்சி மற்றும் பாங்க் ஆப் பஹ்ரைன்க்கு இந்தியன் ரிசர்வ் வங்கி ரூ.2.66 கோடி அபராதம் விதித்துள்ளது:

சைபர் பாதுகாப்பு உத்தரவுகளுக்கு இணங்காததற்காக, பாங்க்-ஆப்-பஹ்ரைன், குவைத் பிஎஸ்சி-க்கு இந்தியாவுக்கான செயல்பாடுகளுக்கு ரூ.2.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியின் தரவுத்தளத்தில் அசாதாரணமான, அங்கீகரிக்கப்படாத உள்புற மற்றும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் கண்டறியும் வழிமுறைகளை செயல்படுத்தத் தவறிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக வெளியாகியுள்ள செய்தியில் உத்தரவுகளுக்கு இணங்கத் தவறியதற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீசுக்கு வங்கி அளித்த பதில் மற்றும் தனிநபர் விசாரணையில் அளிக்கப்பட்ட கூடுதல் வாய்மொழி பதில்களை பரிசீலித்த பிறகு விதிமுறை மீறல் குற்றம் தற்போதும் நிலுவையில் இருப்பதாகவும், அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ரிசர்வ் வங்கி வந்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kuwait BSC | Bahrain Bank | RBI Fine

Add your comments to

Monday, December 19, 2022

குவைத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லும் நபர்களில் இந்த நாட்டவர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது:

முக்கியமாக உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக இவர்கள் தாய்லாந்துக்கு செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Image : தாய்லாந்து

குவைத்தில் இருந்து தாய்லாந்துக்கு செல்லும் நபர்களில் இந்த நாட்டவர்களே அதிகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது:

தாய்லாந்துக்கு இந்த ஆண்டு சென்றுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் குவைத் நாட்டினர் முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக தாய்லாந்து மத்திய வங்கி, தாய்லாந்து சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு தாய்லாந்தில் உள்ள 30 வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மொத்தம் 11.9 பில்லியன் தாய் பாட்(சுமார் $344 மில்லியன்) செலவிடப்பட்டதாகவும் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இங்கு வரும் வெளிநாட்டு நோயாளிகளில் பெரும்பாலானோர் குவைத்தில் இருந்து வந்தவர்கள் என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது.

குவைத்திற்கு அடுத்த படியாக கம்போடியா, மியான்மர், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் குடிமக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் எலும்பு மற்றும் மூட்டு நோய்கள், இதய நோய்கள், இரத்த நாள நோய்கள், பல் நோய்கள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெறுகிறார்கள்.

மேலும் இதய நோய், புற்றுநோய், எலும்பு, மூட்டு, நரம்பு நோய்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்பான சிகிச்சைகள் மருத்துவமனைகளுக்கு அதிக லாபம் தரக்கூடியவை என்று பாங்காக் போஸ்ட் ஹெல்த் சர்வீசஸ் சப்போர்ட் டிபார்ட்மெண்ட்யின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். சோரா வாசிட்சாக் கூறினார்.

Kuwait Citizen | Visit Thailand | Health Issues

Add your comments to

Sunday, December 18, 2022

குவைத்தில் இந்த ஆண்டு 47,000 ற்கும் மேற்பட்ட பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன:

குவைத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

Image : Kuwait Airport

குவைத்தில் இந்த ஆண்டு 47,000 ற்கும் மேற்பட்ட பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன:

குவைத்தில் பத்து மாதங்களில் 47,000க்கும் மேற்பட்ட பயண தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த அறிக்கை நீதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ளன. இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இத்தனை பயணத்தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தினசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வருடத்தின் ஜனவரி முதல் அக்டோபர் இறுதி வரையிலான இடைவெளியில் மொத்தம் 47,512 பயணத்தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டினர் மற்றும் குவைத் குடிமக்களும் அடங்குவார்கள்.

கடந்த 2021-ம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன்(ஜனவரி முதல் அக்டோபர்) ஒப்பிடுகையில் பயணத் தடை விதிக்கப்பட்ட விகிதம் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 30,689 பயணத்தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டிருந்தன. குவைத் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 46 லட்சம் பேர். இதில் 34 லட்சம் பேர் வெளிநாட்டினர் என்பது குறி்ப்பிடத்தக்கது.இதற்கிடையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு குவைத் நிறுத்தி வைத்திருந்த குடும்ப விசா வழங்குவதை மீண்டும் துவங்கியது. முதல் இருபது நாட்களில் குடிவரவுத்துறை நாட்டின் அனைத்து கவர்னரேட்டுகளிலும் சேர்த்து 3000 விசாக்களை வழங்கியதாக அதிகாரப்பூர்வ செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

குவைத் உட்பட உலகை உலுக்கிய கோவிட் காலத்திற்குப் பிறகு வெளிநாட்டினருக்கான குடும்ப விசாக்கள் வழங்க தொடங்கினாலும் அத்தகைய விசாக்களுக்கான புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியதன் ஒரு பகுதியாக அது மீண்டும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையிலே நிறுத்தி வைக்கப்பட்ட இத்தகைய விசாக்கள் நவம்பர் முதல் வழங்குவது மீண்டும் துவங்கியது. அறிக்கைகளின்படி,முதல் கட்டத்தில் இத்தகைய விசாக்கள் முக்கியமாக ஐந்து வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.

குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் இதை பயன்படுத்தி குழந்தைகளை குடும்ப விசாவில் நாட்டிற்கு அழைத்து வரலாம். பெற்றோர் இருவரும் குவைத்தில் இருந்தால் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு குடும்ப விசா வழங்கும் முடிவு நவம்பர் 20 அன்று அறிவிக்கப்பட்டது.இத்தகைய விசாக்கள் இடைநிறுத்தப்பட்டதால், வெளிநாட்டு தம்பதிகள் தங்களுடைய சிறு குழந்தைகளைக் கூட தங்கள் சொந்த நாட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்காக குவைத்திற்கு வரவேண்டிய நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கு விசா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுவரை விசா பெற்றவர்களில் பெரும்பாலானோர் அரபு நாடுகளில் இருந்து குவைத்தில் வேலை செய்கின்றவர்களாக இருந்தாலும், இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் இதை பயன்படுத்தியுள்ளனர்.

Kuwait Airport | Travel Banned | Kuwait Workers

Add your comments to

குவைத் உ‌ள்துறை அமைச்சகம் அதிரடி;ஓட்டுநர்களை கைது செய்ய உத்தரவு:

குவைத் உ‌ள்துறை அமைச்சகம் கடந்த 40 நாட்களில் 1000 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்துள்ளது

Image : Kuwait Police

குவைத் உ‌ள்துறை அமைச்சகம் அதிரடி;ஓட்டுநர்களை கைது செய்ய உத்தரவு:

குவைத்தில் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமத்துடன் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய உள்துறை அமைச்சகம், அத்துறையின் அதிகாரிகளுக்கு டிசம்பர்-18ம் தேதி இன்று சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்படி கைது செய்யப்படும் நபர்களை நாடுகடத்தல் மையத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்று அமைச்சக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஓட்டுநர் உரிமம் கைவசம் வைத்திருக்க குவைத் நடைமுறை படுத்தியுள்ள விதிமுறைகளை நிறைவேற்ற முடியாத வெளிநாட்டினரின் உரிமங்களை தானாக முன்வந்து ரத்து செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன(சம்பளம், பல்கலைக்கழகப் பட்டம் மற்றும் தொழில் துறை போன்ற தகுதிகளை இழந்தவர்கள்) இதன் காரணமாக கடந்த 40 நாட்களில் 1000 ற்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித் அல் சபாவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வெளிநாட்டினரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியது. இதுவரை சுமார் 15,000 வெளிநாட்டவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் முடக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

Kuwait Moi | Kuwait Licence | Driving Licence

Add your comments to

Wednesday, December 14, 2022

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

அமீரகத்தில் இருந்தவாறே அதை மீண்டும் 2 மாதங்களுக்கு புதுப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Image : Uae

அமீரகத்தில் வேலைக்கு செல்கின்ற நபர்கள் கவனத்திற்கு புதிய சட்டம் நடைமுறையில் வந்துள்ளது

இந்த புதிய விதிமுறை அமீரகத்தின் துபாய் தவிர்த்து மற்ற எமிரேட்ஸ்களில் நேற்று(13/12/22) நடைமுறையில் வந்துள்ளது. இதன் காரணமாக அமீரகத்திற்கு 2 மாதகால Validity Visit விசாவில் வேலைக்காக செல்கின்ற நபர்கள், 2 மாதங்கள் முடியும் முன்னர் நிரந்தரமான வேலை கண்டுபிடித்து கம்பெனி விசாவுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கடந்த தினம் வரையில் 2 மாதங்களுக்குள் வேலை கிடைக்கவில்லை என்றாலும், அமீரகத்தை விட்டு வெளியேறாமல் அங்கிருந்து கொண்டே மேலும் 2 மாதங்களுக்கு Visit விசாவை புதுப்பிக்க முடிந்தது பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறை ரத்து ஆகியுள்ளதால் அவர்கள் 2 மாதங்களுக்குள் வேலை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் Exit அடித்து நாட்டை விட்டு வெளியேறி மற்றொரு நாட்டில் தங்கியிருந்து மீண்டும் புதிய விசா அடித்து அமீரகத்திற்கு செல்ல வேண்டியது இருக்கும்.

இது பெரும் பணச்செலவு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் எமிரேட்ஸில் இந்த சட்டம் ரத்து செய்யவில்லை என்றாலும் வரும் நாட்களில் துபாயை மட்டுமே குறிப்பிட்டு விசா பெற முயற்சிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அங்கும் புதிய சட்டம் நடைமுறையில் வரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Visit Visa | Uae Visa | Renewal Stop |

Add your comments to

Tuesday, December 13, 2022

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் பெற விண்ணப்பம் பெறப்படுகிறது

Image : செய்தி பதிவுக்காக மட்டுமே

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 3000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது:

குவைத்தில் கடந்த 20 நாட்களில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 ற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான குடும்ப விசா வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. குடும்ப விசாக்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதன் காரணமாக இப்படிப்பட்ட குழந்தைகள் தங்கள் தாய்நாடுகளில் சிக்கிக்கொண்டனர். இப்படி குவைத்திற்கு வர முடியாமல் தவித்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று அமைச்சக ஆதாரங்களை மேற்கோள் காட்டி குவைத் தினசரி செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் விசா வழங்குவது மீண்டும் துவங்கியது முதல் விசாவுக்காக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் பெரும்பாலும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருந்தாலும் இந்தியா, இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளின் குடிமக்களும் இந்த விசா வழங்குவதற்கான முடிவைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் அமைச்சக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப விசாக்கள் வழங்குவதை கடந்த நவம்பர்-20,2022 முதல் மீண்டும் தொடங்க அமைச்சகம் முடிவு செய்தது.

அதே நேரத்தில் மனைவி,5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இரத்த உறவுகளுக்கான குடும்ப மற்றும் விசிட் விசாக்கள் வழங்குவது மீண்டும் தொடங்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாக வரும் நாட்களில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kuwait Visa | Indian Worker | Family Visa

Add your comments to